14ஆம் ஆண்டு எடிசன் தமிழ் திரை விருது | தினகரன் வாரமஞ்சரி

14ஆம் ஆண்டு எடிசன் தமிழ் திரை விருது

14ஆம் ஆண்டு எடிசன் தமிழ் திரை விருதுகள் சென்னை வர்த்தக மையத்தில் இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் 2020 & 2021ஆம் ஆண்டு வெளியீடு கண்ட தமிழ் திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில் சிறந்த நடிகராக 'மாநாடு' கதாநாயகன் சிலம்பரசனும், சிறந்த நடிகையாக 'ஜெய் பீம்' கதாநாயகி லிஜோமொல் ஜோஸூம் சிறந்த இயக்குனராக வெங்கட் பிரபு, சிறந்த பின்னணி பாடகி சைந்தவிக்கும், சிறந்த பாடலாசிரியருக்கான விருதை சினேகனுக்குப் பதிலாக அவருடைய மனைவி கனிகா பெற்றுக்கொண்டார்.

 சிறந்த துணை நடிகை 'டாக்டர்' படத்திற்காக அர்ச்சனாவும், சிறந்த துணை நடிகருக்கான விருதை தம்பி ராமையாவும், சிறந்த குணசித்திர விருது 'ஜெய்பீம்' மணிகண்டனும் சிறந்த குணச்சித்திர நடிகையாக  'கர்ணன் 'படத்தில் நடித்த கௌரி ஜி கிஷனும், சிறந்த படத்தொகுப்புக்கு  பிரவீன் கே எல்லும் சிறந்த கதைக்கான விருதை ஜெய் பீம் தா சே ஞானவேலும், சிறந்த அறிமுக நடிகையாக லொஸ்லியாவும் சிறந்த வில்லனாக 'ஜெய் பீம்' படத்தில் நடித்த தமிழும், சிறந்த நடன இயக்குனராக சாண்டி மாஸ்டரும் சிறந்த கேமராமேனாக 'மாநாடு' படத்தில் ரிச்சர்ட் மகேஷும், சிறந்த நாயகனாகவும் வில்லனாகவும் எஸ் ஜே சூர்யாவும் சிறந்த கிராமிய பாடகராக அறிவும், பாடகியாக கிடக்குழி மாரியம்மாவும், வளர்ந்து வரும் நடிகையாக திவ்யபாரதியும் இசை அரசர் விருது டி இமானுக்கும் சிறந்த அயல்நாட்டு படத் தயாரிப்பாளராக அருமை சந்திரனும், சிறந்த அறிமுக இசையமைப்பாளராக டிஎம் உதயகுமாரும் விருது வழங்கு கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் தமிழ் திரை உலக முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் அயல்நாட்டு தூதர்கள் பல்வேறு நாட்டு தமிழ் திரை ரசிகர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த நிகழ்வை எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் மற்றும் பன்னாட்டு தொடர்பாளர் தீனதயாளன் மலேசியாவும் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவாக செயல்பட்டனர்.

Comments