Rhoda மின் சைக்கிள்களுக்கு வங்கிச் சேவை வசதிகளை வழங்கும் செலான் வங்கி | தினகரன் வாரமஞ்சரி

Rhoda மின் சைக்கிள்களுக்கு வங்கிச் சேவை வசதிகளை வழங்கும் செலான் வங்கி

பங்காளர்களின் வளர்ச்சியின் “செயற்படுத்தும் பங்காளர்” எனும் தனது உறுதி மொழிக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில், செலான் வங்கி, Rhoda Life பிரைவட் லிமிடெட் உடன் பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் முதலாவது மின் ஸ்மார்ட் சைக்கிள் வடிவமைப்பாளரும், உற்பத்தியாளருமான Rhoda இந்தப் பங்காண்மையினூடாக, உள்நாட்டு புத்தாக்கமான பிரயாணத் தீர்வாக அமைந்துள்ள Rhoda நிறுவனத்துக்கு பல வங்கிச் சேவை வசதிகளையும், வலையமைப்பு வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தொழில்முயற்சியாண்மை மற்றும் சிறிய நடுத்தரளவு வியாபாரங்கள் போன்றவற்றின் விருத்திக்கு முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும் என்பதில் செலான் வங்கி உறுதியாக உள்ளதுடன், இவற்றை ஊக்குவிப்பதனூடாக தேசிய பொருளாதாரத்துக்கு பெருமளவு பங்களிப்பை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

இந்தப் பங்காண்மை தொடர்பில் செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைகள் பிரிவின் உதவி பொது முகாமையாளர் காமிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள் மற்றும் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவித்து வலுவூட்டுவது எமது பிரதான நோக்கமாக அமைந்துள்ளது.

தனியார் வங்கிப் பிரிவில் மூன்றாவது மாபெரும் பங்களிப்பாளராக செலான் அமைந்திருந்ததுடன், கொவிட் தொற்றுப் பரவல் காணப்பட்ட காலப்பகுதியில் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு ஆதரவளித்ததுடன், இந்தத் துறைகளில் எமது திட்டங்களை தொடர்ந்திருந்தோம். Rhoda உடன் கைகோர்ப்பது என்பது எமக்கு முக்கியமான மைல்கல்லாக அமைந்திருப்பதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கான செலான் வங்கியின் உறுதிமொழியை பூர்த்தி செய்து, இந்தப் பயணத்தில் நீங்கள் தனித்திருப்பதில்லை என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது. உங்களின் வங்கி எனும் வகையில், உங்களுடன் செலான் வங்கி இணைந்திருக்கும் என்பதுடன், உங்களின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்த உதவியாக அமைந்திருக்கும். சவால்களுக்குட்படுத்தும் மனநிலையை நாம் வரவேற்பதுடன், உங்கள் வியாபார முயற்சிக்கு பொருத்தமான கட்டமைப்புக்கு ஆதரவளிப்போம்.” என்றார்.

Comments