லேக் ஹவுஸ் நிறுவனத்தின் 'தினகரன்' News Alert சேவை ஆரம்பித்து வைப்பு | தினகரன் வாரமஞ்சரி

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் 'தினகரன்' News Alert சேவை ஆரம்பித்து வைப்பு

வாசகர்களுக்கு உடனடி செய்திகளை வழங்கும் நோக்கத்துடன், லேக்ஹவுஸ் மூன்று மொழிகளிலும் SMS News Alert சேவையை ஆரம்பித்துள்ளது. 

 Reg (space) TKN என டைப் செய்து 77010என்ற எண்ணுக்கு SMS அனுப்புவதன் மூலம், தினகரன் SMS News Alert செய்தி சேவையுடன் இணைய முடியும். அவ்வாறே Reg (space)  DIN என டைப் செய்து 77010க்கு SMS அனுப்புவதன் மூலம் தினமின செய்திகளையும்,  Reg (space) DAILYNEWS என டைப் செய்து 77010க்கு SMS செய்து அனுப்பவதன் மூலம் டெய்லி நியூஸ் SMS செய்திச் சேவையிலும் இணையலாம். 

வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர், லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் அனுஷ பெல்பிட்ட இந்த குறுஞ்செய்தி சேவையை   உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். 

புதிய தலைமுறையினர் புதிய ஊடகங்களில் அதிக நாட்டம் கொண்டுள்ள இன்றைய காலகட்டத்தில், இலங்கை பத்திரிகைகளின் தாய்வீடான லேக்ஹவுஸ் புதிய ஊடக முறைகளுக்கு ஏற்றவாறு தகவல்களை வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென நிறுவன கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தலைவர் தெரிவித்தார்.  மேலும், புதிய தொழில்நுட்ப முறைகளுக்கு ஏற்றவாறு, வாசகர்களுக்கு தகவல் தெரிவிக்கும் ஆதாரங்களை மாற்ற வேண்டும் என்றும், செய்தித்தாளில் இணைந்த வாசகர்கள், தகவல் பரிமாற்றம் செய்வதற்கான பிற புதிய முறைகளுடன் உடனடியாக இணைய வேண்டுமென்றும் அவர் கூறினார்.  புதிய இலத்திரனியல் ஊடகங்களுடன் கைகோர்த்து ஆரம்பிக்கும் இந்த குறுஞ்செய்தி சேவை ஒரு சிறிய செடியைப் போன்றது என்றும், ஆனால் அது விரைவில் பாரிய விருட்சமாக வளரும் என்றும் நம்புவதாகவும் அவர் கூறினார். 

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதிகரித்து வரும் அச்சடிப்புச் செலவு அனைத்து அச்சு நிறுவனங்களுக்கும் தாக்குப் பிடிக்க முடியாததாகி வருவதாகத் தெரிவித்த தலைவர், நாட்டில் அமைதியான சூழலைப் பேண முடிந்தால் எதிர்காலத்தில் இந்நிலைமையை ஓரளவுக்கு தணிக்க முடியும் எனவும் தெரிவித்தார். 

ஆசிரியர் பீட பணிப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிசிர பரணதந்திரி,நிறுவனத்தின் சட்ட அலுவல்கள் பணிப்பாளர் ஜனக ரணதுங்க, நிதி அலுவல்கள் பணிப்பாளர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம், பிரதம ஆசிரியர்கள் உள்ளிட்டோர்  நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Comments