"புதிய வாழ்விற்கான தைரியத்தை வழங்கும் குமாரிக்கா" | தினகரன் வாரமஞ்சரி

"புதிய வாழ்விற்கான தைரியத்தை வழங்கும் குமாரிக்கா"

இலங்கையின் முன்னணி கூந்தல் பராமரிப்பு தரக்குறியீடான குமாரிகா, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இயற்கையான கூந்தல் மூலமான சிகைகளின் தேவையை அதிகரிப்பதனை நோக்கமாகக் கொண்ட பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. ஒவ்வொரு பெண்ணும், அவரவர் தோற்றத்தைப் பொருட்படுத்தாமல் அழகாக இருக்க வேண்டும் எனும் கருத்தியலை பிரசாரம் செய்ய விரும்பும் குமாரிகா, அதன் உரிய தருணத்திலான மற்றுமொரு முயற்சியின் தொடக்கமான, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக, இயற்கையான கூந்தல் மூலமான சிகைகளை அன்பளிப்பாக வழங்கும் 'சொந்துரு திரியவந்தி' (அழகினால் தைரியமாக்கப்படுபவள்) தேசிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. குமாரிகா அதன் பங்குதாரர்களான, இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் அலுத்கம, பெந்தோட்டை மற்றும் கல்கிஸ்ஸை லயன்ஸ் கிளப்புகளுடன், இலங்கை புற்றுநோயியல் நிபுணர்களின் கல்லூரியின் ஒருங்கிணைப்பு ஆதரவுடன் இந்த முயற்சியைத் ஆரம்பித்துள்ளது.

ஒன்லைன் மூலம் இடம்பெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில், சுகாதார அமைச்சின் செயலாளர் - சஞ்சீவ முனசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, இலங்கை புற்றுநோயியல் நிபுணர்களின் கல்லூரியின் செயலாளர் - வைத்தியர் டாக்டர் சச்சினி மலவியாராச்சி, இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் - வைத்தியர் லங்கா ஜயசூரிய திஸாநாயக்க, மாவட்ட முன்னாள் லயன் ஆளுநர் சாந்தனி விதான மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் நிர்வாக பணிப்பாளர்/குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கஸ்தூரி செல்லராஜா வில்சன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அனைத்து நிலைகளிலும் பெண்களின் அழகைக் கொண்டாடும் அதே வேளையில், கீமோதெரபி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள் கோரிக்கை விடுக்குமிடத்து, ஒரு பராமரிப்பு பொதியொன்றை நன்கொடையாக அளிப்பதே இப்பிரசாரத்தின் நோக்கமாகும். கீமோதெரபியின் ஆரம்பத்திலேயே நோயாளிகளுக்கு இந்த பராமரிப்பு பொதி விநியோகிக்கப்படும். பொதுவாக கீமோதெரபி ஆரம்பித்து இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் கூந்தல் உதிர்வதால், தயார் நிலையிலுள்ள சிகையை பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். இந்த பராமரிப்பு பொதியில், அளவுக்கேற்ப சரிசெய்யக்கூடிய பட்டி கொண்டதும் தோள்பட்டை வரை நீளத்துடனான இயற்கையான கூந்தலைக் கொண்ட சிகை, குமாரிகா ஷம்பூ மற்றும் கண்டிஷனர், குமாரிகா ஹெயார் சேரம், குமாரிகா ஹெயார் ஒயில் மற்றும் புற்றுநோயாளிகளுக்கான முக்கியமான வழிகாட்டல்கள் அடங்கிய ஒரு கையேடு ஆகியன அடங்குகின்றன.

Comments