2022 உலக சிறுவர் தினத்தன்று பிறந்த பிள்ளைகளின் பெற்றோருக்கு ரூ.1 மில்லியன் மதிப்பிலான இலவச ஆயுள் காப்புறுதி | தினகரன் வாரமஞ்சரி

2022 உலக சிறுவர் தினத்தன்று பிறந்த பிள்ளைகளின் பெற்றோருக்கு ரூ.1 மில்லியன் மதிப்பிலான இலவச ஆயுள் காப்புறுதி

2022ஒக்டோபர் 1ஆம் திகதி உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஸ்ரீ லங்கா இன்ுரன்ஸ் இன்னுமொரு பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

இதன் மூலம் 2022, ஒக்டோபர் 1ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியில் பிறந்த அனைத்து குழந்தைகளினதும் பெற்றோருக்கும் அக்குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பினை உறுதிப்படுத்திடும் வகையில் ரூ. 1மில்லியன் பெறுமதியிலான இலவச ஆயுள் காப்புறுதியினை SLIC வழங்குகின்றது.

ஒக்டோபர் 1ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளையும் உள்ளடக்கிய வகையில் இந்நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய காப்புறுதியாளர்கள் என்ற வகையில் இந்த பெருநிறுவன சமூக பொறுப்புணர் திட்டத்தினை முன்னெடுப்பதற்கான நோக்கமாக தேசத்தின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களைப் பாதுகாப்பதன் மூலம் தேசத்திற்கான SLIC யின் கடமையை நிறைவேற்றுகிறது.   கொழும்பு கார்சல் மருத்துவமனையில் பெற்றோருக்கு இப்புதிய காப்புறுதித் திட்டத்தினை கையளித்திடும் நிகழ்வின் போது SLIC யின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சந்தன எல். அலுத்கம இத்தனித்துவமான முன்முயற்சி குறித்து கருத்து தெரிவிக்கையில்,  

“இத்தேசத்தின் பிள்ளைகளுக்கு பாதுகாப்பானதோர் எதிர்காலத்தினை உருவாக்கிக் கொடுப்பதே SLICயின் முதன்மையான நோக்கம் ஆகும்.

அதே வேளை பெற்றோருக்கும் எமது ஆதரவினை தொடர்ந்தும் வழங்கிடுவோம். SLIC என்பது மக்களை மையமாகக் கொண்ட காப்புறுதி வழங்குநராகும், மேலும் அது தனது வாக்குறுதியை தொடர்ந்து வழங்கும் ஒரு தேசிய காப்புறுதியாளராக, தேசத்தினதும், அத்தேசத்தின் மக்களினதும் பொறுப்பினை ஏற்கும் வகையில், அனைவருக்கும் காப்புறுதி என்ற தகவலை எடுத்துச் செல்கின்றது. மேலும் எதிர்கால தலைமுறையினரை பாதுகாப்பதில் மற்றும் வளர்ப்பதில் அதிக ஆர்வத்தினைக் கொண்டுள்ளது.  

Comments