கிண்ணம் வென்ற சிஎஸ்கே அணி இறுதிப்போட்டியில் வகுத்த திட்டம்? | தினகரன் வாரமஞ்சரி

கிண்ணம் வென்ற சிஎஸ்கே அணி இறுதிப்போட்டியில் வகுத்த திட்டம்?

உலகின் பிரம்மாண்டமான தொடரான ஐபிஎல் தொடர் கடந்த வெள்ளி அன்று நிறைவுக்கு வந்தது. இறுதிப் போட்டியில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணியின் தலைவர் மோர்கன் பந்து வீசுவதாக பணித்தார்.

காரணம் வருண் மற்றும் நரேன். இந்த தொடர் முழுவதும் கொல்கத்தா அணிக்கு பக்க பலமாக இருந்துள்ளனர். பல போட்டிகளில் தங்கள் மாயாஜால பந்துவீச்சால் அணிக்கு வெற்றியை ஈட்டித்தந்துள்ளனர். இவர்களை வைத்தே இறுதி போட்டியில் சென்னை அணியை நிலைகுலைய வைக்கலாம் என்ற திட்டம் இருந்தது. வழமையாக துபாய் மைதானத்தில் இரவு நேரங்களில் பனி பெய்து வரும். 2 வதாக துடுபெடுத்தாடும் அணிக்கு பனிப் பெய்து பந்து ஈரமானால் துடுப்பெடுத்தாட இலகுவாக இருக்கும் இதனையும் கருத்திற்கொண்டே மோர்கன் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்..

ஆனால் அங்கு நடந்ததோ வேறு. ப்ளசிஸ், ருதுராஜ் ஜோடி சிறந்த ஆரம்பத்தை சென்னை அணிக்காக வழங்கினர். அவர்களது திட்டம் அவர்களது நட்சத்திர பந்துவீச்சாளர்களை அடித்து ஆடுதல் என்ற திட்டமே. வெறுமனே லெக் திசையில் சுத்தாமால் பந்து வரும் திசைக்கு நேராக அவர்களை கையான்டனர். இதானலே விக்கெட்டுகளை எடுப்பதில் சிக்கலாக காணப்பட்டது கொல்கத்தா அணியினருக்கு. ருதுராஜ் ஆட்டமிழந்த பின்பு மைதானம் நுழைந்தார் உத்தப்பா. ஆட்டதின் போக்கயே மாற்றினார். வருண் மற்றும் நரேனின் பந்துகளை துவம்சம் செய்திருந்தார். அவர் ஆடிய அதிரடி ஆட்டம் சென்னை அணியின் ஓட்ட சராசரியை உயர்த்தி வைத்திருந்தது. அதன் பின் களம் இறங்கிய மொய்ன் அலியும் அதிரடியை தொடங்கினார். அலியும் ப்ளீசிஸும் கடைசி பந்து வரை கொண்டு சென்றனர். 192/3 ஓட்டங்களை 20 ஓவர்களில் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி சிறந்த ஆரம்பத்தை ஐயர் மற்றும் கில் ஆகியோர் வழங்கினர். ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் ஐயரின் பிடியை தவற விட்டிருந்தார் தோனி. அதன் பின் அதிரடியாக ஆட ஆரம்பித்தார் ஐயர். ஒரு கட்டத்தில் கொல்கத்தா இலகுவாக 2012 கிண்ணம் வென்ற போட்டி போன்று துரத்தியடித்து விடுமோ என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் இடைவேளையில் தோனி சிறந்த வியூகத்தை வகுத்தார். பிராவோவை பந்து ஓவரை கட்டுப்பாட்டுக்குள் வைத்தார். கில், ஸ்டப் அவுட் போய் விளையாடிக்கொண்டியிருந்தார். உடனே தோனி விக்கெட்டுக்கு அருகாமையில் வந்து நின்ற போது கில்லால் எதுவும் செய்ய இயலவில்லை. அதன் பிரதிபலிப்பு ஐயர் தாக்குரின் பந்தில் ஜடேஜாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் கொல்கத்தா அணியினர் அழகு ராணி போட்டி போன்று அனைவரும் நடையை கட்டினர். நரேனுக்கு போட்டியை திசை திருப்பும் ஆற்றல் உண்டு. ஆனால் அவருக்கு பௌன்சர் பந்து பலயீனமாக இருந்தது. அதனை அறிந்த தோனி மிட் விக்கெட் திசையில் களத்தடுப்பாளரை வைத்து பௌன்சர் வீச பணித்தார் ஹெசல் வூட்டிடம். அந்த திட்டம் பயனளித்தது. கடைசியில் 128/9 ஓட்டங்களுக்குள் சுருண்டனர். இவ்வாறு வியூகம் வகுத்தே சென்னை அணி வெற்றியீட்டி கிண்ணம் வென்றது.

கொல்கத்தாவின் தோல்விக்கான காரணங்கள். அண்ட்ரே ரஸல் மற்றும் திருப்பாதியின் காயங்கள், எதிர்பார்த்த பந்து வீச்சாளர்கள் சோபிக்காமை மற்றும் பலயீனமான மத்திய வரிசை துடுப்பாட்டம் என்றே கூறலாம். 2012 போன்று கிண்ணம் வெல்லும் என்று நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த ஒரேய் விடயம் மத்திய வரிசை துடுப்பாட்டம். 2012 இல் இருந்த மத்திய வரிசை துடுப்பாட்டதை இப்போதுள்ள மத்தியவரிசை துடுப்பாட்டதையும் ஒப்பீட்டு பார்க்க முடியாத ஒன்றாக உள்ளது காரணம் கல்லீஷ், யூசுப் பதான் போன்ற தரமான துடுப்பாட்ட வீரர்கள் அவர்களிடம் இருந்தமை. ஆரம்பித்திலிருந்து தாங்கள் வகுத்த வியூகம் சரியாக இருந்ததால் மாத்திரமே சென்னை அணி வெற்றியீட்டியது. இறுதி போட்டி என்பதால் கொல்கத்தா முதலில் துடுப்பெடுத்தாடி சராசரியான ஓட்டங்களை பெற்றிருந்தாலே போதுமாக இருந்திருக்கும் சென்னை அணியை வெற்றியீட்ட. காரணம் சென்னை முதலில் துடுப்பெடுத்தாடும் போது அவர்களுக்கு இலக்கு கிடையாது சுதந்திரமாக ஓட்டங்களை பெற்றனர். இதை கொல்கத்தா அணி செய்திருந்தால் அவர்களின் பலமான பந்து வீச்சை கொண்டு சென்னையை வீழ்த்தியிருக்கும். இந்த இடத்தில்தான் மோகனை விட தோனி தலைமைத்துவத்தில் ஒரு படி மேலுள்ளார்.

றிழ்ஹான் வாஹித்
(ஏறாவூர்)

Comments