அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஷேன் வோர்ன் காலமானார் | தினகரன் வாரமஞ்சரி

அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஷேன் வோர்ன் காலமானார்

உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அவுஸ்திரேலியா வீரர் ஷேன் வோர்ன் காலமானார். 52வயதான அவர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.  

தாய்லாந்திலுள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோது, ​​​அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து ​​​​அவருடன் தங்கியிருந்த ஊழியர்கள் ஷேன் வார்னின் உயிரைக் காப்பாற்ற தீவிரமாக முயன்றுள்ளனர்.  

எனினும் அது தோல்வியடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  

அவுஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வோர்ன் மாரடைப்பால் திடீரென மரணமடைந்த செய்தி கிரிக்கெட் இரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷேன் வோர்னின் கடைசி ட்விட்டும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வோர்ன் தாய்லாந்தில் இருக்கும் ஒரு வில்லாவில் மயங்கி கிடந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஷேன் வோர்ன் மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் தற்போது ஏதும் தகவல் தெரவிக்கவில்லை. அவர்கள் பெரும் சோகத்தில் இருப்பதாகவும் இதிலிருந்து மீள நேரம் தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.  

ஷேன் வோர்னின் கடைசி ட்விட்டும் கிரிக்கெட் வீரர் மரணம் தொடர்பான பதிவு தான். அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ராட் மார்ஷ் மரணத்துக்கு அவர் இரங்கல் தெரிவித்திருந்தார்.

அவர் தனது பதிவில் ராட் மார் காலமான என்ற செய்தி கேட்டு வருத்தமாக உள்ளது. இளம் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அவர் தான் உத்வேகம். ராட் மார்ஷ் கிரிக்கெட் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். ராட் மார்ஷ் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்திருந்தார்.  

Comments