இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் அடுத்த தலைமுறையை நோக்கிய பாய்ச்சல்! | தினகரன் வாரமஞ்சரி

இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் அடுத்த தலைமுறையை நோக்கிய பாய்ச்சல்!

இந்தியாவில் 5ஜி அலைவரிசை ஏலம் கடந்த ஓகஸ்ட்மாதம் நிறைவடைந்த நிலையில், எதிர்வரும்ஒக்டோபர் 1ஆம் திகதி இந்திய மொபைல்காங்கிரஸ் நிகழ்வில் 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார்பிரதமர் நரேந்திர மோடி.

இந்தியாவில் 5ஜிக்கான ஏலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியிருந்தது. உலகம் முழுவதும் கடந்த 20ஆண்டுகளில் செல்போன் தொழில்நுட்பம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்து இருக்கிறது.

5ஜி அலைவரிசை மூலம் சேவைகள் கிடைத்தால் தற்போது நடைமுறையில் உள்ள 4ஜி அலைவரிசையை விட 10மடங்கு அதிக வேகத்தில் இணையதள வசதிகளும் 3ஜியை விட 30மடங்கு அதிக வேகத்தில் இணைய வசதிகளும் இந்தியாவுக்குக் கிடைக்கும்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் 5ஜி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை 26ஆம் திகதி 5ஜி அலைவரிசைக்கான ஏலம் தொடங்கியது. பார்தி எயார்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் - ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்குபெற்றன.

முதல் நாளன்று 4சுற்றுகளாக 5ஜி ஏலம் நடைபெற்று உள்ளது. இதுவரை நடந்து முடிந்த 40சுற்று ஏலத்தில் 4நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியதாக மத்திய தொழில்நுட்பத்துறை தெரிவித்து இருந்தது. முதல் நாள் ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.45இலட்சம் கோடி வரை நிறுவனங்கள் ஏலம் கேட்டன என்றும் இது கடந்த 2015இல் நடைபெற்ற 4ஜி ஏலத்தின் சாதனையை முறியடித்து இருப்பதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

40ஆவது சுற்று ஏலம் முடிந்துள்ள நிலையில் இதுவரை மொத்தம் ரூ.1,50,173கோடி ஏலத்தை மத்திய அரசு பெற்று இருக்கிறது. இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட 5ஜி சேவையை வழங்குவதாக தெரிவித்து உள்ளது. 22சுற்றுகளிலும் தங்கள் நிறுவனமே ஆதிக்கம் செலுத்தியதாகவும், 700MHz, 800MHz, 1800MHz, 3300MHz and 26GHz ஆகிய பேண்டுகளை தங்கள் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் இதில் 700MHz பேண்ட் சிறப்பான 5ஜி சேவையை வழங்க உதவும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட இருக்கிறது.

எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி நடைபெற இருக்கும் இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5ஜி அலைவரிசையை சேவையை தொடக்கி வைப்பார்.

புதுடெல்லியில் ஒக்டோபர் 1ஆம் திதி முதல் 4ஆம் திகதி வரை மொபைல் காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடக்கி வைக்கிறார்.

5ஜி சேவையைப் பொறுத்தவரையில் அலைவரிசை ஏலம் அனைத்தும் முடிந்து விட்டது. பெரும்பாலான அலைவரிசையை வாங்கிய ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. எயார்டெல் இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும், குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை கொண்டு வருவதற்கு முழுமுயற்சியில் ஜியோ நிறுவனம் களம் இறங்கியுள்ளது. எதிர்வரும் தீபாவளி முதல் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.88ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது. பிரீமியம் 700 MHz அலைவரிசையை ஜியோ ஏலம் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக அதானி குழும நிறுவனம் 212கோடிக்கு ஏலம் எடுத்தது. மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ரூ.1இலட்சம் கோடிக்கு ஏலம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.1.50ஈலட்சம் கோடிக்கு 5G அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அடுத்த இரண்டு-மூன்று ஆண்டுகளில் 5G சேவை எல்லா பகுதிகளிலும் நல்ல கவரேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் சேவை வழங்கும்படி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்களிடமிருந்து முதலாம் ஆண்டு தவணையாக ரூ.13,365கோடி அரசு பெறும் என அவர் தெரிவித்தார்.

700 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையை வாங்கிய ஒரே நிறுவனம் ஜியோ மட்டுமே. ஜியோவின் நேரடி போட்டியாளரான எயார்டெல், 700 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் எதுவும் வாங்கவில்லை. எயார்டெல் 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் 26 ஜிகாஹெர்ட்ஸ் என ரூ.43,084 கோடி ஏலம் எடுத்தது.

Comments