விழிப்போடு இருப்போம்! | Page 3 | தினகரன் வாரமஞ்சரி

விழிப்போடு இருப்போம்!

ஆட்கொல்லிக் கிருமியாம்
‘கொரோனா’வின் வீரியத்தைக்
கு​றைத்திடவே, விழிப்போடு
நாம் இருப்போம்!
வீட்டிலும் நாட்டிலும்
சுத்தத்தினைப் பேணி
வேண்டும் முறைகளினைக்
கடைப் பிடிப்போம்!

எங்கும் சமூக
இடைவெளியைப் பேணிடுவோம்!
எல்லோரும் முகங்களில்
கவசங்கள் அணிந்திடுவோம்!
எங்களது கைகளினைத்
தயிலத்தால் கழுவிடுவோம்!
எப்போதும் வைத்தியரின்
ஆலோசனைகள் பெறுவோம்!

பயன் அற்ற
கூட்டங்களைத் தவிர்ப்போம்!
பயணங்கள் செய்வதையும்
குறைத்தே கொள்வோம்!
உயர்வான உயிர்களைக்
காப்பதற்கே, என்றும்
ஒற்றுமையாய் இருந்து
செயல் புரிவோம்!

கலாபூஷணம்

Comments