சிரித்திரன் சிவஞானசுந்தரம் நவாலியூர் நடேசன் | தினகரன் வாரமஞ்சரி

சிரித்திரன் சிவஞானசுந்தரம் நவாலியூர் நடேசன்

ஈழத்திலே தமிழர் மத்தியில், கேலிச் சித்திரத்தில் புதிய சகாப்தத்தை உருவாக்கியவர், சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்கள். அவரது கேலிச் சித்திரக் காலம் அழியாப் புகழ்பெற்ற வரலாறு.
கட்டடக் கலை படிப்பதற்காக அவரை இந்தியாவிலுள்ள பம்பாய்க்குப் பெற்றோர் அனுப்பினார்கள். ஆனால், இளமையிலிருந்தே அவர் ஓவியத்தில் ஆர்வ முடையவராக இருந்தபடியால், அக்கல்வியை அவர் தொடரவில்லை.
கேலிச் சித்திரங்களை வரையத் தொடங்கினார். அவரது கேலிச் சித்திரம் முதன்முதலாக, இந்தியாவில் ஏராளமான வாசகர்களைக்கொண்ட - ‘பிளித்ஸ்’ என்னும் ஆங்கிலச் சஞ்சிகையில் வெளியானது. அதன்மூலம் அச்சஞ்சிகையின் ஆசிரியர் கரஞ்சியாவுடன், அவருக்கு நட்பு ஏற்பட்டது. கரஞ்சியா ஆசிரியராக இருந்த ‘கொஞ்ச்’ சஞ்சிகையிலும், அவரது கேலிச் சித்திரங்கள் வெளிவந்தன.
அதன்மூலம் பிரபல கேலிச் சித்திரக் கலைஞர்களான போல் தாக்கரே, ஆர். கே. லக்ஷ்மணன் ஆகியோருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவர்களுடன் கேலிச் சித்திரம் பற்றி உரையாடிaவந்தார். அந்நிலையில் அவர் இலங்கை வந்து, அரசாங்க கட்டடத் திணைக்களத்தில் படவரைஞராகப் பணிபுரிந்து வந்தார். அக்காலத்தில் ‘தினகரன்’ பத்திரிகையில் ஆசிரியராக இருந்த க. கைலாசபதியின் அழைப்பை ஏற்று அப்பத்திரிகையில், சுந்தர் என்ற பெயரில் ‘சவாரித்தம்பர்’ தொடரை வரையத் தொடங்கினார். சவாரித்தம்பர் வாசகரிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. சவாரித்தம்பருக் காகத் தினகரனை வாங்கியோரையும், அதில் வந்த நகைச்சுவைகளைச் சொல்லிச் சிரித்தவர்களையும் நான் அறிவேன்!
சவாரித்தம்பர் என்பவர், அக்காலத்தில் கரவெட்டியில் வாழ்ந்துகொண்டிருந்த - முற்போக்கு எண்ணங்கொண்ட ஒரு பெரியார். வண்டில் சவாரி செய்வதில் வல்லவர். சுந்தர் அவரோடு நன்கு பழகியவராக இருந்தார். அந்தக் கேலிச் சித்திரங்களை அவர் படித்து, “சிவஞானத்தின்ரை வேலை நல்லாயிருக்கு” என்று சொல்லிச் சிரித்து மகிழ்ந்தவராம். சவாரித்தம்பர் பாத்திரத்தைக் கண்ணியமான பாத்திரமாகவே சுந்தர் படைத்துவந்தார். அதில் வந்த சின்னக்குட்டி, பாறி மாமி பாத்திரங்களும் கரவெட்டியில் வாழ்ந்தவர்களே.
தினகரன் வார மஞ்சரியில் ‘மைனர் மச்சான்’, ‘சித்திர கானம்’ ஆகிய கேலிச் சித்திரத் தொடர்களையும் சுந்தர் வரைந்தார். அவரது படைப்புகள் மண்வாசனை உள்ளவையாகவும், பாத்திரங்கள் யாழ்ப்பாணப் பேச்சுவழக்குத் தமிழைச் சுவை யாகப் பேசுபவையாகவும் விளங்கின.
தமிழ் மக்களிடையேயுள்ள சாதி வேறுபாடுகள் போன்ற பிற்போக்குத் தனங்கள், மூடக்கொள்கைகளை நகைச்சுவையாக – ஆனால், உறைப்பாகக் குத்திக்காட்டி நையாண்டிசெய்தார். எவரையும் திட்டவோ, யாரும் மனம் புண்படும்படியோ அவர் செய்யவில்லை.
கைலாசபதி தினகரனிலிருந்து விலகியதும் சுந்தர் வீரகேசரியில் சேர்ந்தார். அவரின் பாத்திரங்களும் தங்கள் ‘பிரம்மா’வுடன் சென்றன.
கேலிச் சித்திரத்திற்கும் நகைச்சுவைக்கும் ஒரு சஞ்சிகையைத் தொடங்கவேண்டும் என்ற தனது நீண்டநாள் கனவை நனவாக்கும் முயற்சியில், கொழும்பில் இருக்கும்போதே 1964 ஆம் ஆண்டு, ‘சிரித்திரன்’ திங்கள் இதழைச் சுந்தர் வெளியிட்டார்.
சில மாதங்களின் பின் அவர் குடும்பத்தோடு யாழ்ப்பாணம் வந்து, தனது இல்லத்தில் ஒரு பகுதியில் அச்சகத்தை அமைத்து, சிரித்திரனை வெளியிடத் தொடங்கினார். சுந்தர், மனைவி, பிள்ளைகள் அனைவரும் சிரித்திரனுக்காக உழைத்தார்கள். சுந்தர் சிறந்த சங்கீத இரசிகர். இன்னொரு இரசிகர் வந்துவிட்டால் தெட்சணா மூர்த்தி, தியாகராஜ பாகவதர் முதலியோர் பற்றி சுவைத்துப் பேசிக்கொண்டே இருப்பார். சில நேரங்களில் அவரது மனைவியார் சிரித்திரனுக்குச் செய்ய வேண்டிய அலுவல்களை நினைப்பூட்டி, தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பார். மனைவியார் சிரித்திரனின் நிர்வாகியாக ஊக்கமாக உழைத்தார்.
சிரித்திரன் நகைச்சுவைகளை மாத்திரம் தாங்கி வரவில்லை. தரமான சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கியக் கட்டுரைகள், கலைஞர்களுடனான நேர்காணல்கள் முதலிய ஆக்கங்களும் அதனை அழகுசெய்தன. நேர்காணல்கள் அடங்கிய நூலினை, ‘தேன்பொழுது’ என்ற பெயரில், சுந்தர் வெளியிட்டார். வேறு ஆக்கங்களும் நூலாக வெளியிடப்பட்டுள்ளன.
புதுப்புதுத் தலைப்புகளில் சிந்தனைத் துளிகளைத் தீட்டி, சிரித்திரனை அவர் அழகுசெய்தார். ‘பல்லி சொன்னதும் செய்தி சொன்னதும்’, ‘சிரித்திரன் டயறி’, ‘ஜோக்கிறட்டீஸ்’ முதலியவற்றை உதாரணங்களாகக் கூறலாம். ‘மிஸ்டர் அன் மிஸ்ஸிஸ் டாமோடிறன்’, ‘மகுடி பதில்கள்’ என்பன சிரித்திரனுக்குரிய சிறப்பு முத்திரைகள்.
அவர் சுகயீனமுற்று – ஒரு கையும் ஒரு காலும் வழங்க முடியாத நிலையிலும் எழுதினார்; கேலிச் சித்திரங்கள் வரைந்தார்.
யாழ்ப்பாணம் வந்த ‘இதயம் பேசுகிறது’ சஞ்சிகை ஆசிரியரான மணியன், அவரது இல்லம் சென்று அவருடன் உரையாடியதுடன், பழைய சிரித்திரன் பிரதிகளை வாங்கிச் சென்று – அவற்றிலுள்ள நகைச்சுவைகளை ‘இலங்கைச் சிரிப்பு’ என்று குறிப்பிட்டு, தனது சஞ்சிகையில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்..
‘சிரித்திரன் சித்திரக் கொத்து’ என்ற கேலிச் சித்திரத் தொகுதியை, 1989 ஆம் ஆண்டு சுந்தர் வெளியிட்டார். ‘மகுடி பதில்கள்’, ‘கார்ட்டூன் உலகில் நான்’ ஆகிய நூல்களும் வெளிவந்துள்ளன. ஒருநாள் அவர் என்னுடன் உரையாடிக் கொண்டிருக்கையில், இப்படிச் சொன்னார் : “எனது வாழ்க்கை எனக்கு வெற்றியா தோல்வியா என்று ஒருவர் என்னைக் கேட்டால், (22ம் பக்கம் பார்க்க)

 

 

 

Comments