நோன்பின் மகத்துவம் | தினகரன் வாரமஞ்சரி

நோன்பின் மகத்துவம்

சங்கை மிகு றமழானின் சான்றோர் சொல்லும் அருள்வாக்கு
நோன்பு தனை நோற்றிடுவோம் பாவம் தனை தவிர்த்திடுவோம்
சங்கை மிகு றமழானின் சரித்திரங்கள் பல நூறு
சங்கடமின்றி மாந்தருக்கு நீயும் அதைக் கூறு

நோன்பின் மகத்துவம் கற்றுக்கொள்ளப்பட்ட பள்ளி நாட்கள்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும் அன்றைய நாட்கள்
ஏழை பசியை, புசிக்கும் பணக்காரர் உணர்ந்திடுவர் நோன்பதிலே
கையேந்தி கேட்கும் துஆ ஏற்கப்படும் இறைவனிடத்தில் நோன்பதிலே

பாவம் போக்கும் மாதமாய் பறைசாற்றப்படும் றமழானே
சைத்தானின் தீங்கைவிட்டும் பாதுகாவல் தருவதும் நீதானே
தர்மங்களை தழைத்தோங்க வைக்கும் றமழானே
முப்பது நாள்முழுவதும் நோன்பாளியாய் எமை மாற்றுவதும் நீதானே

நோன்பின் மகத்துவம் கூறும் ‘ஸஹர்’ நேரம்
அது என்றும் போக்கவைக்கும் உந்தன் மனப்பாரம்
உரிய வேளை தனில் உண்டு முடித்தல் ேநான்பின் சரத்து
உலகமே சொல்லும் நோன்பின் புகழ் உன்னைப் பார்த்து

‘ஸஹர்’ முதல் ‘மஹ்ரிப்’ வரை உண்ணாதிருத்தல் நோன்பின் யதார்த்தம்
அந்தப் பட்டினி உனக்கு உணர்த்தும் நோன்பின் அர்த்தம்
நோன்பைக் கௌரவப்படுத்தும் தறாவீஹ் தொழுகை
அதை விட்டுவிட்டால் உனக்கே வரும் அழுகை

‘லைலத்துல் கத்ர்’ எனும் ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு
நோன்பின் புனிதம் பேணப்படும் அந்த இரவு
எத்தனையோ உள்ளங்கள் தவங்கிடக்கும் அந்த இரவு
பொறுமையுடன் கேட்போருக்கு பொக்கிஷங்கள் வாரி வழங்கப்படும் இரவு

றுசைனா ஹாசீம்,
அக்கரைப்பற்று-02

Comments