வலியிழந்தவள்! | தினகரன் வாரமஞ்சரி

வலியிழந்தவள்!

அடி, மிதி, உதை
அஞ்ச மாட்டேன்
வெகுநேரமாகி விட்டது
போதையில் நீ இருக்கையில்
ரசத்தில் துளி விஷம்
சேர்த்து விடவோ,
ரயிலேறி நீதொட முடியாதூரம்
போய் விடவோ,
ஆனால்
நீ எனக்குச் செய்யும்
சித்திரவதைகள்
உதவியாயிருக்கும்
எனக்கும் என் பிள்ளைக்கும்
திரும்ப நீ தேவையென்ற உணர்வு
தோன்ற விடாமலிருக்க!

கல்லொளுவை, பாரிஸ்

Comments