ஹஜ்ஜூப் பெருநாள் | தினகரன் வாரமஞ்சரி

ஹஜ்ஜூப் பெருநாள்

தியாகத்தின் திருநாள்
பூலோகத்தின் புகழ்நாள்
தாரணியில் தடம்பதிக்கும் நாள்
நாம் கொண்டாடும் ஹஜ்ஜூப் பெருநாள்

இப்றாகீம் நபியின் தியாகம்
நினைக்கையில் இதயம் கலங்கும்
இஸ்மாயின் நபியின் உயிரைக் காக்கும்
அல்லாஹ்வின் சித்தப்படி பலியிடப்பட்ட ஆடு வர்க்கம்

அன்னை ஹாஜராவின் பிள்ளை பாசத்தையும்
நேசத்தையும் அரவணைத்து அருளப்பட்ட “ஸம் ஸம்” நிரூற்று
தியாகத்தின் சரீதையை நினைவூட்ட
குவலயம் குதூகலித்து கொண்டாடும் பெருநாள் அதைப்போற்று

தரணியெங்கும் தக்பீர் முழக்கம்
ஹஜ்ஜூப் பெருநாளின் சிறப்பும் அதிலே அடக்கம்
தக்பீர் முழக்கத்துடன் நிறைவேறும் பெருநாள் தொழுகை
தனவந்தர், ஏழை என்ற பாகுபாடின்றி “ஸலாம்” கூறும் சகோதரத்துவம்

புத்தாடை கூறும் புது வசந்தம்
பெருநாளின் சிறப்போ தரும் இனிய சுகந்தம்
அறுசுவையுடன் ஜொலிக்கும் விருந்தோம்பல்
அண்டை, அயலவர், உற்றார், உறவினர் அதில் நலன் பேணல்

ஹஜ்ஜின் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் ஹஜ் யாத்திரை
ஹஜ்ஜாஜிகளின் பிரார்த்தனையோ சுப வாழ்த்துரை
சகோதரத்துவம் நிலைநாட்டப்படும் ஹஜ்ஜூப் பெருநாள்
சமயோசிதமாய் பிணக்கின்றி எமை வாழச்சொல்லும் நன்நாள்

றுசைனா ஹாசீம்
அக்கரைப்பற்று-02.

Comments