சுயநலவாதிகள் | தினகரன் வாரமஞ்சரி

சுயநலவாதிகள்

தன் வளவுக் குப்பையைதந்திரமாய் 
பக்கத்து வளவுக்குள் போடுகின்ற  
பாதகர்கள் இருக்கின்றார்கள் 
தாம் மட்டும் வாழ வேண்டும் 
அயலவர் எப்படிப் போனாலும் 
நமக்கென்ன என்பதே 
அவர்களின் சித்தாந்தம் 
கழிவுக் குப்பைகள் மட்டுமல்ல  
அவரவர் மனதில் 
குடி கொண்டிருக்கும் 
பொய், களவு, பொறாமை,  
வஞ்சம் சுயநலம் என்பன மறைந்து 
எப்போது எங்கள் உலகம் சீராகும்? 
மனித மனம் கோயில் என்பது 
எல்லோருக்கும் தெரியும்  
தெரிந்தும்மனதை குப்பையாய்  
வைத்திருந்துதெய்வங்கள் விரும்பாத செயல்களை 
திருடர்கள் போல் செய்கின்றார்கள் 
திமிர் பிடித்தவர்களே 
நீங்கள் நல்ல மனிதர்களாக 
மாறுங்கள் நம்  
நாடு செழிக்கட்டும்

பாண்டிருப்பு அகரம் செ.துஜியந்தன்  

Comments