பாரம்பரியம் நிகழ்ச்சியில் இசைக்கோ நூர்தீன் நினைவுகள் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

பாரம்பரியம் நிகழ்ச்சியில் இசைக்கோ நூர்தீன் நினைவுகள்

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகும் பாரம்பரியம் நிகழ்ச்சியில் பிரபல பாடகர், இசையமைப்பாளர் மர்ஹூம் இசைக்கோர் நூர்தீன் நினைவுகள் பதிவாகின்றன.

இவர், இலங்கை வானொலி முஸ்லிம் சேவையிலும், தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் நூற்றுக்கணக்கான, பாடல்களை, குறிப்பாக இஸ்லாமிய கீதங்கள் பாடி இசையுலகின் அனைத்து ரசிகர்கள், மத்தியிலும் புகழினைத் தேடிக்கொண்ட ஒருவராக திகழ்ந்தார். தனக்கு ஆரம்பநாட்களில் களம் தந்து இசையுலகில் அடையாளப்படுத்திய, இலங்கை வானொலி முஸ்லிம் சேவையை, நன்றியுணர்வோடு அடிக்கடி இவர் பாராட்டி மகிழ்வதுண்டு.

பாடகர், பாடலாசிரியர் இசைக்கோ நூர்தீன் அவர்களின் நினைவுகளை, மூத்த ஊடகவியலாளர், கவிஞர் கலைவாதிகலீல், மூத்த பாடலாசிரியர், பாடகர் கலாபூஷணம முஹம்மத் அலி ஆகியோர் நேயர்களோடு பரிமாறிக்கொள்கிறார்கள்.நிகழ்ச்சியினை முஸ்லிம் சேவைப்பணிப்பாளர்,எம்.ஜே.பாத்திமா ரினூஸியா தயாரித்தளிக்க, எம்.எஸ்.எம். ஜின்னா தொகுத்தளிக்கிறார்.

Comments