வகுப்பறை ஒழுக்கம் | தினகரன் வாரமஞ்சரி

வகுப்பறை ஒழுக்கம்

வகுப்பறை என்பது மாணவர்களாகிய நாம் கற்கும் இடமாகும். அதனால் வகுப்பறையில் ஒழுக்கத்தையும் அமைதியையும் கடைப்பிடிக்க வேண்டியது மிக முக்கியமானதாகும். எமது வகுப்பறையை நாம் மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தினமும் வகுப்பறையை கூட்டித் துப்பரவு செய்ய வேண்டும். வகுப்பறையில் அழகான படங்களை தொங்க விடப்பட வேண்டும். அத்துடன் வகுப்பறை மேசைகளில் ஒழுங்காக வைத்திருக்க வேண்டும்.

மேசைகளில் கீறுவது, சேதம் விளைவிப்பது தவறான செயல்களாகும். வகுப்பறைக்கு ஆசிரியர் வரும்போது நாம் எழுந்து வணக்கம் கூற வேண்டும். பின்னர் ஆசிரியர் கற்பிக்கும் பாடங்களை மிகவும் கவனமாக செவிமடுத்து விளங்கிக்கொள்ள வேண்டும்.  
கற்கும்போது குழப்படிகளையோ சேட்டைகளையோ செய்யக்கூடாது. அவ்வாறு குழப்படி பண்ணுவதால் சக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக படிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் சண்டைபோட்டு மோதிக்கொள்ளக்கூடாது. ஆசிரியர்கள் முன்னால் மரியாதையுடனும் ஒழுக்கத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். வகுப்பாசிரியர், வகுப்பு மாணவர் தலைவருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியது எமது கடமையாகும்.  
வகுப்பறை ஒழுக்கங்களைப் பேணி நன்றாகப் படித்து நல்ல மாணவர்களாக இருந்து பாடசாலையின் பெயர் சிறந்து விளங்க உறுதிபூணுவோம்!  
நுஹா ரிஸ்வான்  
தரம் 05, தாருல் உலும் மகா வித்தியாலயம்,  
மாத்தறை.   

Comments