வளர்ந்து வரும் இஸ்லாமிய நிதி நிறுவனமாக தங்க விருதினை வென்ற ஒரியன்ட் பைனான்ஸ் | தினகரன் வாரமஞ்சரி

வளர்ந்து வரும் இஸ்லாமிய நிதி நிறுவனமாக தங்க விருதினை வென்ற ஒரியன்ட் பைனான்ஸ்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான ஒரியன்ட் பைனான்ஸ், மதிப்பிற்குரிய “இலங்கை இஸ்லாமிய வங்கி மற்றும் நிதித் தொழில் விருதுகளில்” தனது சாதனைகளை பெருமையுடன் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.

இந் நிகழ்வில் ஒரியன்ட் மாற்று நிதி வணிகப் பிரிவு (AFBU) இரண்டு மதிப்புமிக்க விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டுள்ளது. “ஆண்டின் வளர்ந்து வரும் இஸ்லாமிய நிதி நிறுவனத்திற்கான தங்க விருது, மற்றும் ஆண்டின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பிரச்சாரத்திற்கான மெரிட் விருது”.

இந்த பாராட்டுக்கள் இஸ்லாமிய நிதித்துறையில் சிறந்து விளங்குவதற்கும் புத்தாக்கத்திற்கும் AFBU காண்பிக்கும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன.

ஒரியன்ட் பைனான்ஸ் மாற்று நிதி வணிகப் பிரிவு, இந்த ஆண்டின் வளர்ந்து வரும் இஸ்லாமிய நிதி நிறுவனமாக அங்கீகாரம் பெற்றது, அதன் பயணத்தில் ஒரு மைல்க்கல்லாக கருதப்படுகிறது.

இஸ்லாமிய நிதிக் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் அதன் அர்ப்பணிப்பு, வெற்றிகரமான வணிக விரிவாக்கம், அதன் மக்கள் மற்றும் குழுவில் மூலோபாய முதலீடுகள், சிறந்த வாடிக்கையாளர் சேவைக்கான அர்ப்பணிப்பு, நெறிமுறை மற்றும் ஷரியா-இணக்க நடைமுறைகளை உறுதி செய்தல், அதன் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் விரிவான வரிசை என்பன இவ்வெற்றிக்கான முக்கிய காரணிகளாகும்.

இம்முயற்சிகள் ஒரியன்ட் மாற்று நிதி வணிகப் பிரிவின் வெற்றிக்கு கை கொடுத்தது என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. AFBU இஜாரா லீசிங் வணிகம் LKR 600 மில்லியனுக்கு அதிக தொகையையும், Wakalah தவணை முதலீடுகள் LKR 500 மில்லியனுக்கு அதிகமான தொகையையும் இரண்டாண்டுகளுக்குள் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments