BMICH மதிப்புமிக்க பசுமை சான்றிதழ் வழங்கி கெளரவிப்பு | தினகரன் வாரமஞ்சரி

BMICH மதிப்புமிக்க பசுமை சான்றிதழ் வழங்கி கெளரவிப்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மையத்திற்கு மதிப்பு மிக்க 'ISO 14064-1:2006' சுற்றாடல் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

'ISO 14064-1:2006' பசுமைச் சான்றிதழானது நிறுவன மட்டத்தில் பச்சைவீட்டு வாயு வெளியீடு மற்றும் அகற்றல் என்பவற்றுக்கான அறிக்கையிடுதல், அளவீட்டுக்கான அடிப்படை கொள்கை மற்றும் தேவையைக் குறிப்பிடுகிறது. இது நிறுவனத்தின் பச்சைவீட்டு வாயு தொடர்பான வடிவமைப்பு, அபிவிருத்தி, முகாமைத்துவம், அறிக்கையிடுதல் மற்றும் உறுதிப்படுத்தல் போன்ற விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது.

இந்த விருதானது மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கண்காணிப்பின் கீழ் உள்ள அரச தனியார் பங்களிப்பு நிறுவனமான இலங்கை காலநிலை நிதியத்தால் வழங்கப்படுகிறது. இதற்கான தரமானது சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட சர்வதேச தரநிர்ணய நிறுவனத்தினால் (International Organisation for Standardisation (ISO) 2006ஆம் ஆண்டு ஜெனீவாவில் தயாரிக்கப்பட்டது. சர்வதேச தரநிர்ணய நிறுவனமானது (ISO) 162 நாடுகளின் தரநிர்ணய நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட சுயாதீன அரசசார்பற்ற சர்வதேச அமைப்பாகும். இது உலக சவால்களுக்கு தீர்வுகளை வழங்கவும், புத்தாக்கங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும், உறுப்பினர்கள் ஊடாக ISO அறிவுப் பகிர்வுக்காக நிபுணர்களை ஒன்றுதிரட்டுவது மற்றும் தன்னார்வ அபிவிருத்தியை முன்னெடுப்பது, புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்ட மற்றும் சர்வதேச தரம் தொடர்பான சந்தையை உறுதிப்படுத்தி வருகிறது.

BMICH ஆனது குறிப்பிட்ட காலப் பகுதியில் தனது கண்டிப்பான மற்றும் அவதானமான பச்சைவீட்டு வாயு முகாமைத்துவத்தின் மூலம் இந்த முக்கியமான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அது மாத்திரமன்றி, நேரடியான அல்லது மறைமுகமான வளங்கள் ஊடாக 1472.85 தொன் காபனீரொட்சைட்டை மாத்திரமே வெளியிட்டுள்ளது.

மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளின் தேவைக்காக ஆசியாவில் அமைக்கப்பட்ட BMICH, தனித்துவம் மிக்க கட்டடக்கலை மற்றும் பரந்துவிரிந்த தோட்டங்களால் பிரபல்யம் மிக்க சின்னமாகத் திகழ்கிறது. 2016ஆம் ஆண்டு ஜெனீவாவில் Gold Century International Quality ERA விருதை வென்றுள்ளது. அது மாத்திரமன்றி கடந்த வருடம் The South Asian Travel விருதுவிழாவில் தெற்காசியாவில் முன்னணியான சந்திப்புக்கள் மற்றும் மாநாடுகளை நடத்தும் இடம் என்ற விருதையும் பெற்றிருந்தது. 

Comments