புதிய அரசியலமைப்பு ஏன் அவசியம்? | தினகரன் வாரமஞ்சரி

புதிய அரசியலமைப்பு ஏன் அவசியம்?

பேராசிரியர் நவரத்ன பண்டார

 

புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் சில பகுதிகள் தற்போது எழுதப்பட்டுள்ளன. மேலும் பல பகுதிகள் எழுதப்பட்டு வருகின்றன. கருத்து வேற்றுமைகளுக்கு உரித்தான விடயங்கள்பற்றி இணக்கப்பாட்டைக் காண்பதற்கு பிரதமர் தலைமையில் செயற்படும் அரசியற் கட்சித் தலைவர்;களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை, அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தல், தேர்தல் முறைமை, ஒற்றையாட்சி முறைமை ஆகிய விடயங்கள் இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஏனைய விடயங்களாகும். அதுபற்றிய கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்புதிய அரசியலமைப்பிற்கான முழுமையான கலந்துரையாடல்கள் பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன. வழிகாட்டிக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு, அரசியலமைப்பைத் தயாரிக்கும் சபையிடம் ஒப்படைக்கப்பட வேண்டியமையால் அவை இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

அரசியலமைப்பைத் தயாரிக்கும் சபையின் உபகுழுக்கள் தமது அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. அவ் அறிக்கைகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அரசியலமைப்பில் உள்வாங்கக் கூடிய அடிப்படை கோட்பாடுகள் பற்றிய விடயங்கள் மாத்திரமே அவற்றில் உள்ளடக்கப்பட்ட விடயங்களாகும்;. எஞ்சியவை பாராளுமன்ற சட்ட மற்றும் நிருவாக ஏற்பாடுகளுக்கமையவே சமர்ப்பிக்கப்பட வேண்டும். உதாரணமாக மாகாணசபை முறைமைகளையும், அரச சேவையையும் பற்றிய பிரேரணைகளைக் கருத்திற்கொள்ளும்போது அவைபற்றி தனியான சட்டங்கள் அவசியமென்பது தோன்றும்.

அதேசமயம் அரசியற்துறையில் வேறு வகையான கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருகின்றன. அதன்மூலம் புதிய அரசியலமைப்பு அவசியமில்லையென்று கூறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசியலமைப்பைத் திருத்தி முன்னகர வேண்டுமென்பதே அதன் குறிக்கோளாகும். நிறைவேறு ஜனாதிபதி முறைமை, தேர்தல் முறைமை ஆகிய மாற்றப்பட வேண்டிய விடயங்கள் மாற்றியமைப்பது போதுமானது. எனவே, தற்போதைய அரசியலமைப்பிற்குப் பதிலாக புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டுவதிலேயே அவர்கள் அதிக நேரத்தை விரயமாக்குகின்றனர்.

தற்போதைய அரசியலமைப்பு 1978 இல் அங்கீகரிக்கப்பட்டது. அன்றிலிருந்து 38 ஆண்டுகள் கடந்துள்ளன. அன்று அந்த அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கு மக்களுக்கு அவசியம் இருக்கவில்லை. ஆட்சியாளர்கள் தாம் பெற்ற அதிகாரத்தைத் தொடர்ந்தும் உறுதிப்படுத்துவதற்கும், கிடைத்த அதிகாரத்தைப் பேணிப்பாதுகாப்பதும் அவர்களின் தேவையாக இருந்தது. அன்று தமக்கு அவசியமான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை இலகுபடுத்துவதற்கே 1978 அரசியலமைப்பு தேவைப்பட்டது. எனவே, இந்த அரசியலமைப்பு காலம்கடந்தது மாத்திரமல்லாமல், எமக்குப் பொருத்தமில்லாததாகவும் அமைந்தது. அதுமாத்திரமல்லாமல் நாட்டு மக்களைப்பற்றி சிந்தித்து அது உருவாக்கப்படவுமில்லை.

1972 அரசியலமைப்பிற்கான திருத்தம்

இன்றைய அரசியலமைப்பு 1978 செப்தெம்பர் 30 ஆந் திகதி அங்கீகரிக்கப்பட்டது. இதன்போது நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமை ஸ்;;தாபிக்கப்பட்டதோடு, அப்பதவிக்கு ஒரு நபர் சத்தியப்பிரமாணமும் செய்திருந்தார். இந்நிகழ்வு 1978 பெப்ருவரி 04 ஆந் திகதி இடம்பெற்றது. 1972 ஆம் அரசியலமைப்பின்கீழ் இது நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதிப் பதவி 1972 அரசியலமைப்பைப் பயன்படுத்தியே தயாரிக்கப்பட்டது. 1972 அரசியலமைப்பில் அதிகாரம் ஒழுங்கமைக்கப்பட்டு இருந்த முறைமைக்கு அமைய ஜனாதிபதிப் பதவியின் அதிகாரங்கள் அரசியலமைப்பில் எழுதப்பட்டிருந்த முறைமைக்கமைய, ஒரு திருத்தத்தின்மூலம் அதிகாரம் நிறைவேற்று ஜனாதிபதியிடம் கையளிப்பது திரு.ஜயவர்த்தனவிற்கு இலகுவாக அமைந்தது. 'பிரதமரால் ஜனாதிபதி நியமனம் செய்யப்படுவார்' என்ற உறுப்புரையை நீக்குவதை மாத்திரமே அவர் செய்தார். பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையைக் கொண்டுவந்து ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்குவதற்கு பிரதமருக்கு அதிகாரம் வழங்கப்படும் உறுப்புரையும் நீக்கப்பட்டது.

அதேசமயம்' பிரதமரின் ஆலோசனைக்கமைய செயற்படுவது அவசியம்' என்று ஜனாதிபதி அதிகாரத்திற்கு இருந்த தடைகள் நீக்கப்பட்டன. இதன்மூலம் இயல்பாகவே ஜனாதிபதி பதவி உயர்ந்த அந்தஸ்தில் நிறுவப்பட்டது. பெயரளவிலான ஜனாதிபதி பூரண அதிகாரம்கொண்ட நிறைவேற்றுனராக நியமிக்கப்பட்டார்.

ஆறு மணித்தியாலங்களுக்கும் குறைந்த நேரத்தில் இது அமுலாக்கப்பட்டது.

இவை அனைத்தும் எழுதப்பட்ட பின்னர் 'அச்சந்தர்ப்பத்தில் பிரதமர் பதவி வகித்த பாராளுமன்ற உறுப்பினர் 1978 பெப்ருவரி 04 ஆந் திகதி ஜனாதிபதியாக நியமனம் பெறுவாரென அரசியலமைப்பிற்கான திருத்தத்தில் குறிப்பிடப்பட்டது. இத்திருத்தம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் மத்தியில் கலந்துரையாடலுக்கு எடுக்கப்படவில்லை. அவ்வாறான உரையாடலுக்கு அது பகிரங்கப்படுத்தப்படவும் இல்லை. அரசியலமைப்பு திருத்தம் முதல்நாள் காலையில் அவசர சட்டவரைவாக நீதிமன்றத்தின் கருத்தையும் பெற்று அன்று மாலையிலேயே பாராளுமன்றத்தின் ஒப்புதலையும் பெற்றது. இதனை நாம் மறுநாள் காலை பத்திரிகை வாயிலாகவே அறிந்துகொண்டோம். 'நேற்று மாலை இரண்டு மணிக்கும் இரவு ஒன்பது மணிக்கும் இடையில் பாராளுமன்றத்தில் இத்திருத்தம் அங்கீகரிக்கப்பட்டதென்று காலையில் வெளியான பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

1972 அரசியலமைப்பிற்கு அமைய ஒரு சட்டவரைவு அவசரமானதென அமைச்சரவை கூறினால் குறித்துரைக்கப்பட்ட சட்டவரைவு வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்காமல் பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் பிரசுரிக்காமல் நீதிமன்றத்திற்கு அனுப்ப முடியும். அது தொடர்பான அரசியல் நீதிமன்றத்தின் கருத்தை 48 மணித்தியாலங்களுக்குள் அறிவிக்க வேண்டும். மேற்படி 48 மணித்தியாலத்திற்குள் அறிவிக்க வேண்டிய தீர்ப்பு அன்று காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட்டது. சபாநாயகர் அதனை பாராளுமன்றத்திற்கு அறிவித்த பின்னர் அமைச்சர் ஒருவர் பின்வரும் பிரேரணையைக் கொண்டு வந்தார். 'இன்று மாலை இரண்டு மணிக்கு இது தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்படும்.' இத்தருணத்தில் பதவி வகித்த அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் 5ஃ6 பெரும்பான்மை வாக்குகள் இருந்தன. எனவே, பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பித்த விவாதம் மாலை எட்டு மணிக்கு முன்னர் திருத்தம் அங்கீகரிக்கப்பட்டது. இவ்வாறாக, மக்கள் நித்திரைகொண்டிருந்த இரவு வேளையில், ஆறு மணித்தியாலங்களுக்கும் குறைந்த காலகட்டத்தில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாறாகவே ஏற்கனவே அமுலில் இருந்த அமைச்சரவை அரசாங்க முறைமை ஜனாதிபதி ஆட்சிமுறையாக மாற்றம் பெற்றது.

1977இன் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி அரசியல் நிறைவேற்றுனராக நியமிக்கப்;பட்டாராயினும், மேற்படி உறுப்புரை நீக்கப்படவில்லை.

இவ்வாறாக ஓர் அரசியல் தலைவரான ஜனாதிபதி சட்டத்தைவிட மேன்மையானவராகக் கருதப்பட்டார். ஆட்சியாளர் சட்டத்திற்குமேல் இருப்பாரேயாயின் அங்கு சட்டத்தின் ஆட்சி நிலவ மாட்டாது. சட்டத்தின் ஆட்சி இல்லாதவிடத்து ஜனநாயகம் மட்டுப்படுத்தப்படும்;.

ஒரே மட்டுப்பாடு

இவ்வாறாக சிருஷ்டிக்கப்படும் ஜனாதிபதிப் பதவியின் அதிகாரத்தை வலுப்படுத்துவதை இலக்கு வைத்து 1978 அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டது. ஜனாதிபதிப் பதவியை வலுப்படுத்துவதற்கு அவசியமான முறையிலேயே தேர்தல் முறைமை உட்பட அனைத்து விடயங்களும் தயாரிக்கப்பட்டன. அதன் அதிகாரத்தை பலவீனப்படுத்தக்கூடிய அனைத்தும் நீக்கப்பட்டது. ஒரு நபர் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதிப் பதவிக்கு இரு தவணைகளுக்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட முடியாதென்ற மட்டுப்பாடு உருவாக்கப்பட்டது. மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அரசியலமைப்பிற்கான 18 ஆவது திருத்தத்தின்மூலம் மேற்படி மட்டுப்பாட்டையும் நீக்கினார்.

ஆனால், ஒப்படைக்கப்பட்ட அதிகாரம் மிகப்பாரியது. ஜனாதிபதி அரசின் தலைவராவார், நிறைவேற்றுத்துறையின் தலைவராவார், அரசாங்கத்தின் தலைவராவார். அதேபோல முப்படைகளினதும் சேனாதிபதி ஆவார். அரசின் தலைவர் என்ற பதவியை வகிக்கும்போது எதுவித பேதமுமன்றி அனைத்து மக்களினதும் தலைவராகப் பணியாற்ற வேண்டும். ஆனால், நிறைவேற்றுத்துறையின் தலைவராக செயற்படுகையில் இந்நிலைமை முற்றிலும் எதிரானதாக அமைதல் வேண்டும். ஜனாதிபதியினாலேயே அமைச்சர்களும் நியமிக்கப்படுகின்றனர்.

ஜனாதிபதி ஒப்படைக்கும் நிறைவேற்று அதிகாரமே அமைச்சர்களுக்கும் வழங்கப்படுகிறது. அது உண்iமான அதிகாரமல்ல. ஜனாதிபதி நியமிக்கும் அமைச்சர்கள், அமைச்சரவை அரசாங்கமாகக் கருதப்படுகிறது. இந்த அரசாங்கத்தின் தலைவர் ஜனாதிபதி ஆவார்.

எனவே அமைச்சரவைக் கூட்டங்களின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதியே ஏற்றுக்கொள்வார்.

ஜனாதிபதி தான்தோன்றித் தனமாக அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசியலமைப்பின்மூலம் பெறுகிறார். அமைச்சர்கள் மாத்திரமல்லாது பிரதமரை நியமிக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தின் அந்தஸ்து

இறைமையென எவ்வளவு கூறினாலும் பாராளுமன்றமும் இந்த நிறைவேற்று ஜனாதிபதிப் பதவியின் முன்னிலையில் ஓர் அடம்பன் கொடி போன்ற பலவீனமான நிறுவனமாக மாறியுள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி பாராளுமன்றத்தையும் தனது விருப்பப்படி ஆட்டுவிக்கலாம். அது மாத்திரமல்ல நிறைவேற்று ஜனாதிபதி பதவியின் அதீத அதிகாரம் காரணமாக நாட்டின் சிவில் சமூக அதிகாரத்தையும் தான் விரும்பியபடி ஆட்டுவிக்க முடியும். இராணுவத் தலைவர்கள் முதல் வியாபார முயற்சியாளர்கள், தெருவோரச் சந்தியில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகள் உட்பட அனைவரையும் ஜனாதிபதியினால் ஆட்டுவிக்க முடியும். இதனை கடந்த காலத்தில் நாம் அனுபவவாயிலாகக் கண்டோம். இதனை 'பூரண அதிகாரம்' (Total Power) என்று நான் குறிப்பிடுவேன்.

தன்னால் ஒரு பெண்ணை ஆணாக்க முடியாது, ஆணைப் பெண்ணாக்க முடியாது அதைத் தவிர வேறெந்த செயற்பாட்டையும் ஜனாதிபதிப் பதவியின்மூலம் செய்துகாட்ட முடியுமென்று ஒரு சமயம் ஜயவர்த்தன ஜனாதிபதி சூளுரைத்தார். உண்மையான ஜனநாயக ஆட்சி நிலவும் எந்தவொரு நாட்டுத் தலைவரும் ஒருபோதும் இப்படியான பிரகடனங்களை செய்வதில்லை. ஆனால், இலங்கையில் அமுலில் உள்ள அரசியல் கலாசாரத்திற்கு ஏற்ப அவசியமாயின் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியும். ஏனெனில், இந்த ஜனாதிபதி முறைமையின்கீழ் வெட்கம், பயம் என்பவற்றை அறியாத நபர்களின் அதிகாரமே மென்மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாம் வெட்கம் என்று கருதும் விடயங்களை எதுவித வெட்கமுமின்றி மேற்கொண்டு, பச்சைப் பச்சையாகவே அநாகரீகமான வகையில் சில அரசியல்வாதிகள் நடந்துகொள்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இவற்றை நாம் கடந்த காலத்தில் அனுபவவாயிலாகக் கண்டோம். இத்தகைய ஒரு நிலைமைக்கு ஆளாகக்கூடிய வகையில் நாகரீகமான சமூக அரசியல் கலாசாரத்தைப் பராமரித்த அரசியல் முழுமையாக மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டது. நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதிப் பதவியினால் கடந்தகாலத்தில் இது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அரசியலமைப்பை முழுமையாக நீக்கி மிகச்சிறந்த அரசியலமைப்பை அங்கீகரிப்பது குறைந்தபட்சம் நாகரீகமான ஒரு கலாசாரத்தை மீளக்கட்டி எழுப்புவதற்கு அத்தியாவசியமாகும்.

நிறைவேற்று ஜனாதிபதிப் பதவியை இலங்கையில் ஸ்தாபித்தபோது, அதுவரை காலம் உலகில் வேரூன்றியிருந்த திறந்த பொருளாதார முறைமை இலங்கையில் அறிமுகப்படுத்த வேண்டிய தேவை ஆட்சியாளர்களுக்கு இருந்தது. இதன் காரணமாகவே, இந்நிலைமை உருவாகியது. நீண்டகாலமாக நிலவிய நலன்புரி அரசை உடைத்தெறிய வேண்டிய தேவை ஜே.ஆர்.ஜயவர்த்தனவிற்கு இருந்தது. 1962 இலும் அபிவிருத்தியை முன்நோக்கி எடுத்துச் செல்வதாயின், மக்கள் விரும்பாத தீர்மானங்களை மேற்கொள்ள நேரிடுமென, கூறப்பட்டது. இதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய வகையிலான நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இலங்கையிலும்; உருவாக்க வேண்டுமென அன்றும் ஜே.ஆர். ஜயவர்த்தன வலியுறுத்தினார்.

குறைந்தபட்சம் பிரான்ஸ் நாட்டின் 'சாரள்ஸ் டிகோல்' ஜனாதிபதியின் அரசியலமைப்பைப் போன்ற அரசியலமைப்பொன்றை தயாரிக்க வேண்டுமென்பது ஜே.ஆரின்; அபிலாசையாகும். 1972 இன் குடியரசு அரசியலமைப்பைத் தயாரிக்கும்போது அத்தகைய பாரிய அதிகாரங்கள் பிரதமருக்கு ஏன் வழங்கப்பட வேண்டுமென ஜே.ஆர். அன்று கேள்விக்குட்படுத்தினார். அத்தகைய அதிகாரங்கள் ஜனாதிபதிக்கே வழங்கப்பட வேண்டுமென்பது அவருடைய கருத்தாக அமைந்தது.

குற்றவழுப் பிரேரணை

குற்றவழுப் பிரரேரணையின் மூலமே ஜனாதிபதியைப் பதவி நீக்கம் செய்யப்பட முடியும். வேறு வழிமுறை மூலம் ஜனாதிபதி பதவியில் இருந்து அவரை பதவி நீக்கம் செய்யமுடியாத வகையிலேயே ஜனாதிபதிப் பதவி உருவாக்கப்பட்டு இருந்தது. குற்றவழுப் பிரரேரணை என்னபது இலகுவான செயலுமல்ல. பாராளுமன்றத்தின் 2ஃ3 பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று பிரேணை சமரப்பிக்கப்பட்ட பின்னர், ஓர் விசாரணையின் பின்பு, ஒரு குற்றவழுப் பிரேரணையை அங்கீகரித்து, அதனை உயர்நீதிமன்றத்திறகுச் சமர்ப்பித்து உயர்நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும்.அதன்பின் மீண்டும் பாராளுமன்றத்திற்கு அது சமர்ப்பிக்கப்பட்டு முழுப்பாராளுமன்ற உறுப்பினர்களில் 2ஃ3 பெரும்பான்மை வாக்குகள்மூலம் அப்பிரேரணையை அங்கீகரித்தால் மாத்திரமே ஜனாதிபதியைப் பதவிநீக்கம் செய்ய முடியும். இலகுவில் செய்ய முடியாத ஒரு விடயமாகவே இதனைக் கூறவேண்டும். பிரேமதாச ஜனாதிபதியாக பதவி வகித்தபோது குற்றவழுப் பிரேரணையை சமர்ப்பிக்க முயன்றபோது என்ன நடந்ததென்பதையும் நாம் அனுபவவாயிலாகக் கண்டோம்;.

அபிவிருத்திக்கான பயணத்தை முன்னகர்த்துவதற்காகவே நிறைவேற்று ஜனாதிபதிப் பதவியை ஸ்தாபிக்க வேண்டுமென ஜே.ஆர்.ஜயவர்த்தன குறிப்பிட்டார். முதலில் அபிவிருத்தி, பின்புதான் ஜனநாயகம் (னுநஎநடழிஅநவெ குசைளவ - னுநஅழஉசயஉல டுயவநச) என்ற கருத்தாடலை ஜே.ஆர்.ஜயவர்;தன அறிமுகப்படுத்தினார். அதற்கமைய ஜனநாயகம் இன்றல்ல நாளைக்கு!

ஜனநாயகம் என்று கூறினாலும் ஒரு நாட்டில் வாழும் அனைத்து சமூகமும் ஒன்றிணைந்து நாட்டை ஆட்சிசெய்ய முடியாது. ஆட்சி என்று வரும்போது ஒரு நபர் ஆட்சி செய்யமுடியும் அல்லது ஒரு குழுவினர் ஆட்சிசெய்ய வேண்டும். தேர்தல்மூலம் அத்தகைய ஓர் ஆட்சிக்கான ஒரு குழுவினரையே நாம் தேர்ந்தெடுக்கிறோம். ஆனால், இவ்வாறு தெரிவு செய்யப்படும் நபர் சிறப்பான முறையிலே தனது கடமைகளைச் செய்கிறாரா? இல்லையா? என்பதுபற்றி நாம் உத்தரவாதம் அளிக்க முடியாது.

சட்டத்தின் ஆட்சி

1978 அரசியலமைப்பின்கீழ் ஆட்சிசெய்யும் நபர் அல்லது நிறைவேற்று ஜனாதிபதி சட்டத்திற்கு மேல் இருப்பவராகவே கருதப்படுகிறார். ஜனாதிபதி மேற்கொள்ளும் நிறைவேற்று நடவடிக்கைகள் மாத்திரமல்லாது, தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் ஓர் செயற்பாட்டிற்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது. ஆட்சியாளர் சட்டத்திற்கு மேல் இருப்பின் அங்கு சட்டத்தின் ஆட்சி இல்லை. சட்டத்தின் ஆட்சி இல்லாதுவிடின் அதனை ஜனநாயகம் என்றும் அழைக்கவும் முடியாது. ஜனநாயகம் என்பது சட்டத்தின் ஆட்சியாகும்.

அரசியலமைப்பு என்பது அதிகாரம் கொண்டோர் மற்றும் எதிர்காலத்தில் அதிகாரத்தைப்பெற உத்தேசிப்போரின் எதிர்பார்ப்புக்களுக்கமைய உருவாக்கப்படும் ஓர் இணக்கப்பாடு என நாம் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால், இச் செயல்முறை தவறானதெனக் கூறமுடியாது. ஏனெனில் அதன்மூலம்; தற்போதைய நிலைமையை மேலும் சிறந்ததாக உருவாக்கக்கூடிய வகையிலான கலந்துரையாடல் உருவாக்கப்படலாம்.

மக்கள் இச்செயற்பாடுமீது காட்டும் அழுத்தத்தின்மூலமே இதன் முக்கியத்துவம் தங்கியுள்ளது. பிரஜைகளாகிய எமக்கு நியாயம் பெறக்கூடிய சமாதானத்துடன் வாழக்கூடிய ஒரு சூழல் உருவாகும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும். அதில்; உள்ளடக்கப்பட வேண்டிய பண்புகள் எவை? எமக்கு வாக்களிக்கும் அதிகாரம் எவ்வாறு கிடைக்கிறது? எமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும்போது சிறந்த நபர்களை தெரிவு செய்வதற்கு இதன்மூலம் வாய்ப்புக் கிட்டுமா? என்ற விடயங்களையிட்டே எமது கவனம் செலுத்தப்பட வேண்டும்.

தற்போது பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருப்போரில் அதிக எண்ணிக்கையினர் க.பொ.த.சாதாரண பரீட்சையில்கூட சித்தியடையாதவர்களாகவே இருக்கின்றனர் என்ற கருத்தாடல் சமூகத்தில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒருவருடைய கல்வித் தகைமை பற்றிய இந்த அளவுகோல் அவ்வளவு சிறந்ததென நான் கருதவில்லை.

நான் அறிந்தமட்டில் .டீ.எஸ்.சேனாநாயக்க ஒரு பட்டதாரி அல்ல. ஆனால், அவர் ஒரு மோசமான ஆட்சியாளராக இருக்கவில்லை. திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க எந்தப் பரீட்சையில் சித்தியடைந்திருந்தார்? அவர் மோசமான ஆட்சியாளராகத் திகழ்ந்தாரா? உண்மையில் கல்வித் தகைமை ஓர் ஆட்சியாளரைப் பொறுத்தவரை தீர்மானகரமான விடயமல்ல. இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. 1931 ஆம் ஆண்டின் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வஜன வாக்குரிமை ஏற்படுத்திய மாற்றத்தின் அடிப்படை கல்வித் தகைமை ஆட்சிமுறையில் தனிநபர்களை நியமிக்கும் முன்னணி அளவுகோலாக அமையக் கூடாதென்பதாகும். 1931 வரை கல்வித் தகைமையை மாத்திரம் கவனத்திற்கொண்ட ஒரு முறைமையே இருந்து வந்தது. அன்று ஆங்கிலம் பேசத் தெரிந்த, வாசிக்கத்தெரிந்த, எழுதத் தெரிந்த நபர்கள் மாத்திரமே தேர்தலில் போட்டியிட முடியும். பின்னர் இந்நிலைமையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. எனவே, நாம் மீண்டும் பின்னோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தகுதியான நபர்களை தெரிவு செய்வதற்கு அவசியமான அறிவு மக்களுக்கு (வாக்காளர்களுக்கு) இருத்தல் வேண்டும். தற்போதைய தேர்தல்முறை மக்களை பலவீனப்படுத்தி தலைமைக்கு அவசியமான பலம் வாய்ந்தோருக்கு வெட்கமும், அச்சமுமில்லாதோர் முன்வரக்;கூடிய வாய்ப்புக்களை வழங்குவதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. மக்களுக்கு வலுவூட்டும் புதிய தேர்தல் முறைமைக்கான புதிய அரசியலமைப்பு அவசியமில்லையா?

புதிய அரசியலமைப்பு உருவாகுமா? இல்லையா? என்பதுபற்றி பல்வேறு நபர்களுக்கு பல சந்தேகங்கள் உண்டு. இவற்றைப் பொருட்படுத்தாமல் மக்களுக்குச் சார்பான சிறந்த அரசியலமைப்பை நாடு உருவாக்கிக் கொள்ளும்வரை இதுவிடயம் தொடர்பான கலந்துரையாடலை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதேசமயம், 1977 இல், இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னர் நாம் அனுசரித்த அணுகுமுறையை பின்னர் ஏற்பட்ட நிலைமைகளோடு மீள சிந்தித்து முன்னேற வேண்டும்.

தனது அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் குறிக்கோளுடனேயே இற்றைக்கு 38 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்கனவே கூறியபடி 1978 அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. திறந்த பொருளாதாரத்தின்கீழ் ஏற்பட்டுள்ள நடவடிக்கைகள்; காரணமாக அரசியல்வாதிகளின் அபிலாசைகள் நிறைவேறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், தற்போது அரசாங்கத்தின் கருத்திட்டங்கள் பல மில்லியன் ரூபாய் பெறுமதி வாய்ந்தவை. மார்க்ஸ் கூறியவாறு பொருளாதார மாதிரியில் இருந்து உருவாகும் வர்க்கங்களுக்கு மேலதிகமாக அரசியல் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட தற்போது புதிய வர்க்கங்கள் உருவாகி உள்ளன. அதாவது, கூட்டாக அரசியல் அதிகாரத்தை, அரசியல் முறைமையாக மாற்றிக்கொண்டு, அதன்மூலம் எமக்கு பொருளாதார ரீதியாக சுரண்டும் அரசியல் வர்க்கம் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன. நாம் மேற்படி வர்க்கத்தை பராமரிக்க வேண்டியுள்ளது. அந்தவர்க்கத்திற்கான அலுவலகங்களையும், வாகனங்களையும் ஏனைய வசதிகளையும் வழங்கவேண்டி உள்ளது. இவற்றிற்காக பொதுமக்களின் வளங்களில் இருந்து பல பில்லியன் ரூபாய்களை செலவு செய்யவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.

இவை அனைத்தையும் நிருவகிக்க முடியாவிட்டால் அடிப்படை ஜனநாயக நல்லாட்சியினைத் தடைசெய்யும் நிலைமைக்கு தீர்வு நாடி ஆரம்பத்தில் இருந்தே உரிய முறையில் எழுதப்பட்ட புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு அவசியமாகும். அவ்வாறின்றி நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிப் பதவியை மாத்திரம் இல்லாதொழிக்கும் பட்சத்தில் மேற்படி பதவியின் அதிகாரங்கள் பிரதமரிடம் கையளிக்கப்படும். 1972 அரசியலமைப்பில் இத்தகைய நிறைவேற்று அதிகாரம்கொண்ட பிரதமர் பதவி மாத்திரமே அன்று இருந்தது. ராணி வழக்கறிஞர் எஸ்.நடேசன் நீண்ட காலத்திற்கு முன்னரே எதிர்வு கூறியவாறு நீண்டகாலமாக இலங்கை அரசியலமைப்பிற்கு அமைய ஆட்சிசெய்யப்படவில்லை. அவசர காலச்சட்டத்தின் கீழேயே ஆட்சி இடம்பெற்றது. பிரதமர் பதவியின் கீழேயே இத்தகைய நிலைமை நிலவியது.

தற்போதைய அரசியலமைப்பு இன்றைக்குப் பொருத்தமுடையது அல்ல. அபிவிருத்தி என்ற நிலைப்பாட்டில் இருந்து முதலில் ஜனநாயகம் என்ற நிலைப்பாட்டிற்கே நாம் வரவேண்டி உள்ளது. 60 ஆண்டுகளுக்குப் பின்னரும் நாம் தொடர்ந்தும் அபிவிருத்தி அடையும் ஒரு நாடாகவே உள்ளோம்;. கட்டடங்களும், பெருந்தெருக்களும் அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவற்றில் வாழும் மனிதர்களுக்கு என்ன நடந்துள்ளது? மிகவும் பலவீனமான அரசியல் கலாசாரம் கொண்ட மனிதர்களையே நாம் அரசியல்ரீதியாக அபிவிருத்தி செய்துள்ளோம். கல்வி சீரழிந்துள்ளது. சிந்தித்து செயற்பட முடியாத மனிதர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். எனவே, இனவாதம், மதவாதம் என்பவற்றிற்கு மிக இலகுவாக அடிபணியக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. அரசியல்வாதிகளும் இதன்மூலம் பயன்பெறும் நிலையே உருவாகியுள்ளது. அபிவிருத்தி இன்மையை அபிவிருத்தி செய்வதையே நாம் செய்துள்ளோம் அல்லவா?

இப்பிரச்சினைகளுக்கு சரியான கவனம் செலுத்தக்கூடிய வகையில் அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும். தற்போது தயாரிக்கப்பட்டு வரும் , புதிய அரசியலமைப்பின் மூலம் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் உள்ள உரிமை அடிப்படை உரிமைகளாக ஏற்றறுக்கொள்ளும்; சாத்தியம் உள்ளது. நியாயமானதும், நடுநிலையானதுமான நிருவாகச் செயற்பாட்டிற்கு மக்களுக்குள்ள உரிமையையும் அவ்வாறு உள்ளடக்க வேண்டிய விடயங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றை முழுமையாக மக்களுக்கு வழங்குவது மாத்திரமல்லாமல் அவற்றை அணுகுவதற்கான ஆற்றலை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பாகும். இவை உள்ளடக்கப்பட்ட அடிப்படை உரிமைகளுக்கான அத்தியாயத்தின் மூலமே இவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்கு நீதிமன்றத்தின் உதவியைக் கோர முடியும்.

1988 மாகாணசபைகள் முறைமை அவசரமாக உருவாக்கிக் கொண்டதொன்றாகும். இதில் பல குறைபாடுகள் உண்டு. ஆனால், சிற்சில பணிகளை மாகாண மட்டத்தில் மேற்கொண்டவாறு இரண்டாவது அரசாங்கமாக மாகாணசபைகள் பணியாற்றி வருகின்றன. அவற்றைப் புறக்கணிக்க முடியாதவகையில் பிராந்திய மற்றும் உள்நாட்டு சாதனங்கள் அமைந்துள்ளன. இவற்றின் இருப்பு அவசியமென மாகாணசபை உறுப்பினர்களும், முதலமைச்சர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அரசியலமைப்பிற்கான 13ஆவது திருத்தத்தின்மூலம் மாகாணங்களுக்கு அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விடயங்களின் பட்டியல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் மாத்திரம் அதிகாரம் கிடைக்க மாட்டாது. நியதிச்சட்டங்களை உருவாக்கி மாகாணத்திற்கு அவசியமான வகையில் ஒரு பொறிமுறையை உருவாக்கிக்கொள்வதன் மூலமே அதிகாரம் கிடைக்கிறது. இதனை அமுல்படுத்துவதற்கு உதவும் மாகாண சட்டமா அதிபரை நியமிக்கக்கூடிய உறுப்புரைகளை அரசியலமைப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மாகாண சபைகளுக்கு அரச வருமானத்தில் எவ்வளவு தொகை வழங்கப்படுமென எழுத்துமூலம் உள்ளடக்கப்பட வேண்டும். மாகாணங்களில் வாழும் தமது மக்களுக்கு வினைத்திறனுடன் சேவை செய்யக்கூடிய ஆற்றலுடைய முகாமைத்துவ நிபுணத்துவம் கொண்ட மாகாண முகாமைத்துவம் வழங்கப்பட வேண்டும். இந்த அதிகாரப் பகிர்வு ஒரே முறையில் அமைய வேண்டும். மையத்திற்கும் மாகாணங்களுக்கும் இடையே கூம்புரு (Pலசயஅனை) வகையைச் சேர்ந்த படிநிலை உறவே நிலவுகிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் மட்டத்தின் அரசாங்கங்கள், முதலாம் மட்டத்தின் அரசாங்கத்திற்குக் கீழேயே அமைந்துள்ளன. இது சமஷ;டி முறைமை அல்ல. ஒற்றையாட்சி முறையின்கீழ் அதீத அதிகாரங்களை மையப்படுத்திக்கொண்டு சமத்துவமற்ற பன்மைத்துவத்தை Unequal Pluralism பராமரித்தமை காரணமாகவே நாடு பிளவுபடும் நிலைமை ஏற்பட்டது.

அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தை ஒரு புத்தகமாகக் கருதினால் அரசியலமைப்பைவிட இந்தப் புத்தகம் பெரியது. பிரஜையின் அதிகாரத்தை உறுதிப்படு;தத்துவதே புதிய அரசியலமைப்பின் மூலம் எமக்குத் தேவைப்படுகிறது. ஜனாதிபதியின் அதிகாரமா? அல்லது பிரதமரின் அதிகாரமா? என்பதல்ல. ஜனநாயகத்திற்கான முக்கியத்துவம் பிரஜைகளுக்கு உரித்தான அதிகாரமேயாகும். தற்போது அரசியல்வாதிகளின் ராஜ்யமே நிலவுகிறது. இது மாற்றப்பட வேண்டும். இனங்களுக்கிடையே ஐக்கியத்தையும், சமாதானத்தையும் உறுதிப்படுத்தும் உறுப்புரைகள் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும். தேசிய மொழிகள் பற்றிய தெளிவான வரைவிலக்கணமும் உள்ளடக்கப்பட வேண்டும். நடைமுறையில் உள்ள அரசியலமைப்பிற்கு அமைய அரசகரும மொழிகள் என்றும், தேசிய மொழிகள் என்றும் இரண்டு சொற்பதங்கள் வழக்கில் உள்ளன. அவை நிருவாக மொழிகளாகவும், குறித்துரைக்கப்பட்டுள்ளன. நிருவாக மொழி மாகாண மட்டத்தில் மாத்திரமல்லாமல் பிரதேசச் செயலக மட்டத்திற்கும் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் அரசியலமைப்பில் குறித்துரைக்கப்பட வேண்டும். தேசிய மொழிகள் பற்றிய ஏற்பாடுகளின்போது இந்த நாட்டின் தேசியம் என்ற மொழியியல் சமூகங்கள் இரண்டு உண்டு. அவர்களின் மொழிகளும், பண்பாடும்; இலங்கையர் என்ற பொதுக் கலாசாரத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ளதை இது ஏற்றுக்கொள்கிறது. அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயத்திற்கு மேலதிகமாக இந்த அரசியலமைப்பில் உள்ள மிக முற்போக்கான ஏற்பாடு இதுவாகும். திரு.ஜே.ஆர்.ஜயவர்த்தன தனது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் ஒருமுறை கூறியவாறு, 'சிறு குழந்தையைக் கழுவிய தண்ணீரை வீசவேண்டுமேயொழிய குழந்தையை வீசிவிடக் கூடாது. இக்குழந்தையை மிகச் சிறந்தமுறையில கவனமாகப்; பராமரித்துக்கொண்டு முன்னோக்கிப் பயணிக்க வேண்டும்.'

இன்று உலகத்தில் அரசியலமைப்பு தயாரிப்பது தொடர்பாக புதிய அனுபவங்கள் உண்டு. போருக்குப் பின்னர் புதிய அரசியலமைப்புக்களை உருவாக்கிக்கொண்ட நாடுகளும் உள்ளன. தென்னாபிரிக்கா அதிகாரப் பங்கீடு என்ற நிலைப்பாட்டில் இருந்து ஆரம்பித்து நாட்டில் வாழும் சாதாரண நிலைமைக்கு மாறும் விதத்திலான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நாமும் இவற்றிலிருந்து அனுபவங்களைப் பெறவேண்டும்.

தற்போது ஏற்படும் தொழிநுட்ப முன்னேற்றம் காரணமாக பிரபஞ்ச பிரஜைகளின் மேம்பாடு காரணமாக பல்கலைக்கழகப் பிரஜைகள் உருவாகி வருகின்றனர். இத்தகைய பிரஜைகளிடம் செல்லக்கூடிய சுதந்திரமான பிரஜையை உருவாக்கும் தேவையும் எமக்குள்ளது.

ஒவ்வொரு தனிநபருக்குமுள்ள பேச்சுச் சுதந்திரத்தையும், ஒன்றுகூடும் சுதந்திரத்தையும், சிவில் உரிமைக்கான சுதந்திரத்தையும் உரித்தாக்குவது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அபிவிருத்தி பற்றிய விடயங்கள் அதன் பின்னரே வரும். சிவில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டே கடந்த காலத்தில் நலன்புரி அரசு என்ற எண்ணக்கரு முன்னகர்த்தப்பட்டது. கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு போன்ற சமூக உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் போதே சிவில் உரிமைகள், சட்டவாக்க உரிமைகள் என்பவற்றை அனுபவிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

அரசாங்கத்திற்குப் பணம் இல்லாத காரணத்தால் பொதுமக்களின் அனைத்து நலன்புரி நடவடிக்கைகள் அரச கட்டுப்பாடு காரணமாகவும், அவசியமானோர் நலன்புரி அரசு உரிமைக்காக பிரவேசிப்பது மக்களுக்கு உள்ள உரிமையை இல்லாதொழிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கவேண்டிய அவசியமில்லை. இவை எழுத்துமூலம் அமைய வேண்டும். அப்போது அவற்றை அடைவதற்கு அரசுக்குள்ள பொறுப்பு நீதிமன்றத்தின் மூலம் வலுவாக்கம் செய்ய முடியும்.

மக்களுக்கு கொடுக்க வேண்டியதை சாப்பிட்டுவிட்டு வேறொன்றைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் போல, தற்போதைய அரசியலமைப்பு மக்களைப் பயிற்றுவித்துள்ளது. சிவில் பிரஜைகளின் உள்ளுணர்வை வளர்ப்பதற்கு ஓர் வாய்ப்புக் கிட்டியுள்ளது. இந்நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். நடைமுறையிலுள்ள அரசியலமைப்பிற்குப் பதிலாக புதிய அரசியலமைப்பிற்கான ஆர்ப்பாட்டங்களைச் செய்யுங்கள். மிகச் சிறந்த முறை இல்லாவிடினும், இதனைவிட பிரஜைக்கு அதிகாரம் கிடைக்கும் அரசியலமைப்பு ஏற்பாடுகளை உள்ளடக்குவதற்கு அயராது உழைப்போம். பிரஜைகளின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு என்றோ ஒருநாள் கிடைக்கும்வரை இந்த இடத்திலிருந்து முன்னேறிச் செல்வோம். 

Comments