DFCC வங்கியின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக லக்ஷ்மன் சில்வா நியமனம் | தினகரன் வாரமஞ்சரி

DFCC வங்கியின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக லக்ஷ்மன் சில்வா நியமனம்

DFCC வங்கியின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக லக்ஷ்மன் சில்வா, கடந்த 16ஆம் திகதி பதவியேற்றார்.

நிதியியல் சேவைகள் மற்றும் வங்கிக் கைத்தொழில் துறையில் தனது விரிவான பின்னணி மற்றும் நிபுணத்துவத்துடன் திரு. லக்ஷ்மன் சில்வா DFCC வங்கியை நாட்டிலுள்ள முன்னணி மற்றும் மதிக்கத்தக்க வணிக வங்கிகளில் ஒன்றாக மாற்றுவதற்கும் புதுமை மற்றும் டிஜிட்டலை மையப்படுத்தி வங்கியின் வளர்ச்சிக்கான ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்துவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. சில்வா நிதியியல் துறையில் 30 வருட அனுபவமுடையவர். களனி பல்கலைக்கழகத்தில் தனது B.Com (Sp.) படிப்பினையும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத்தில் முதுகலைபட்டமும் (MBA) பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முதலாக இலங்கையின் உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தில் தனது தொழிலினை ஆரம்பித்து பின்னர் 1987 ஆம் ஆண்டு DFCC வங்கியில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார்.

வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் DFCC வங்கியின் பலவிதமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்தும் திட்டங்களில் முக்கிய கருவியாக செயற்பட்டார். ஆரம்பத்தில் DFCC வர்தன வங்கியின் பிரதான செயற்பாட்டு அதிகாரியாக பணியாற்றியவர் 2010 ஆம் ஆண்டில் பிரதான நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார்.

DFCC வங்கி மற்றும் DFCC வர்தன வங்கியின் ஒன்றிணைவை தொடர்ந்து ஒருங்கிணைந்த DFCC வங்கியின் துணை தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர் வங்கிக்கழகத்தின் வர்த்தக மூலோபாய முகாமைத்துவத்தையும் தலைமையையும் கருத்திற்கொண்டு நிபுணத்துவம் கொண்ட திட்ட நிதியுதவி சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக ஆசியாவில் பிரதான அபிவிருத்தி வங்கிகளில் ஒன்றாக திகழும் பெருமையை நிலை நிறுத்தச்செய்தார். 

Comments