விரைவில் திருமணம் செய்து கொள்வேன் | தினகரன் வாரமஞ்சரி

விரைவில் திருமணம் செய்து கொள்வேன்

என்னை சந்திக்கிற பலரும் உங்களுக்கு திருமணம் எப்போது? என்றே கேட்கிறார்கள். பெண்கள் வாழ்க்கையில் திருமணமும் குழந்தையும் முக்கியமானது. என் வாழ்க்கையிலும் திருமணம் கண்டிப்பாக நடக்கும். எனக்கு பிடித்தவரை சந்தித்து விரைவில் திருமணம் செய்து கொள்வேன்.

எனக்கு கணவராக வருகிறவர் நல்ல நண்பராக இருக்க வேண்டும். இதற்கு மேல் எஞ்சியுள்ள வாழ்க்கையை நல்லபடியாக அவரோடு கழிக்க வேண்டும். என் அழகு ரகசியம் யோகா. தினமும் மறக்காமல் யோகா செய்கிறேன். தியானத்திலும் ஈடுபடுகிறேன். யோகா எனது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்த முடிகிறது. எப்போதும் அமைதியாக இருக்கிறேன். சமூகத்தில் இளைய சமுதாயத்தினர் போதை பொருளுக்கு அடிமையாகி வாழ்க்கையை பாழாக்கி வருவது வேதனை அளிக்கிறது. 

 

Comments