“நிலைபேறாண்மைக்காக கொள்கைத்திட்டமிடல்” நடவடிக்கைக்கு INSEE சீமெந்து வலுவூட்டல் | தினகரன் வாரமஞ்சரி

“நிலைபேறாண்மைக்காக கொள்கைத்திட்டமிடல்” நடவடிக்கைக்கு INSEE சீமெந்து வலுவூட்டல்

INSEE சங்ஸ்தா மற்றும் INSEE மஹாவலி மரீன் ஆகியன நாட்டின் நிர்மாண தொழிற்துறை திறன் சம்மேளனம் (CISC) உடன் கைகோர்த்து, தனது கூட்டாண்மை பொறுப்புணர்வு நடவடிக்கைகளில் ஒன்றாக “நிலைபேறாண்மைக்காக கொள்கைத்திட்டமிடல்” செயற்பாடுகளை முன்னெடுக்க முன்வந்துள்ளது.

தேசத்துக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்பும் வகையில் அமைந்துள்ள இந்த பங்காண்மையில் வேர்ல்ட் யுனிவர்சிட்டி சேர்விஸ் ஒஃவ் கனடா (WUSC) உள்ளடங்கியிருந்ததுடன், பிளாட்டினம் அனுசரணையாளராக INSEE சீமெந்து இணைந்திருந்தது.

இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெற்ற இந்நிகழ்வானது இலங்கையின் முதலாவது திறன் துறைசார் சம்மேளனமாக அமைந்திருந்தது. இந்நிகழ்வில் CISC தலைவர் தேசமான்ய சுனில் லியனாரச்சி மற்றும் WUSC இலங்கைக்கான பணிப்பாளர் எஸ்தர் மெக்கின்டொஷ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கல்வி மற்றும் பயிற்சிகளுக்கான உதவிப்பணிப்பாளர் (TVET) மஞ்சுள விதானபத்திரன மற்றும் சீமெந்தின் நிலைபேறாண்மை அபிவிருத்தி மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் பர்ஸானா கான் மற்றும் CISC பணிப்பாளர் சபை அங்கத்தவர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

Comments