நுளம்புகளிலிருந்து இயற்கையான பாதுகாப்பளிக்கும் Mosguard Lotion | தினகரன் வாரமஞ்சரி

நுளம்புகளிலிருந்து இயற்கையான பாதுகாப்பளிக்கும் Mosguard Lotion

நுளம்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில பாதுகாப்பான, இயற்கையான உயர் வினைத்திறன் வாய்ந்த Mosguard Lotion தயாரிப்பு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹேமாஸ் மனுபக்‌ஷரிங் (பிரைவெட்) லிமிட்டெட் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பிரிவு ஆகியன இணைந்து இந்த தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளன.

சருமத்தில் எவ்விதமான ஒவ்வாமையை ஏற்படுத்தாததுடன், ஒட்டாத தன்மையையும் கொண்டுள்ளது. சருமத்தில் இந்த லோஷனை பூசிய பின்னர், எவ்விதமான பூச்சிகளும் சருமத்தை அண்டாத வகையில் இந்த தயாரிப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஹேமாஸ் குழுமம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நம்பிக்கையான தயாரிப்பாக Mosguard அமைந்துள்ளதுடன், நுளம்புகளை விரட்டும் வகையிலான இயற்கையான சேர்மானங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

நுளம்புகளினால் ஏற்படும் நோய்களுக்கு சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். சிறுவர்களின் சருமத்தில் நுளம்புகளிலிருந்து பாதுகாக்கும் கிறீம் மற்றும் பூச்சு வகைகளை பூசுவதற்கு தாய்மார் பெருமளவில் ஈடுபாட்டைக் காண்பிப்பதில்லை, அவற்றில் காணப்படும் இரசாயன பதார்த்தங்கள், குழந்தைகளின் மென்மையான சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அவர்கள் அச்சம் கொண்டிருப்பது இதற்கு காரணமாகும். Mosguard அறிமுகத்தினூடாக தாய்மார்களுக்கு இவ்வாறு அச்சம் கொள்ளத்தேவையில்லை, எரிச்சல் இல்லாத, அரிப்பை ஏற்படுத்தாத இந்த தயாரிப்பை இந்தியாவின், மும்பை நகரில் அமைந்துள்ள MASCOT SPINCONTROL ஆய்வு நிலையம் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி சான்றளித்துள்ளது. மேலும், இதர பூச்சு வகைகளில் காணப்படும் ‘DEET’ எனும் சேர்மானத்தை இந்தத் தயாரிப்பு கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கராம்பு மற்றும் எலுமிச்சை இயுக்கலிப்டஸ் போன்ற தாவரங்களிலிருந்து பெறப்பட்ட இயற்கையான சேர்மானங்களைக் கொண்டு Mosguard தயாரிக்கப்பட்டுள்ளது. உயர் வினைத்திறன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் கொழும்பு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரிவுடன் இணைந்து ஹேமாஸ் மனுபக்‌ஷரிங் இந்த தயாரிப்பை வடிவமைத்துள்ளது. இலங்கை மருத்துவ ஆய்வு கல்வியகத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலமாக, இந்த தயாரிப்பு உடலில் பூசப்பட்டு சுமார் ஆறு மணித்தியாலங்கள் வரை பாதுகாப்பை வழங்கக் கூடியது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Comments