பத்மாவதியை தடுத்து | தினகரன் வாரமஞ்சரி

பத்மாவதியை தடுத்து

ஏநிறுத்த முடியாது தீபிகா படுகோனே ஆவேசம் த்தனை போராட்டங்கள் நடத்தினாலும் பத்மாவதி படத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று நடிகை தீபிகா படுகோனே ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.

பத்மாவதி படத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் குறித்து ராணி பத்மாவதியாக நடித்துள்ள நடிகை தீபிகா படுகோனே கூறியதாவது:-

இதுபோன்ற போரட்டங்கள் மூலம் நாம் நாட்டை பின்னுக்கு தள்ளிவிடக் கூடாது. இது பயமுறுத்தல் ஆகும். திட்டவட்டமான பயமுறுத்தல். இதன்மூலம் நாம் என்ன அடைந்துவிடப் போகிறோம். இந்த நாட்டை எங்கு கொண்டு செல்கிறோம் பின்னுக்கு தள்ளுகிறோம்.

பத்மாவதி படத்துக்கு எதிராக போராட்டங்கள்

நடப்பதை தடுக்க முடியாது, அதே சமயம் இதில் சட்டத்துக்கு

புறம்பாக யாரும் செயல்பட அனுமதிக்க கூடாது.

பத்மாவதி படத்துக்கு தணிக்கை குழு அனுமதி அளித்துள்ளது. அவர்களுக்கு மட்டுமே நாங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

எனவே எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும்

பத்மாவதி படம் வெளியாவதை தடுத்து நிறுத்த முடியாது.

பத்மாவதிக்காக மட்டும் அல்ல, அதைவிட மிகப்பெரிய போர் நடத்த வேண்டி உள்ளது. இந்த படத்தில் பத்மாவதியாக நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். இந்த கதையை அனைவருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. அதைத்தான்

சொல்லி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Comments