புதிய இடத்தில் ஜனசக்தி அக்குரஸ்ஸ கிளை | தினகரன் வாரமஞ்சரி

புதிய இடத்தில் ஜனசக்தி அக்குரஸ்ஸ கிளை

இலங்கையில் காப்புறுதிச் சேவைகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வரும் ஜனசக்தி இன்ஷுரன்ஸ் பீஎல்சி நிறுவனம், தனது அக்குரஸ்ஸ கிளையை 27, அம்பேதொட்டவத்த, கம்புறுப்பிட்டிய வீதி, அக்குரஸ்ஸ எனும் முகவரியில் இட வசதிகொண்டதும், செளகரியமானதுமான இடத்திற்கு அண்மையில் மாற்றம் செய்துள்ளது.

பிரதேச வாடிக்கையாளர்களுக்கு மகத்தான மட்டங்களிலான சேவையை வழங்கும் இப்புதிய அலுவலகம், தனது கிளை வலையமைப்பை மேம்படுத்தி, அதிகரிக்கச் செய்யும் ஜனசக்தியின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு அங்கமாக உள்ளது. வாடிக்கையாளர்களின் நலன் கருதி இக்கிளையானது வாரநாட்களில் மு.ப. 8.30 முதல் பி.ப 5.00 மணிவரையும், சனிக்கிழமைகளில் மு.ப. 8.30 முதல் பி.ப 12.30 வரையும் பணிகளுக்காக திறந்திருக்கும்.

அக்குரஸ்ஸவில் புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள கிளை அலுவலகமானது கடந்த ஒக்டோபர் 12 ஆம் திகதியன்று வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளதுடன், பல உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் Janashakthi General Insurance Limited நிறுவனத்தின் பிரதம தொழிற்பாட்டு அதிகாரியான தயாளனி அபேகுணவர்தன, Janashakthi Insurance PLC நிறுவனத்தின் ஆயுள் காப்புறுதி தேசியமட்ட விற்பனைத்துறை பிரதிப் பொது முகாமையாளரான துமிந்த பண்டார மற்றும் ஏனைய பிரமுகர்கள் பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. 

Comments