அஜித் தனக்கென்று பிரமாண்டமான ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் படங்களுக்கு வரும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் கடந்த வருடம் இவரின் விவேகம் படம் வெளிவந்து பெரும் தோல்வியை சந்தித்தது, அஜித்தின் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் என்றாலும், படத்தின் பட்ஜெட்டால் வசூல் பெரிதும் அடிப்பட்டது.
மேலும், பல திரையரங்குகளில் வேலைக்காரன் விவேகம் வசூலை முந்தியுள்ளது, இவை பலருக்கும் அதிர்ச்சி என்றாலும் இது தான் உண்மையும் கூட.
இதுமட்டுமின்றி தமிழகத்தில் பைரவா, விவேகம் வசூலை வேலைக்காரன் நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.