Maggi நூடில்ஸின் உயர் தர நடைமுறைகளுக்காக SLSI இனங்காணல் அங்கீகாரம் | தினகரன் வாரமஞ்சரி

Maggi நூடில்ஸின் உயர் தர நடைமுறைகளுக்காக SLSI இனங்காணல் அங்கீகாரம்

 SLSI (இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின்) விருதுகள் வழங்கும் நிகழ்வில் மிகவும் அபிமானத்தைப் பெற்ற நெஸ்லே நிறுவனத்தின் Maggi நூடில்ஸ் உற்பத்திகளுக்கு அவற்றின் உயர் தர நடைமுறைகளுக்காக இனங்காணல் அங்கீகாரம் அண்மையில் இடம்பெற்ற கிடைக்கப்பெற்றுள்ளது.

Maggi Chicken, Curry, Daiya, Tikiri மற்றும் Double Pack நூடில்ஸ் உற்பத்திகள் மற்றும் Maggi Devilled Chilli Chicken மற்றும் Maggi Chicken நூடில்ஸ் உற்பத்திகள் அடங்கலாக ஒட்டுமொத்த Maggi நூடில்ஸ் உற்பத்தியும் தற்போது SLS தரச்சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. இலங்கையின் தேசிய தரக் கட்டளைகள் அமைப்பாக இலங்கை கட்டளைகள் நிறுவனம் இயங்கி வருவதுடன், சர்வதேச கட்டளைகள் நிறுவனத்தின் ஒரு உறுப்பு நிறுவனமாகவும் அது செயற்பட்டு வருகின்றது. இலங்கை கட்டளைகள் தரச்சான்று அங்கீகாரம் (SLS) என்பது உற்பத்தியொன்று இலங்கை தர நடைமுறை வரையறைகளுக்கு அமைவாக உற்பத்தி செய்யப்படுவதையும், அந்த உற்பத்தியை தரத்திற்கான உத்தரவாதத்துடன் கொள்வனவு செய்ய முடியும் என்பதையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கணக்காய்வுகள் மற்றும் உற்பத்தி சோதனை நடவடிக்கைகள் மூலமாக நிறுவனத்தின் தர நிர்ணய முறைமை ஒழுங்காக கண்காணிக்கப்பட்டு, அதன் மூலமாக தொடர்ச்சியான இணக்கப்பாடு உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.

Maggi நூடில்ஸ் உற்பத்தி வரிசையானது குருணாகலிலுள்ள நெஸ்லே நிறுவனத்தின் அதிநவீன உற்பத்தி மையத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. மிகவும் கடுமையான தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகள், கடுமையான உற்பத்தி சுகாதார நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு தர நடைமுறைகள் என்பன உள்நாட்டு மற்றும் சர்வதேச உணவுப் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் தர நடைமுறைகளுக்கு அமைவாக தரக் கட்டுப்பாட்டுச் சோதனைகள் மற்றும் முழுமையான சோதனைகளுக்கு அமைவாகவே அவை உற்பத்தி செய்யப்படுவதுடன், உற்பத்தி நடைமுறையின் ஒவ்வொரு படிநிலையிலும் அவை கண்டிப்பாகப் பேணப்பட்டு வருகின்றன. 

Comments