காதலர் தினத்துக்காக OPPO அறிமுகப்படுத்திய | தினகரன் வாரமஞ்சரி

காதலர் தினத்துக்காக OPPO அறிமுகப்படுத்திய

The Selfie expert மற்றும் leader ஆன OPPO தனது OPPO F5 கையடக்க தொலைபேசியின் புதிய Dashing Blue Limited Edition ஐ அறிமுகம் செய்துள்ளது.

புதிய வர்ணத்திலமைந்த இந்த F5தெரிவு, OPPO வின் முதலாவது முழுத்திரை மாதிரியாக அமைந்துள்ளதுடன், A.I. Beauty Recognition தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. 49,990 ரூபாய் எனும் விலையில் அறிமுகமாகியுள்ள இந்தத் தெரிவு, காதலர் தின காலப்பகுதியில் அன்புக்குரியவர்களுக்கு பரிசளிப்பதற்கு சிறந்த தெரிவாக அமைந்துள்ளது.

OPPO F5 Dashing Blue Limited Edition தெரிவுகள் நாடளாவிய ரீதியில் பெப்ரவரி 14ம் திகதி முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிமுகம் தொடர்பில் OPPO ஸ்ரீலங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லீ கருத்துத் தெரிவிக்கையில், புதிய dashing blue limited editionக்கு இளம் பாவனையாளர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பு காணப்படும் என நம்புகிறேன். நாம் தொடர்ந்து அவர்களின் தேவைகளை நிறைவேற்ற எதிர்பார்ப்பதுடன், புத்தாக்கமான தொழில்நுட்பம், கவர்ச்சிகரமான விலையில் காணப்படுவதால், இந்த சாதனம் அவர்களின் தொழில்நுட்ப ரீதியில் உயர்ந்த சாதனம் மற்றும் நவநாகரிகம் ஆகியவற்றுக்கான எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்வதாக அமைந்திருக்கும் என்றார்.

உலகின் பரந்தளவு இளைஞர்கள் பயன்படுத்தும் வர்த்தகநாமம் எனும் வகையில், OPPO F5 Dashing Blue Limited Edition இனால் நவநாகரீகம், அழகு மற்றும் ரொமான்ஸ் ஆகியவற்றுக்கான அடையாளமாக அமைந்துள்ளது. பின்புறம் பளபளப்பான தெறிப்பு தன்மை கொண்டுள்ளதுடன், இந்த special editionல் கவர்ச்சிகரமான நீலநிற காட்சியம்சம் காணப்படுகிறது. ஒளிக்கு எதிராக பிடிக்கும்போது காட்சிச் சிதறல்களை வெளிப்படுத்துகிறது. பாரம்பரிய மற்றும் எடுப்பான வர்ணத்துடன், OPPO F5 Dashing Blue Limited Edition பிரத்தியேகமான அடையாளத்தை கொண்டுள்ளதுடன், உங்கள் நவநாகரிகத்துக்கு பொருத்தமானதாகவும் அமைந்துள்ளது. 

Comments