வாடிக்கையாளர்களின் நல்லனுபவத்தை விஸ்தரித்துள்ள எயார்டெல் | தினகரன் வாரமஞ்சரி

வாடிக்கையாளர்களின் நல்லனுபவத்தை விஸ்தரித்துள்ள எயார்டெல்

 எயார்டெல் நிறுவனமானது அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான திருப்தியினை வழங்கும் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக மேலதிக சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அண்மையில் “மை எயார்டெல்” (My Airtel) என்ற Appஐ அறிமுகப்படுத்தியதனூடாக எயார்டெல் தமது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையிலான எயார்டெல் தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளை தத்தமது ஸ்மார்ட் தொலைபேசிகளினூடாக பெற்றுக்கொள்வதோடு பிரத்தியேகமான சலுகைகளையும் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளையும் வழங்குகின்றது.

“ஆண்ட்ராய்ட்” (Android) ஆப்பிள் (Apple) மற்றும் வின்டோஸ் (windows) ஸ்மார்ட் தொலைபேசிகளில் பெற்றுக் கொள்ளக்கூடிய மை எயார்டெல் (My Airtel) App ஆனது, வாடிக்கையாளர்கள் தத்தமது முன்செலுத்திய தொலைபேசி கட்டண நிலுவைகள் மற்றும் செலுத்த வேண்டிய கட்டணம் என்பவற்றை இலகுவாக பயன்படுத்தக் கூடிய தளமொன்றினூடாக பார்வையிட்டுக்கொள்ள முடிகின்றது.

அத்துடன் இத்தளத்தினூடாக முற்கொடுப்பனவு செய்யவும் கட்டணம் செலுத்தவும் முடிவதோடு பொதிகளை செயற்படுத்திக் கொள்ளவும் பொழுது போக்குச் சேவைகளை பெற்றுக் கொள்ளவும் முடிகின்றது.

பார்தி எயார்டெல் லங்கா (Bharathi Airtel Lanka) தலைமை நிறைவேற்று அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஸினேஸ் ஹெட்ஜ், வாடிக்கையாளர் நல்லனுபவத்தினை மேலும் விஸ்தரிப்பதில் தமது நிறுவனத்துக்குள்ள தொடர் முனைப்பைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்கள், சேவை நிலையத்தை தொடர்பு கொள்ளாமலே தமக்குரிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு வலுப்படுத்தப்பட்டிருக்கின்ற ஒரு நிலையே மிகத் திறமையான வாடிக்கையாளர் சேவை.

நாம் தொடர்ந்தும் விஸ்தரிக்கப்படும் நிலையில், நமது வாடிக்கையாளர்கள் நம்முடன் மேற்கொள்கின்ற தொடர்பாடல்களை எளிமைப்படுத்தவும், அவர்கள் எந்நேரமும் எவ்விடத்திலிருந்தும் தமது கணக்குகளை கட்டுப்படுத்தக் கூடிய வசதியை ஏற்படுத்தவும் வேண்டியுள்ளது.” என்றார்.

Comments