அதிகம் படித்தவர்கள்! | தினகரன் வாரமஞ்சரி

அதிகம் படித்தவர்கள்!

பல்கலைக்கழகங்கள்ல இப்ப கல்வி சாரா ஊழியர்கள் போராட்டம் நடத்துறதாலை, எல்லாம் 'ஸ்ரக்கா' கிடக்கு. ஒரு மாசத்திற்கு மேல பல்கலைக்கழகங்கள்ல எந்தக் கல்வி நடவடிக்ைகயும் இல்லாமல் இருக்கு. பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டிருக்கு! இதனால் ஆருக்கு நட்டம்?

எடுத்த எடுப்பில் மாணவர்களுக்குத்தான் நட்டம் என்று சொல்றார் நண்பர். ஏன் அரசாங்கத்திற்கும்தான் நட்டம்! வேலை நிறுத்தம் செய்தாலும் சும்மா இருந்தாலும் சம்பளம் குடுக்கோணுமே! பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டிய புலமைப்பரிசில குடுக்க வேணும். எப்பிடிப்பார்த்தாலும் அரசாங்கத்திற்கே கனக்க நட்டம்.

மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்காக நாட்டில் 15 தேசிய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இலங்கையில் மாணவர்களோ, உத்தியோகத்தர்களோ பல்கலைக்கழகங்களை மாதக்கணக்கில் மூடி வைக்கும் கலாசாரம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இத்தனைக்கும் இந்தப் பல்கலைக்கழங்களை நடத்துவதற்கு வருடாந்தம் மக்களின் வரிப்பணத்தில் இருந்து அரசாங்கம் பெருந்தொகை நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது.

கடந்த வருடம் முழுவதும் சைற்றம் தனியார் மருத்துவ கல்லூரி விவகாரமாக இழுபறிபட்டுப் பல மாதங்கள் பல்கலைக் கழகங்கள் இயங்கவில்லை. ஒருவாறு அந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டுப் புதிய மாணவர்களும் சேர்த்துக் ெகாள்ளப்பட்டுப் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. திறந்த மாத்திரத்தில் கல்வி சாரா ஊழியர்கள் இதோ வேலை நிறுத்தத்தில் குதித்துவிட்டார்கள். இதற்கெல்லாம் யார் பொறுப்பு? மாணவர்களுக்கிடையிலான மோதல் முறுகல் என்றால், குறித்த ஒரு பல்கலைக்கழகத்தின் கல்விப் பணியே முடங்கும். எனினும், தற்போதைய பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக ஒட்டுமொத்தமாக பதினைந்து பல்கலைக்கழகங்களிலும் பணிகள் முடக்கம் கண்டுள்ளன. பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் வேலை நிறுத்தக்காரர்கள் செயற்படுகின்றனர் எனக்குற்றச்சாட்டு எழுந்திருந்தாலும் அதனைப் பற்றியெல்லாம் கருத்திற்கொள்ளும் பக்குவம் அந்தக் கல்விசாரா ஊழியர்களுக்குக் கிடையாதோ?

ஒரு தடவை பல்கலைக்கழகம் முடங்கும்போது அதனால், பாதிக்கப்படுபவர்கள் கொஞ்சநஞ்சமல்ல, இரண்டு இலட்சம் பேர்! இந்த இரண்டு இலட்சம் பேருக்கும் எத்தனை இலட்சங்களைச் செலவு செய்ய வேண்டும் என்று எண்ணிப்பாருங்கள்.

பொதுவாகப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றதுமே நமக்கு அதிகம் படித்த பிரமையொன்று ஏற்பட்டுவிடுகிறது. உலகத்தைப்பற்றியும் சமூகத்தைப் பற்றியும் சமூக அநீதிகளைப் பற்றியும் ஒரு பிரக்ைஞ ஏற்படுகிறது. அதுவரைக்கும் ஒன்றும் தெரியாதவர்களாக இருந்துவிட்டுப் பல்கலைக்கழகம் சென்றதும்தான் நீதி, அநீதி எல்லாம் நம் கண்களுக்குத் தெரிகிறது. அத்தனையையும் சேர்த்து நம்மைப் புடம்போட்டுக்ெகாள்வதை விட்டுவிட்டுப் போனதும் போராட்டம் அது இது என்று இறங்கி எதிர்காலத்தைப் பாழாக்கிக்ெகாள்கிறார்களே என்று ஆதங்கப்படுவோர் அதிகம்பேர் இருக்கிறார்கள்.

இங்கு மட்டுமல்ல, வெளிநாடுகளுக்குப் படிக்கப் போகிற அநேகர் அப்படித்தான், படிப்பைக் கோட்டைவிட்டுவிட்டுக் கொடிபிடித்துக்ெகாண்டு இருந்திருக்கிறார்கள். பழைய அரசியல், தொழிற்சங்கத் தலைவர்களின் வரலாறு இப்படித்தான் இருக்கிறது. ஆனால், தற்காலத்தில் கற்பதற்காகச் செல்லும் இளையவர்கள் சற்றுப் புத்திசாதுரியத்துடன் செயற்பட்டுப் பட்டைதீட்டிக்ெகாண்டு வருகிறார்கள். இலங்கையில் அந்த நிலையும் மழுங்கடிக்கப்படும் இடமாகவே தற்கால பல்கலைக்கழங்கள் மாற்றமடைந்து வருகின்றன என்கிறார்கள்.

இந்த நிலையில்தான் வாயில் நுழையாத பெயர்களைக்ெகாண்ட பல பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் கொழும்பில் கிளை பரப்பி விருட்சமாய் வளர்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றை நம் பிள்ளைகள் பணத்தால் போஷித்துக் ெகாண்டிருக்கிறார்கள். பணம் மட்டுமே அவர்களின் குறிக்ேகாள். தனியார் கல்வி நிறுவனங்களை ஆரம்பிப்போர் வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் தம்மைப் பதிவுசெய்துகொண்டு ஒருங்கிணைத்துக்ெகாள்கிறார்கள். ஏழை மாணவர்களிடம் பணத்தைக் கறப்பதற்கு அஃது அவர்களுக்குக் கைகொடுக்கிறது!

இந்தியாவில், அரச பல்கலைக்கழகங்களுடன் இணைந்ததாக ஆயிரக்கணக்கான தனியார் கல்லூரிகள் ஒருங்கிணைக்கப்பட்டுச் செயற்படுகின்றன. இதன் மூலம் இலட்சக்கணக்கான பிள்ளைகள் பட்டம் பெற்று வெளியேறுகிறார்கள். இலங்கையில் அவ்வாறான நிலை வளர்வதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகளாகுமோ தெரியாது. ஒரு கல்லூரியைத் தொடங்கியதற்கே பல்வேறு கோணங்களில் எதிர்ப்பு. அரிதாக உள்ள பதினைந்து பல்லைக்கழகங்களில் வருடாந்தம் 25ஆயிரம் மாணவர்கள் உள்வாங்கப்படுகிறார்கள். சுமார் நாற்பதினாயிரம் பேர் பல்கலைக்கழகக் கல்வியை மேற்கொள்ள முடிவதில்லை. நிலைமை இவ்வாறிருக்க உள்வாங்கப்படும் 25 ஆயிரம் மாணவர்களது கல்வியும் இப்படி பாழாகிக்ெகாண்டிருக்கிறது.

வெளிநாடுகளில் ஒரு மாணவர் தனது பத்தொன்பதாவது வயதில் முதலாவது பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்கிறார். இலங்கையில் குறித்தொதுக்கும் காலத்தைவிடவும் கூடுதலாக வீணடிக்க வேண்டிய துர்ப்பாக்கியம் மாணவர்களுக்கு ஏற்படுகிறது.

எனவே, பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரும் மாணவர்கள் இன்று தமது இலக்ைக நோக்கி மாத்திரமே செயற்பட வேண்டியது அவசியமாகும் என்கிறார்கள் கல்வியாளர்கள். கல்வி கற்றுத் தேர்ந்ததன் பின்னர் அவர்கள் போரட்டத்தில் மட்டுமல்ல விரும்பினால் அரசியலில்கூட ஈடுபட்டுச் சமூகத்தைச் சீர்திருத்தலாம் என்பது கல்வியாளர்களின் கருத்து. தற்போது இடம்பெற்றுக்ெகாண்டிருக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மாணவர்கள் எந்த வகையிலும் காரணம் அல்லவென்றாலும், எதிர்காலத்தில் அவர்கள் எல்லோருக்கும் முன்மாதிரியான மாணவர்களாக மிளர வேண்டும் என்பது ஒட்டுமொத்த கல்விச் சமூகத்தின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது மாணவர்களின் பொறுப்பாகும். அப்போதுதான் அதிகம் படித்தவர்கள் யார் என்பதன் உண்மையான அர்த்தம் புலப்படும்.

Comments