இயக்குனர் சுசீந்திரன் படத்திலிருந்து விலகினார் யுவன்! | தினகரன் வாரமஞ்சரி

இயக்குனர் சுசீந்திரன் படத்திலிருந்து விலகினார் யுவன்!

யுவன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவருக்கு என்று சில பேவரட் இயக்குனர்கள் உள்ளனர்.

அவர்கள் படத்தில் எப்போதும் இவர் இணைந்து பணிபுரிவார், அப்படி யுவனின் பேவரட் இயக்குனர்களில் ஒருவர் தான் சுசீந்திரன்.

இவரின் நான் மகான் அல்ல, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர் ஆகிய படங்களுக்கு யுவன் தான் இசையமைப்பாளர். பிறகு ஒரு சில காரணங்களால் இந்த கூட்டணி பிரிய, அதை தொடர்ந்து கோல் என்ற புட்பால் படத்தில் சமீபத்தில் இணைந்தனர். தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை, அந்த படத்திலிருந்தும் யுவன் விலகிவிட்டார், இவருக்கு பதிலாக அரோல் குரோலியை கமிட் செய்துவிட்டனர்.

மேலும், கோல் என்று ஆரம்பித்த இப்படம், தற்போது சாம்பியன் என்ற பெயரில் மாற்றப்பட்டு எடுக்கப்பட்டு வருகின்றது.

Comments