விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் MA’s Kitchen | தினகரன் வாரமஞ்சரி

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் MA’s Kitchen

நியாயபூர்வமான வியாபார விழுமியங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டு, வளர்ச்சி கண்டுள்ள MAs Kitchen நாட்டில் மிகவும் நம்பிக்கை மிக்க உணவு பதனிடல் நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்ந்து வருவதுடன், உலக நியாயபூர்வ வர்த்தக தினத்தை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த வாழ்வாதாரத்தைத் தோற்றுவிப்பதற்கு நியாயபூர்வமான வியாபாரத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து, அதனை ஒருங்கிணைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆண்டு தோறும், மே மாதத்தில் வருகின்ற இரண்டாவது சனிக்கிழமையன்று உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகின்ற உலக நியாயபூர்வ வியாபார தினமானது, நியாயபூர்வமான வியாபார முறைமையை நிலைபேறான அபிவிருத்திக்கு வழிகோலுகின்ற, கண்ணியமான பணிச் சூழல்கள், பொறுப்புணர்வுடனான உற்பத்தி மற்றும் சிறப்பான வாழ்வாதாரம் என்பவற்றினூடாக சிறு உற்பத்தியாளர்களுக்கு பொருளாதார வலுவூட்டுவதை நினைவு கூருகின்றது.

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக விவசாய சமுதாயங்களுக்கு அபிவிருத்தி வாய்ப்பினை மேம்படுத்தல், சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தல் மற்றும் உற்பத்திகளுக்கான நியாய விலையை பெற்றுக்கொடுத்தல் போன்ற செயற்பாடுகளை MA’s Kitchen நிறுவனமானது முன்னெடுத்து வந்துள்ளது.

நியாயபூர்வ வியாபாரத்திற்கான முத்திரையை வழங்கும் Fairtrade Labelling Organization என்ற நிறுவனத்தின் நியாயபூர்வ வியாபார சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ள பெருமையைக் கொண்டுள்ள நிறுவனம் என்ற வகையில், நியாயபூர்வ வியாபார அடிப்படையில் மூலப்பொருட்களை பதனிடுவதற்குரிய அங்கீகாரத்துடன், தேங்காய்ப்பால் மற்றும் கறிப்பசை என்பவற்றை உற்பத்தி செய்து உலகெங்கிலுமுள்ள நுகர்வோருக்கு வழங்கி வருகின்றது.

இந்த அங்கீகாரமானது கட்டுப்பாடான விதிமுறைகளை உறுதி செய்வது மட்டுமல்லாது, விவசாயிகளுக்கு குறைந்த விலையைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்து நிலைபேறான உற்பத்தியையும், மேலதிகமான நியாயபூர்வ பெறுமதியை (Fairtrade Premium) விவசாய சமுதாயங்களுடைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வழங்குவதையும் உறுதிசெய்கின்றது.

MA’s Kitchen நிறுவனமானது நியாயபூர்வமான வியாபாரத்தினுடைய மேலதிக பெறுமதியான இரண்டு மில்லியன் ரூபாவை விவசாய உற்பத்தி வழங்குனர்களுக்கு தனது பங்களிப்பாக வழங்கியுள்ளது.

நியாயபூர்வ வியாபாரத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக SAFENET (Sustainable Agri Farm Enterprise Network - நிலைபேறான விவசாய பண்ணை வலையமைப்பு) எனும் அமைப்பானது MA’s Kitchen ஆல் அமைக்கப்பட்டுள்ளது.

Comments