கப்பல் சரக்கு கையாள்கைக்கான பிராந்திய கேந்திரநிலையமாக இலங்கை | தினகரன் வாரமஞ்சரி

கப்பல் சரக்கு கையாள்கைக்கான பிராந்திய கேந்திரநிலையமாக இலங்கை

 

இந்து சமுத்திரம் மற்றும் ஆசியப் பிராந்தியங்களுக்கான தனது எதிர்கால கப்பல் சரக்கு கையாள்கைக்கான கேந்திரநிலையமாக இலங்கை விளங்கும் என, சுவிஸ் நாட்டை தளமாகக் கொண்டியங்கும் சரக்கு மற்றும் தளபாட போக்குவரத்துத் தீர்வு வழங்குனரான M&M Militzer &Munch குழுமம் அறிவித்தது.

“உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுபோல இலங்கையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கின்றது. கொழும்புத் துறைமுகத்தின் சரக்குக் கையாள்கை விரிவடையச் செய்யப்பட்டு, துறைமுகத்தின் கொள்கலன் கையாளுகைத் திறன் அதிகரிக்கப்பட்டமையானது, கப்பற்போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியை பறைசாற்றுகின்றது. கப்பற் போக்குவரத்தினைக் கருத்திற்கொள்கையில் சிறந்தமுறையில் இணைக்கப்பட்ட நாடு என்ற நிலையை இலங்கை தெற்காசியவில் பெற்றுள்ளது. இந்தியாவையும் விஞ்சி, ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி மாநாடு (UNCTAD) வெளியிட்ட ‘Liner Shipping Connectivity Index 2017’ எனும் சஞ்சிகையில் உலகில் 15 ஆவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. இலங்கையை முற்றுமுழுதான கடற்படை மற்றும் வர்த்தக கப்பற்போக்குவரத்துக் கேந்திரநிலையமாக மாற்றுவது என்ற அரசின் இலக்கை மீள நிலைநிறுத்தும் முகமாக M&M ஆனது அதனது சரக்குக் கையாள்கை நடவடிக்கைகளை இலங்கையில் ஸ்திரப்படுத்துவதாக அறிவித்துள்ளதாக M&M Militzer &Munch (Pvt) Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளர், டிலும் ஸ்டெம்போ அறிமுக நிகழ்வில் கூறினார்

நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ள, M&M Militzer & Munch குழுமப் பிரதிநிதி, திருமதி தாட்டியான ஷேபர் இந்நிகழ்வில் கெளவர அதிதியாகக் கலந்துகொண்டார்.

ஓட்டுமொத்தமாக, இலங்கையின் போக்குவரத்து சேவையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், இலங்கையின் சேவைத்துறையை 2017 ஆம் ஆண்டில் விரிவடையச்செய்திருந்தது. அத்துடன் அவ் வளர்ச்்சியானது 2018 ஆம் ஆண்டையும் தாண்டிச்செல்லும் என்றும் கூறிய ஸ்டெம்போ இலங்கை அரசின் முயற்சிகளைப் பாராட்டினார்.

“இலங்கை அரசானது பொதுவாக போக்குவரத்துத் துறையையும், குறிப்பாக கப்பற் போக்குவரத்துறையை முன்னேற்றுவதிலும், நிலைபேண்தகு முயற்சிகள் பலவற்றை எடுத்துள்ளது. ”

Comments