இலங்கையில் அதிகமாக விரும்பப்படும் வர்த்தக நாமமாக பனடோல் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையில் அதிகமாக விரும்பப்படும் வர்த்தக நாமமாக பனடோல்

SmithKline Beecham (GlaxoSmithKline) நிறுவனத்தின் முதன்மை வர்த்தக நாமமும், நாட்டில் உள்ள பெரும்பாலானவர்களால் நாடப்படும் வலி நிவாரணியுமான பனடோல், Brand Finance இன் 2018 தரப்படுத்தலில் இலங்கையில் மிகவும் விருப்பப்படும் வர்த்தக நாமங்களில் இரண்டாவதாகத் திகழ்ந்துள்ளது.

2017 ஆம் ஆண்டு மக்களால் மிகவும் விருப்பப்படும் வர்த்தக நாமங்களில் ஏழாவது இடத்தைப் பிடித்திருந்த பனடோல், கடந்த பல வருடங்களாக மக்களால் விரும்பப்படும் வர்த்தக நாமங்களில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்துவருகிறது.

பாரம்பரிய மருத்துவ நாமமான பனடோல் மில்லியன் கணக்கான இலங்கையர்களில் அக்கறை கொண்டிருப்பதுடன் அவர்களுக்கு வலி நிவாரணியாகவும் விளங்குகிறது. கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பெரும்பாலானவர்களால் நாடப்படும் வலி நிவாரணியாகக் காணப்படுவதுடன், உடல்ரீதியான வலிகளிருந்து விடுதலைபெற்று சுமூகமான வாழ்க்கையை வாழ்வதற்கு நண்பனாக உதவிவருகிறது.

Brand Finance என்பது வர்த்தகம் தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் மூலோபாய ஆலோசனைகளை வழங்கும் உலகின் முன்னணி சுயாதீன அமைப்பாகும். இது லண்டன் நகரில் உள்ள பட்டியலிட்டப்பட்ட Brand Exchange கட்டடத்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. Brand Finance தற்பொழுது உலகளாவிய ரீதியில் 20 இடங்களில் வியாபித்துள்ளது. உலகம் முழுவதிலும் சகல துறைகளிலும் உள்ள 3,500 ற்கும் அதிகமான வர்த்தக நாமங்களை ஒவ்வொரு வருடமும் மதிப்பீடு செய்கிறது. இந்த மதிப்பீட்டு முடிவுகள் பட்டியலிடப்பட்டு ஊடகங்களில் வெளியிடப்படும். இலங்கையில் பெறுமதிவாய்ந்த வர்த்தக நாமங்கள் LMD இன் ஊடகச் சேவையான வருடாந்த வர்த்த நாமங்களில் வெளியிடப்படும்.

பனடோல் பன்னாட்டு சுகாதார நிறுவனமான GlaxoSmithKline நிறுவனத்தின் முதன்மை வர்த்தக நாமம் என்பதுடன், Horlicks, Sensodyne, Viva, Eno மற்றும் Iodex போன்ற வீட்டுக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது.

இலங்கையில் ஐந்து தசாப்த வரலாற்றைக் கொண்டிருக்கும் பனடோல், பல்வேறு புத்தாக்கமான பிரசாரங்களின் ஊடாக பாதுகாப்பான மற்றும் பொறுப்புவாய்ந்த மருத்துப் பாவனையை வலியுறுத்திவருகிறது.

Comments