ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

 “அண்ண குடு விக்கிறவைய கொழும்பில கொன்டு போடுறவையே”

“ஓமப்பா போதை வஸ்து வியாபாரத்தில சம்பந்தப்பட்ட நிறையப் பேர் இந்த மூன்டு மாச காலத்தில கொழும்பில கொல்லப்பட்டிருக்கினம்”

“யாரோ மரணதண்டனை குடுக்கினம் போலக்கிடக்கு, அந்நியன் படத்தில வருகிற மாதிரி”

“ உலகத்தில அதிக பணம் கொழிக்கிற பிஸ்னஸ் எது என்டு உனக்குத் தெரியுமே?”

“தெரியாதண்ண”

“ உலகத்தில பணம் கொழிக்கிற பிஸ்னஸ் ஆயுத விற்பனைதான்”

“உந்த துப்பாக்கி குண்டு விக்கிறதென்ன”

“உது மட்டுமில்ல யுத்த டாங்கி, பிளேன், நீர்மூழ்கி என்டு உதில நிறையக் கிடக்குது.”

“இரண்டாவதா அதிக லாபம் வருகிற பிஸ்னஸ்”

“போதை வஸ்து விற்பனையோ?

“எப்பிடிப் பிடிச்சனீ”

“நீங்கள் ஏதோ கிடுக்குப்பிடி போடுறியள் என்டு தெரிஞ்சுது. அதைத்தான் வலிஸா பிடிச்சுக் கொண்டனான்”

“ஒரு வருசத்தில 600 பில்லியன் டாலருக்கும் ஒரு டிரில்லியன் டாலருக்கும் இடைப்பட்ட அளவு பெறுமதியான பிஸினஸ்”

“ம்ம்ம்ம் பெரிய கணக்கென்ன”

“இந்தக்கிழமை கொழும்பில 96 கிலோ ஹெரோயின பிடிச்சிருக்கினம்”

“என்னது. 96 கிலோவோ?”

“உது வாயப்பிளக்கிற விசயந்தான். போலிஸ் போதை ஒழிப்பு பணியகம் இருக்கேல்ல. உதை 1973 ல ஆரம்பிச்சவை. ஆரம்பிச்ச உத்தன வருசத்தில இவை பிடிச்ச ஆகக் கூடிய ஹெரோயின் தொகை உதுதானாம்.”

“எங்க இருந்து பிடிச்சினம்”

“உதில 36 கிலோவ ஹோன்டா ஸ்போர்ட்ஸ் காரொன்டில இருந்து பிடிச்சிருக்கினம். மிகுதி 60 கிலோவ பத்தரமுல்லை பகுதியில உள்ள 3 மாடி வீடொன்டில இருந்து பிடிச்சவை”

“தகவல் எதுவும் கிடைச்சிருக்கும். உதாலதான் பிடிச்சருப்பினம்”

“ஓமோம். தகவல் கிடைச்சுத்தான் பிடிப்பினம். ஆனா உந்த தகவல் அவையளின்ட ஆக்களிட்ட இருந்தும் கிடைச்சிருக்குமென்ன. மற்றொரு விசயமென்னென்டா உதே நாளில பாகிஸ்தானில இருந்து வந்தவர் ஒருவரிட்ட இருந்து 4 கிலோ ஹொரோயின பிடிச்சிருக்கினம். அதின்ட பெறுமதி 50 லட்ச ரூபாவாம்”

“எல்லாம் லட்சக்கணக்கிலதான் இருக்குதென்ன?”

“லட்சத்தில என்டு சொல்லுறது சில்லறை கணக்கு. மொத்தத்தில எல்லாம் கோடியிலதான் புரளுது. உது மட்டுமில்ல. கொக்கேய்ன் என்டு ஒரு வகை போதை வஸ்து கிடக்குது”

“கொக்கனொ. அப்பிடியும் பேர் வைப்பினமோ?”

“நீயொன்டு உதுக்கு அஜா, மஜா, குஜா என்டும் வைப்பினம். நான் சொன்னனில்ல கொக்கேய்ன். உதில 1770 கிலோவ ஒருசத்தில பிடிச்சிருக்கினம். உதில 840 கிலோ பிரேசிலில இருந்து வந்த சீனி கன்டெயினரில இருந்து பிடிபட்டிருக்கு”

“சீனியோட சீனியா கொண்டுவந்து போட்டினம். எப்பிடியண்ண உதை கொண்டு வருகினம்?”

“இலங்கையில இருக்கிற ஒரே பெரிய துறைமுகம் கொழும்புதான். சரியே.

“ஆனா எல்லா சரக்குகளும் கொழும்புக்குத்தான் வருகுது. குன்டெய்னர் என்டுற கொள்கலன்கள் பெருமளவில வாரதால எல்லா கொள்கலன்களையும் செக் பண்ண முடியாமக் கிடக்குது. ஏனென்டா ஆக்கள் போதாது. உதை சாக்கா வச்சிக்கொண்டு இந்தியா, ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான, பங்களாதேஸ் ஆகிய நாடுகளில உள்ள போதைவஸ்து கடத்தல்காரர்கள் தங்கட சரக்குகளை கொழும்புக்கு அனுப்புகினம். இலங்கையின்ட சுங்க அதிகாரிகளிட்ட இருந்து தப்பிச்சுது என்டா உதை அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா என்ட நாடுகளுக்கு அனுப்பினம்.”

“அப்ப இலங்கைதான் உதுக்கு மையமாக் கிடக்குதென்ன?”

“கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு நுழையிறதுக்கு முன்னமே அதில இருக்கிற சரக்குகளை சின்னச்சின்ன மீன்பிடி படகுகளில ஏத்தி கரைக்கு கொண்டு போறவையும் இருக்கினம்.”

“இங்க இருந்து வெளிநாட்டுக்கு அனுப்பினமென்ன?”

“இலங்கை மட்டுமில்ல சின்னராசு, இந்த பிராந்தியத்தில சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து, இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ் என்டு எல்லா நாட்டிலயும் இந்த பிரச்சினை ரொம்ப மோசமாக் கிடக்குது.”

“அண்ண போதைவஸ்து கடத்தலுக்கு மரண தண்டனை விதிப்பினமே?”

Comments