அறிமுகப்படுத்தியுள்ள உஸ்வத்த கோல்டன் பிஸ்கட் வகைகள் | தினகரன் வாரமஞ்சரி

அறிமுகப்படுத்தியுள்ள உஸ்வத்த கோல்டன் பிஸ்கட் வகைகள்

இலங்கையின் மிகவும் பழமைவாய்ந்த இனிப்பு வகை உற்பத்தியாளரான Uswatte Confectionery Works, உஸ்வத்த கோல்டன் பிஸ்கட் வகைகளை அறிமுகப்படுத்தி, பிஸ்கட் சந்தையில் தனது செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளது. இதன் அறிமுக நிகழ்வு கடந்த திங்களன்று (9) கொழும்பு ஹில்டல் ஹோட்டலில் நடைபெற்றது.

இலங்கை நுகர்வோருக்கு அதிசிறந்த தரம் கொண்ட பிஸ்கட்டுக்களைத் தயாரித்து, வழங்க வேண்டுமென நிறுவனத்தின் ஸ்தாபகரான காலஞ்சென்ற பீ.ஜே.சீ. பெரேராவின் (கிறிஸ்டி) நீண்டகால கனவு நனவாகும் வகையில், பல ஆண்டுகளாக முன்னெடுத்த தெளிவான திட்டமிடல் மற்றும் ஆயத்த வேலைகளைத் தொடர்ந்து, தற்போதைய பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான எஸ். குயின்டஸ் பெரேராவின் வலுவான தலைமைத்துவத்தின் கீழ் பிஸ்கட் சந்தையிலும் நிறுவனம் தற்போது காலடியெடுத்து வைத்துள்ளது.

Uswatte Golden Biscuits உற்பத்தி வரிசையில் மூன்று கடினவகை (Hard Dough) பிஸ்கட்டுக்களும், மூன்று மென்வகை (Soft Dough) பிஸ்கட்டுக்களும் அடங்கியுள்ளன. கடின வகை பிஸ்கட்டுக்களாக Cream Cracker, Marie மற்றும் Lemon Puff ஆகியன காணப்படுவதுடன், Chocolate Cream, Nice மற்றும் Shorties ஆகியன மென்வகை பிஸ்கட்டுக்களாக உள்ளன. இந்த பிஸ்கட்டுக்கள் அனைத்தும் சர்வதேச தரத்திற்கு ஈடாக, சுகாதாரத்தைத் தூய்மையாகப் பேணி உற்பத்தி செய்யப்படுவதுடன், ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளிலுள்ள உலகின் மிகச்சிறந்த சுவையூட்டி நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்ட மிகச்சிறந்த மூலப்பொருட்கள் மற்றும் சுவையூட்டிகள் உபயோகிக்கப்படுகின்றன.

நாட்டில் அனைத்து பாகங்களையும் உள்ளடக்கும் வகையில் சிறப்பாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விற்பனை மற்றும் விநியோக வலையமைப்பினை உஸ்வத்த நிறுவனம் கொண்டுள்ளது. பொதுவான மற்றும் நவீன வர்த்தகம் அடங்கலாக 80,000 இற்கும் மேற்பட்ட விற்பனை மையங்களில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி வரிசையும் கிடைக்கப்பெறுகின்றது.

மேலும், ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், சீஷெல்ஸ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கும் தனது உற்பத்திகளை நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகின்றது.

Comments