மீண்டும் வருகிறது Jeewa Australian Education Roadshow | தினகரன் வாரமஞ்சரி

மீண்டும் வருகிறது Jeewa Australian Education Roadshow

பல நிறுவனங்களின் அலட்சிய போக்கைப் போலன்றி நாம் மாணவர்களுக்கான சகல சேவைகளையும் வழங்குவதன் முக்கியத்துவத்தை பெற்றோர் புரிந்து கொள்வது மிக முக்கியமாகும் என்கிறார், Jeewa Education நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கோலித்த பெர்னாண்டோ. தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவரது பேட்டியின் முழுவிபரம் வருமாறு......

கேள்வி: இலங்கையில் அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுப்பி வைக்கும் ஏராளமான சேவை வழங்குநர்கள் இருக்கின்ற போதும் மாணவர்களும் பெற்றோம் எதற்காக Jeewa Education கல்வியகத்தை நாடுகிறார்கள்?

பதில்: Jeewa Education இலங்கையில் நிறைந்த அனுபவத்துடன் கூடிய நன்கு ஸ்திரமான அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுப்பி வைக்கும் நம்பகமான நிறுவனமாகும். அவுஸ்திரேலியாவில் 60க்கும் அதிகமான மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களை அது பிரதிநிதித்துவம் செய்கிறது. கடந்த 15 வருட காலத்தில் அவுஸ்திரேலிய கல்வி வழங்குநர்களிடமிருந்து பல்வகை பாராட்டுக்கள் எமக்கு கிடைத்துள்ளன. நாங்கள் முதன்முதலாக 2003 ஆம் ஆண்டில் பாணந்துறையில் எமது கல்வியகத்தை ஆரம்பித்தோம். எமது சேவைக்கு வரவேற்பு அதிகரிக்கவே பாணந்துறையிலிருந்து பத்தரமுல்ல, கொழும்பு, கண்டி ஆகிய நகரங்களுக்கு எமது சேவையை விஸ்தரித்தோம். உள்ளூர் அலுவலகங்களை தவிர அவுஸ்திரேலியாவில் மெல்போர்ண், பிரிஸ்பேன் ஆகியவற்றுக்கும் உயர்கல்வி வழங்கல் சேவையை நாம் விஸ்தரித்தோம்.

கேள்வி: உங்களிடம் உள்ள விசேடத்துவம் என்ன?

பதில்: மாணவர்களது விசா நடை முறைகள், அவுஸ்திரேலியாவில் அவர்களுக்கான தேவைகள் ஆகியன குறித்து அவர்களுக்கு உதவுகிறோம். பல நிறுவனங்களின் அலட்சிய போக்கைப் போலன்றி நாம் மாணவர்களுக்கான சகல சேவைகளையும் வழங்குவதன் முக்கியத்துவத்தை பெற்றோர் புரிந்து கொள்வது மிக முக்கியமாகும். பெற்றோர், பிள்ளைகளை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பினாற்போல் அவர்களது பொறுப்பு நிறைவேறிவிடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அங்கு அவர்களது படிப்பு பூர்த்தியானதும் அவுஸ்திரேலியாவில் அவர்கள் தங்கியிருக்க இரண்டு வருட கற்கைக்கு பின்னரான விசா அவர்களுக்கு வழங்கப்படும். நாங்கள் மாணவர்களுக்கு முழுமையான பெக்கேஜினை வழங்குகிறோம். நாங்கள் உங்களுக்கு கட்டணமற்ற ஒரு சேவையை செய்கிறோம். எம்மிடம் நேரில் வந்து வித்தியாசத்தை உணர்ந்திடுமாறு மக்களை அழைக்கிறோம்.

கேள்வி: அவுஸ்திரேலிய கல்வியார்கள் மத்தியில் உங்களுக்கான அங்கீகாரம் எவ்வாறிருக்கிறது?

பதில்: Deakin University எங்களை இலங்கையில் 2017 ஆம் ஆண்டுக்கான தங்கள் உயர் செயற்பாட்டாளர் என்றும் Swinburne University எங்களை 2006, 2016ஆம் ஆண்டுகளுக்கான தங்கள் உயர் செயற்பாட்டாளர் என்றும் அங்கீகரித்துள்ளன. University of South Australia எங்களை 2017ஆம் ஆண்டுக்கான தங்கள் உயர் செயற்பாட்டாளர் என்றும் பிரிட்டிஷ் கவுன்சில் தொடர்ச்சியாக 3 வருடங்களுக்கு எங்களை தங்கள் பிளட்டினம் பங்காளர் என்றும் அங்கீகரித்துள்ளது.

கேள்வி: கற்கைநெறியின் முதல் பகுதியை இலங்கையில் கற்றிட விரும்புவோருக்கு எத்தகைய தீர்வுகளை தருவீர்கள்?

பதில்: க.பொ.த உயர்தரம் பூர்த்தியானதும் அவுஸ்திரேலியா செல்ல முடியாதவர்களுக்கு பல்கலைக்கழக மாற்றல் திட்டம் எம்மிடம் உள்ளது. இச்சந்தர்ப்பத்தில் நாங்கள் Nawaloka College, Metropolitan College, CA Sri lanka மற்றும் Wisdom உடன் இணைந்து செயற்படுகிறோம். எமது பல்கலைக்கழக மாற்றல் திட்டத்தின் கீழ் மாணவர்கள் இலங்கையில் அவர்களது கற்கையின் ஒரு பகுதியைப் பூர்த்தி செய்ய சில காலம் எடுக்கும். அதன் பின்னர் மிகுதிப் பகுதியை தொடர்வதற்கு அவர்கள் அவுஸ்திரேலியா செல்வார்கள்.

கேள்வி: இலங்கை மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் மேலதிக காலத்தை செலவிட வேண்டி இருப்பது பற்றி மேலும் கொஞ்சம் விளக்குவீர்களா?

பதில்: Potensure எனப்படும் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுடன் நாம் இணைந்து செயற்படுகின்றோம். அந்நிறுவனம் எமது மாணவர்களுக்கு தேவையானவற்றை அங்கு செய்து தருகிறது. அச்சேவைகளில் விமான நிலையத்திலிருந்து தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்வதிலிருந்து போக்குவரத்து, பகுதிநேர வேலை ஒழுங்கு செய்தல் போன்றவை அடங்குகின்றன.

கேள்வி: இவ்வருட றோட் ஷோ நடத்துவது பற்றி சற்று விளக்கமளிக்கவும்?

பதில்: இந்த வருட றோட் ஷோ இலங்கையில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரும் அவுஸ்திரேலிய கல்வி நிகழ்ச்சியாக இருக்கும். Jeewa Education றோட் ஷோ காலி, கண்டி, கொழும்பு ஆகிய முக்கிய நகரங்களுக்கு தகவல்களை எடுத்து செல்கிறது. அந்தந்தப் பகுதி உள்ளூர் மக்கள் இவ்றோட் ஷோவில் பங்குபற்றலாம். றோட் ஷோவில் அவுஸ்திரேலிய கல்வியகங்களை சேர்ந்த 30க்கும் அதிகமான வெளிநாட்டு கல்விமான்கள் பிரதிநிதித்துவம் செய்வார்கள். ஆதலால், வெளிநாடொன்றில் கல்வியை தொடர்வதற்கு தேவைப்படும் சகல தகவல்களையும் மாணவர்களும் பெற்றோரும் பெற்றுக்கொள்ளலாம். எதிர்வரும் பொருளாதார மையங்களுக்கான வாய்ப்பை எடுப்பதன் மூலம் இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு கல்வியூட்டுவது எமது கடமையாகும் என்று நாம் நம்புகிறோம். வெளிநாட்டு கல்வியை வழங்குவதன் மூலம், உயர்தர பரீட்சையில் சித்தி அடைந்தும் அரச பல்கலைக்கழகம் ஒன்றில் இணைந்து கொள்ள முடியாத மாணவர்கள் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு குறித்து தங்கள் ஆற்றலை மதிப்பிடும் சந்தர்ப்பத்தை நாம் வழங்குகிறோம்.

இப்பரீட்சையை எழுதியவர்களும் மதிப்பீட்டுக்கு வரலாம். லண்டன் சாதாரண தரம், உயர்தரம் ஆகிய பரீட்சை முடிவுகள் அண்மையில் வெளியாகின. முதுமானி ஆய்வு, கலாநிதி கற்கைநெறிகள் ஆகியன பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு பல்கலைக்கழக பிரதிநிதிகளை சந்திப்பதற்கு ஜீவா அவுஸ்திரேலிய றோட் ஷோ அரிய வாய்ப்பாகும். எமது பெப்ரவரி மாத றோட் ஷோவில் பங்குபற்றிய 80க்கும் அதிகமான மாணவர்கள் புலமைப்பரிசில்களைப் பெற்றுக் கொண்டமையையும் உயர் பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட அநேகமான மாணவர்கள் செப்டெம்பர் மாத றோட் ஷோவில் கலந்து கொண்டு புலமைப்பரிசில்களையும், தள்ளுபடிகளையும் பெற்றுக் கொள்வார்கள் என்பதையும் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

கேள்வி: றோட் ஷோ வில் கலந்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படும் கல்வி நிறுவனங்கள் எவை?

பதில்: றோட் ஷோவில் Queensland University of Technology, RMIT University, Swinburne University, University of Canberra, University of South Australia, University of Southern Queensland, University of Tasmania, University of Technology Sydney, University of Westerns Australia, University of Wollongong, Victoria University, Western Sydney University, Australian Catholic University, Charles Darwin University, Charles Sturt University, CQ University, Curtin University, Deakin University, Edith Cowan University, Excelsia College, Federation University, Flinders University, Griffith University, La Trobe University, Melbourne Institute of Technology , Murdoch University, Queensford College, ACTWA, Box Hill, Chisholm, Holmesglen, Kangan Institute , Griffith College, La Trobe College, Edith Cowan College, Deakin College, UC College ஆகியன கலந்து கொள்ளும் என நாம் எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: குடியேற்றத் திட்டங்களையும் நீங்கள் ஆதரிக்கின்றீர்களா?

பதில்: நாங்கள் கல்வி ஆலோசகர்கள். குடியேற்ற ஆலோசகர்கள் அல்ல. மாணவர்கள் அவர்களது கற்கைக் காலம் முடியும் வரை அவுஸ்திரேலியாவில் தங்கி இருக்கலாம். மேலும், கற்கைக்குப் பின்னரான விசாவுக்கும் அவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கேள்வி: அவுஸ்திரேலியா தவிர்ந்த வேறெந்த நாடுகளிலாயினும் உயர் கல்வியை மேற்கொள்ள நீங்கள் உதவுகிறீர்களா?

பதில்: நியூசிலாந்து, கனடா, பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் கொழும்பிலுள்ள எமது பிரதான காரியாலயம் ஊடாக மாணவர்களை சேர்க்கிறோம்.

Comments