அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட 'THURSTAN 42' வீடமைப்புத் திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட 'THURSTAN 42' வீடமைப்புத் திட்டம்

இலக்கம் 42 தேஸ்டன் றோட், கொழும்பு 3 என்ற விலாசத்தில்'THURSTAN 42' வீட்டுத் தொகுதி அமையவுள்ளது. இது 12 மாடிகளைக் கொண்ட சொகுசு வீட்டுத் தொகுதியாகும். அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கிய 32 வீடுகள் இந்த சொகுசு வீட்டு தொகுதியில் அமையவுள்ளன.

கொழும்பு நகரிலுள்ள பிரபல பாடசாலைகளான றோயல் கல்லூரி, லேடீஸ் கொலேஜ், தேர்ஸ்டன் கல்லூரி, விசாகா கல்லூரி, ஸ்டெப்பர்ட் சர்வதேச கல்லூரி ஆகியவை 'THURSTAN 42' வீட்டுத் தொகுதிக்கு அருகில் உள்ளன. அத்துடன், டேர்டன்ஸ் வைத்தியசாலை, கார்கில்ஸ், புட்சிட்டி, சுதந்திர சதுக்கம் ஆகியவையும் மிக அருகாமையிலேயே உள்ளன.

THURSTAN 42 வீட்டுத் தொகுதியில் உள்ள 32 வீடுகளும் நான்கு வெவ்வேறு மாதிரிகளில் அமைந்துள்ளன. இவை ஒவ்வொன்றினதும் பரப்பளவு 1550 சதுர அடியில் இருந்து 1710 சதுர அடிகள் வரையிலாகும். 12வது மாடியில் நீச்சல் தடாகம் அமைந்துள்ளது. அதன் அருகே சிறுவர்களுக்கான நீச்சல் குளம் உள்ளது. அத்துடன் நவீன வசதிகளுடன் கூடிய ஜிம், 100 பேர் வரை அமரக்கூடிய குளிரூட்டப்பட்ட மண்டபம் பொழுதுபோக்கு மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அமைவாக உள்ளது.

ஒவ்வொரு வீட்டுத் தொகுதியும் மூன்று படுக்கை அறைகளுடன் அனைத்து நவீன வசதிகளையும் கொண்டுள்ளது. வீட்டுத் தொகுதியின் 12 ஆவது மாடியில் இருந்து பார்த்தால் கொழும்பு நகரின் பெரும் பகுதி கண்கொள்ளாக் காட்சியாகத் தெரியும்.

விருந்தினர்களுக்கான கண்கவர் வரவேற்பறை, தொடர்ச்சியான கேஸ் விநியோகம், பல் மட்ட கழிவகற்றல் முறைமை, இரு கார் நிறுத்தக்கூடிய சாலைகள், மின்சார கார்களுக்கு மின்னேற்றும் வசதிகள் ஆகியவை குடியிருப்பாளர்களுக்கான இதர வசதிகளாகும். THURSTAN 42 என்ற இந்த வீடமைப்பு தொகுதி Bricks Developers நிறுவனத்தின் உரிமையாளர் சங்கர் சோமசுந்தரத்தின் எண்ணக்கருவில் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments