பெண் அறிவியலுக்கு நேர்ந்த கொடுமை | தினகரன் வாரமஞ்சரி

பெண் அறிவியலுக்கு நேர்ந்த கொடுமை

415ஆம் ஆண்டு உலகில் அறிவியலாளர்களை மூட நம்பிக்கையாளர்கள் என மதவாதிகள் கூறி அவர்களை கொலை செய்யவும் துணிந்த காலமாக கருத்தப்பட்டது. அக் காலகட்டத்தில் வாழ்ந்த வானியலாளரான HYPATIYA ஹைபதியா என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்படுகிறாள். அன்று 415 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு நாள். மதவாதிகளிடம் அக்கப்பட்ட அவளை தேவாலயத்திற்கு கொண்டு சென்று நிர்வாணமாக்கி “தாக்குங்கள்” என்று மக்களுக்கு ஆணையிட்டார்கள். பின்னர் சித்திரவதை செய்து பாதையில் தரதர வென இழுத்துச் சென்று அவளை கொன்றார்கள். அவளின் சடலத்தை துண்டு துண்டாக்கி வெறித்தனத்தில் சிரித்தார்கள். சின்ரோன் தேவாலயத்துக்கு அருகில் தீயிட்டார்கள்.

இவ்வாறான கொடூரங்களை புரிவதற்கு அவள் செய்த குற்றம் என்னஎன்பதே எம்மனைவர் மனதிலும் எழும் கேள்வியாகும். பெண் என்பதால் அவளுக்கு அவ்வாறான கொடுமைகள் இலைக்கப்பட்டனவா? அல்லது திறமையான, அறிவாளியான பெண் என்பதால் கொல்லப்பட்டாளா போன்ற கோள்விகளுக்கு வெளிப்படையான பதில்கள் இல்லை.

கி.பி. 357 ல் உலகில் பெறுமதிவாய்ந்த நூலகம் எகிப்திலேயே அமைந்திருந்தது. அதன் பெயர் அலெக்ஸாண்டிரியாவாகும். அதனை நிர்வாகம் செய்தவர் சிந்தனையாளரான தியோன் அலெக்ஸாண்டராவார். அவரின் புதல்வியான ஹைபதியா சாஸ்திரம் மற்றும் கணிதத் துறையில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார். அவள் அப்போது கிறீஸ், ரோம், துருக்கி ஆகிய நாடுகளை கிறிஸ்தவம் ஆக்கிரமித்திருந்தாலும் கிறிஸ்தவ ஏகாதிபத்தியத்துக்கு அவள் அஞ்சவில்லை. அவளுக்கென்று ஒரு மதம் இருக்கவில்லை. அனுபவமும் புரிந்துணர்வு மக்களை முன்னோக்கி கொண்டு செல்லும் பாதை என்று நம்பினாள். அவளின் கொள்கையும் அதுவாகத்தான் இருந்தது. அக் காலத்தில் ஹைபதியா சிறந்த கண்டுபிடிப்பாளராகவும் இருந்தார். வான் மண்டலத்தின் மத்தியில் பூமி அமையவில்லை. சூரியனே மத்தியில் அமைந்துள்ளது. சூரியனைச் சுற்றியே கிரகங்கள் பயணம் செய்கின்றன என்றும் அவற்றின் பாதை நீள் வட்டமாக அமைந்துள்ளது என்ற மிக முக்கியமான மூன்று கருத்துக்களை ஹைபதியா எடுத்தியம்பினார்.

அந்த உண்மைகளை நிரூபிக்க நிக்கலஸ் கொப்பர்னிக்கஸ் மற்றும் கெப்லர் வரும் வரை 1000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

ஹைபதியாவின் தயாரிப்புகளில் “நட்சத்திர திசைக்காட்டி” Astrolabe என்பது வான்சாஸ்திரத்தின் முக்கிய ஒன்றாகும். அதன் மூலம் சூரியனின் அமைவிடம், கிரகங்களின் அமைவிடம், அவற்றிக்கிடையான தூரங்களை கணிப்பதற்கு வானியலாளர்களுக்கு பெரும் பாக்கியமாக அமைந்தது. அத்துடன் திரவங்களின் அடர்த்தியை அளக்க உதவும் பித்தளை திரவமானி அவளின் ஆராச்சியின் உச்ச கண்டுபிடிப்பாகும். இவை அனைத்தையும் தனது மாணவர்களிடையே கற்பித்தும் ஆய்வுகளை நடத்தி கண்டுபிடித்து சமூகத்துக்கு அறியத்தந்தார். விஞ்ஞானம் என்பது மதத்தின் பிரதான தடை என எண்ணிய கிறிஸ்தவ அதிகார வர்க்கத்தினர் அவள் மூட நம்பிக்கைகளை பரப்பி மனித மனங்களை இறைவனிடமிருந்து விலக்கும் மந்திரவாதியாக அவரை முத்திரை குத்தி தேவாலயத்தில் மன்னிப்பு கோரும்படி வற்புறுத்தினார்கள்.

எனது உயிர் போனாலும் அவ்வாறு செய்ய முடியாது என பிடிவாதமாக தனது அறிவியல் கருத்துக்களுடன் ஆணித்தரமாக நின்று போராடினாள். இதை பொறுத்துக் கொள்ளாத மதவாதிகள் அவளின் கடித ஆவணங்கள் என்பவற்றுடன் அலெக்சாண்டிரியா நூலகத்தையும் அவளையும் தீயிட்டு கொளுத்தினார்கள்.

காலபோக்கில் அவள் வானியல் கண்டுபிடிப்புக்கு தன் உயிரையே தியாகம் செய்து துணிச்சலுடன் மத வெறியர்களிடம் போராடிய இந்த பெண்ணின் சேவையை நினைவு கூருமுகமாக நிலவின் முக்கிய நில அடையாளங்கள் இரண்டை ஹைபதியா நில அடையாளங்கள் என பெயரிட்டார்கள்.

 

Comments