வெளிவாரி தேயிலை செய்கையே தொழிலாளர் குடும்பங்களுக்கு பொருத்தமானது | தினகரன் வாரமஞ்சரி

வெளிவாரி தேயிலை செய்கையே தொழிலாளர் குடும்பங்களுக்கு பொருத்தமானது

பழைய சம்பள முறைமைக்கு பதிலாக தொழிலாளர்களுக்கு உரிய முறையில் வருமானம் பிரிந்து செல்லும் திட்டத்துக்கு மாற வேண்டும் என வலய பெருந்தோட்ட சம்மேளனம் மீண்டும் வலியுறுத்துகின்றது'

வலய பெருந்தோட்டக் கம்பனிகள் ஊடாக நிர்வகிக்கப்படும் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த மாதத்தில் ரூ. 89,000 இற்கு மேற்பட்ட சம்பளத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வருமானப் பகிர்வு திட்டத்தின் கீழ் தேயிலை கொழுந்து பறிப்பதன் ஊடாக இந்த வருமானம் கிடைத்துள்ளது. மலையகத்தில் சிறப்பாக தேயிலை கொழுந்து பறிக்கும் 20 பேர் ஒக்டோபர் மாதத்தில் ரூ. 65,000 முதல் ரூ. 80,000 வரை சம்பாதிக்கின்றனர். தோட்ட உரிமையாளர்களுக்கும் தோட்ட ஊழியர்களுக்கும் மிகச்சிறந்த திட்டமாக வருமான பகிர்வுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினூடாக தோட்டத் தொழிலாளர்கள் அவர்களுக்கு கையளிக்கப்படும் நிலப்பகுதியை முகாமைத்துவம் செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு கொழுந்து பறிக்கும் அளவுக்கான வரையறை இல்லை. தரம் விரும்பும் அளவு கொழுந்து பறிக்கலாம். அதற்கமைய ஒருவருக்கு நாளாந்தம் 40 முதல் 50 கிலோகிராம் வரை பறிக்க முடியும் என்பதுடன் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து 150 கிலோகிராம் வரை நாளாந்தம் பறிக்க முடியும்.

தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் இலங்கை தொழில் தருநர் சம்மேளனம் கைச்சாத்திட்ட 2016 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்த உடன்படிக்கை விதிமுறையில் இவ்விடயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. துறையின் செயற்திறனை அதிகரிப்பதற்கு தொழிற்சங்கங்கள் செயற்படும். உடன்படிக்கை ஊடாக சம்பள முறைமையிலிருந்து வருமானம் பிரிந்து செல்லும் திட்டம் மற்றும் வெளிவாரி பயிர் செய்கையாளர்களது திட்டம் வரை மாற வேண்டும். இந்நோக்கத்தை அடைவதற்கு உடன்படிக்கை செயற்பாட்டுக்குள் உள்ள செயற்திட்டங்களை செயற்படுத்துவதற்காக சந்திப்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தரப்பினர் உடன்படுகின்றனர்.

எவ்வாறாயினும் பழைய சம்பள முறைமைக்கு பதிலாக தொழிலாளர்களுக்கு உரிய முறையில் வருமானம் பிரிந்து செல்லும் திட்டத்துக்கு மாற வேண்டும் என வலய பெருந்தோட்ட சம்மேளனம் மீண்டும் வலியுறுத்துகின்றது. இவ்வாண்டு முதல் தேயிலைக் கொழுந்து ஒரு கிலோகிராமுக்கு 46 ரூபா வழங்க தீர்மானித்துள்ளதுடன் அண்ணளவாக நாளாந்தம் 22 கிலோகிராம் தேயிலை கொழுந்து பறித்தால் 1,012 ரூபா சம்பாதிக்கலாம். நாளாந்த சம்பளத்தில் தமது வாழ்க்கையை நடத்தும் தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை தொழிற்சங்கத் தலைவர்கள் பாராட்டுவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக பெருந்தோட்ட சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவிக்கிறார்.

வருமான பகிர்வுத் திட்டம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த ரொஷான் இராஜதுரை, தற்போது தோட்டங்களில் தொழிலாளர் படையணி 50 வீதமாக குறைவடைந்துள்ளது.

1992 இல் 327,000 தோட்டத் தொழிலாளர்கள் இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 160,000 ஆக குறைந்துள்ளது. தோட்டங்களில் வசிப்பவர்களில் 16 வீதமானோரே தோட்டங்களில் வேலை செய்கின்றனர். ஏனையோர் அவர்களில் தங்கி வாழ்பவர்கள். இதன் காரணமாக சிலர் தோட்டங்களை விட்டுவிட்டனர். சில தோட்டங்களை தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் பகிர்ந்தளித்துள்ளன. தொழிலாளர்கள் அதனை பராமரித்து செய்கையில் ஈடுபட்டு கொழுந்தை நிறுவனங்களுக்கு விற்கின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு முழுமையாக வேலை செய்ய 25 நாட்களும் வருமான பகிர்வு தோட்டங்களில் வேலை செய்யவும் சந்தர்ப்பமும் கிடைக்கும். அத்துடன் தமது சொந்த தோட்டத்தில் வேலை செய்வதைப் போன்ற உணர்வு ஊக்குவிக்கப்படும். அவர்களது முகாமைத்துவத்தின் கீழ் வலய பெருந்தோட்ட சம்மேளனம் ஊடாக கொழுந்துக்கு அதிக விலை கிடைக்கும்போது துறையில் வளர்ச்சி ஏற்படும். இருப்பினும் இந்த வருமான பகிர்வு திட்டத்துக்குள் உள்ளடங்க வேண்டும் என எந்த ஒரு தொழிலாளருக்கும் அழுத்தம் கொடுக்க மாட்டோம். இருந்தாலும் ஓய்வுபெற்றவர்கள் உற்சாகத்துடன் இதில் ஈடுபட்டு வருமானம் பெறுகின்றனர் என்கிறார் பேச்சாளர். 150 வருடங்களுக்கு பின்னர் தேயிலை பயிர்ச்செய்கை இல்லாது போக வேண்டுமா என்ற கேள்வியை நாம் எம்மிடமே வினவ வேண்டும். 80,000 ரூபா வருமானம் கிடைத்தது நாளாந்த சம்பளத் திட்டத்துக்கமைய அல்ல என்பதுடன் வருமான பகிர்வுத் திட்டத்தினூடாகவே எனவும் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த வருமான பகிர்வுத் திட்டம் தற்போது பல தோட்டங்களில் செயற்திட்டங்களாக முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் ஊழியர் பற்றாக்குறையை நீக்குவதற்கும் உயர்ந்தபட்ச வருமானத்தை பெறுவதற்கும் அதன்மூலம் திருப்தியான வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. புதிய திட்டத்தினூடாக அதிகரித்து செல்லும் வாழ்க்கைச் செலவை குறைத்துக்கொள்ள முடியும் என்பதுடன் ஊழியர் செயற்திறனை அதிகரித்து தொழிலாளர்கள் தற்போது பெரும் சம்பளத்தை விட அதிக வருமானத்தை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

புதிய திட்டத்துக்கு அமைய தொழிலாளர்களது செயற்திறனுக்கு அமையவே வருமானம் தீர்மானிக்கப்படுகின்றது. பழைய திட்டத்தின் படி வருகை தரும் வழிமுறைக்கு அமைய வருமானம் தீர்மானிக்கப்பட்டது. புதிய திட்டத்துக்கு அமைய அவர்களது வருமானத்தை உயர்த்திக் கொள்ளலாம்.

இலங்கையில் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் 4 இலட்சம் என்பதுடன் அவர்கள் பசுமை தேயிலை கொழுந்து உற்பத்தியில் 75 வீதம் உற்பத்தி செய்கின்றனர். 1992 முதல் 2017 வரையான காலத்தில் அவர்களது பயிர் பரப்பு இரட்டிப்பாகியுள்ளது. அவர்களது வாழ்க்கையின் வெற்றியை உறுதிப்படுத்தும் காரணியாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Comments