கால் இழந்த மாணவிக்கு உதவி | தினகரன் வாரமஞ்சரி

கால் இழந்த மாணவிக்கு உதவி

களுத்துறை கல்வி வலயத்தின் அரப்பொலகந்த, பாரதி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் கணேசன் சரண்யா என்ற மாணவி தனது இடது காலை இழந்து பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளார்.

இடது காலில் ஏற்பட்ட வருத்தம் காரணமாக களுத்துறை, நாகொட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் இவரது காலை அகற்ற வேண்டிய நிலையேற்பட்டதால் சத்திரசிகிச்சை மூலம் இடது கால் முற்றாக அகற்றப்பட்டுள்ளது.

உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் 19 வயதான இந்த மாணவி 2019ல் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். காலை இழந்த இவர் தற்பொழுது உறவினரின் உதவியுடன் தினமும் முச்சக்கர வண்டியிலேயே பாடசாலைக்குச் சென்று வருகின்றார்.

காலை இழந்த இவரது துரதிர்ஷ்ட நிலையைக் கவனத்திற்கொண்ட ஜ.ம.முன்னணியின் களுத்துறை மாவட்ட இணைப்பாளர் கே. ஆரோக்கியசாமி, முன்னணியின் அகலவத்த பிரதேச அமைப்பாளர் எஸ்.எம். ஜெமினிகணேசன் மற்றும் முன்னணியின் ஏனைய அமைப்பாளர்களும் அண்மையில் இந்த மாணவியின் இல்லத்துக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவரை உற்சாகப்படுத்தி ஊன்று கோள் ஒன்றை வழங்கி வைத்துள்ளனர்.

விரைவில் இவருக்கு சக்கர நாற்காலி ஒன்றையும் பெற்றுக் கொடுக்கவுள்ளனர். இவர், களுத்துறை மாவட்டத்தின் தெபுவன புட்டுப்பாவல தனியார் தோட்டத்தில் வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Comments