தொலைபேசியா, தொல்லை பேசியா? | தினகரன் வாரமஞ்சரி

தொலைபேசியா, தொல்லை பேசியா?

தொலைபேசி பயன்பாடு தொடர்பாகக் கடந்த ஈராண்டுக்கு முன்னரும் ஆற அமர எழுதியிருந்தேன். என்றாலும் அதைப்பற்றித் தொடர்ந்தும் எழுத வேணும்போல் இருக்கிறது. அதற்குக் காரணம் இருக்கிறது.

பஸ்ல, றோட்ல, பேவ்மண்ட்ல எல்லாம் பாத்தா, இந்தப் போனை வைச்சுக்ெகாண்டு படுத்திற பாடு, பெரும்பாடு. இந்த அலைபேசியால அவங்க படுறபாடும் அதவிடக் கொடுமை. வயர்கள ரெண்டு காதிலையும் மாட்டிக்ெகாண்டு தங்கட பாட்டுக்குத் தனியாகக் கதைச்சுக்ெகாண்டு போறது, சிரிச்சுக்ெகாண்டு போறது, பாத்தோ மெண்டா நமக்ேக சிரிப்பு வரும். சில நேரங்கள்ல கோச்சு றோட்டிலை இப்பிடி நடக்கிறவங்களுக்கு நடக்கிற கதி உங்களுக்குத் தெரியுந்தானே!

முன்பெல்லாம் வீட்டிலை தொலைபேசி இருக்குதெண்டா, அஃத ஒரு பெரிய விசயமா நினைப்பாங்க. சொத்துகள்ல ஒரு சொத்தா பாப்பாங்க. ஆனால், இப்ப அலைபேசி வந்த பிறகு தொலைபேசிக்ெகல்லாம் மவுசு இல்லாமப்போச்சு.

அலைபேசி எண்டால் தெரியுந்தானே, சிலபேர் கைபேசி, கைத்தொலைபேசி, கையடக்கத்தொலைபேசி எண்டெல்லாம் எழுதுவாங்க. இப்ப அலைபேசி என்றது பழக்கத்திற்கு வந்திட்டுது. தொலைவில் இருந்து கதைப்பது தொலைபேசி, அலையில் வருவது அலைபேசி. எப்படி, சரியாத்தானே இருக்கு.

இப்பிடித்தான் எனக்ெகாரு நாள் ஒரு கோல் வந்தது. நான் றோங் நம்பர் எண்டன். அந்தப் பக்கத்திலை விடல்ல. இல்ல, இல்ல இது உங்க நம்பர் இல்ல, எங்கட நம்பர் எண்டு, ஒரே வம்பு. எனக்குச் சிரிப்பதத் தவிர வேறொண்டும் செய்ய முடியல. ஆனா, அது மிஸ்ட் கோல் இல்ல. அநேகமானவங்க இந்த மிஸ்ட் கோல, மிஸ் கோல் எண்டுதான் சொல்வாங்க. மிஸ்மார் அதிகம் பாதிக்கப்படுறதாலோ என்னவோ! நமக்கு கோல் வந்து, அதற்கு ஆன்சர் பண்ணாமவிட்டு, பிறகு நமக்கு இன்டிகேட் பண்ணுமே அதுத்தானே மிஸ்ட்கோல். அதேமாதிரி, நாங்கள் ஓராளுக்குக் கோல் பண்ணி, அவர் ஆன்சர் பண்ணாம விட்டா, அவருக்கு இன்டிகேஷன் வருமே, அதுதானே மிஸ்ட்கோல்.

ஆனால், சிலபேர், எனக்கொரு மிஸ் கோல் குடுங்க நான் எடுக்கிறன் என்பார். இன்னும் சிலபேர், போன் கதைக்கிறதே இல்ல. நொடிக்கணக்கில கவனமா இருந்து, ரிங் கட் கொடுப்பார்கள். இந்தியாவிலை இருந்து ஒருத்தர் என் நண்பர் ஒருத்தருக்கு மிஸ்ட் கோல் கொடுப்பார். அவர் கண்ணுங்கருத்துமாக இருந்து உடனே அழுத்தி விடுவார். ரிங் கட் வேற, மிஸ்ட் கோல் வேற என்றத பிறகு நாங்க அவருக்குப் படிப்பிச்சம். இப்ப ஒழுங்கா டயல் பண்ணிக் கதைப்பார்.

வாழ்க்கையில இன்னும் பல ​பேர் போன் கோலுக்கு ஆன்சர் பண்ணவுமாட்டார்கள். மிஸ்ட் கோல் பாத்து திரும்ப எடுக்கவு மாட்டார்கள். இவங்கள எல்லாம் என் நண்பருக்குக் கண்ணிலையும் காட்டேலாது. பொறுப்பில்லாத பேர்வழிகள் எண்டு திட்டுவார். நாங்கள் என்ன கடனா கேட்கப்போறம்? ஆன்சர் பண்ண வேண்டியதுதானே கள்ளப்பயல் என்பார். நிறையபேரை அவர்கள் ரெலிபோனுக்குப் பதில் அளிப்பதிலிருந்தே அவர்களின் நம்பரைக் கண்டுபிடித்துவிடலாம். (நம்பர் எண்டா, ரெலிபோன் நம்பர் இல்ல)

பொறுப்பில்லாத ஆக்கள் இப்பிடி இருக்கும்போது இன்னும் சிலபேர், பொறுப்பே இல்லாமல் எந்நேரமும் தொலைபேசியும் கையுமாக இருக்கிறார்கள். வேலைக்குச் செல்லும் இடங்களிலும் இதே கதிதான். அநேகமான தனியார் நிறுவனங்களில் கைப்பேசியை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டுத்தான் பணியைத் தொடங்க வேண்டும். அரச நிறுவனங்கள்ல அதெல்லாம் கிடையாது. இந்த நேரமும் போனும் கையுமாகத்தான் இருப்பார்கள். பாடசாலைகளில் அதைவிட மோசம் என்கிறார் நண்பர்.

சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள ஒரு பிரபல வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளரைச் சந்திக்கக்கிடைத்தது. அங்கு நூற்றுக்கணக்கானவர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் நேரம் ஒதுக்கித்தான் உரிமையாளரைப் பார்க்க முடியும். அப்பிடி ஒரு தம்பி அவரைப் பார்க்க போயிருக்கிறார். அந்த நேரத்தில் அவரின் பொக்கற்றுக்குள் இருந்து போன் அலறியிருக்கிறது; அதை எடுத்து மறுமொழி சொல்லும்போது மற்ற பொக்கற்றில் இருந்து மற்றைய போன் அலறியிருக்கிறது. சரி​ெயன்றால், பெரியவரைப் பார்க்கப்போகும்போது ஒன்று போனை நிறுத்தியிருக்க வேண்டும். அல்லது மறுமொழி பேசாமல் இருந்திருக்க வேண்டும். இவர் இரண்டு போனையும் கையில் எடுத்திருக்கிறார். அப்போது முதலாளி கேட்டிருக்கிறார், "எதற்குத் தம்பி உனக்கு ரெண்டு போன்? ஒன்றைப் பயன்படுத்து. சிக்கனமாக இருந்து வீட்டுக்குப் பணம் அனுப்பு" என்று அறிவுரை கூறியிருக்கிறார். சில நாட்களுக்குப் பிறகு, முகாமையாளரிடம் கேட்டாராம், "எங்கே அந்தப் பொடியன்?" என்று. "ஐயோ சேர், நீங்கள் தனிப்பட்ட விசயத்திலை தலையிடுறீங்கள் என்று சொல்லி அந்தப் பையன் வீட்டுக்குப் போய் விட்டான்" என்று முகாமையாளர் பதில் அளித்திருக்கிறார்.

அந்த முதலாளி என்ன சொன்னார்? வாழ்க்ைகயில் முன்னேறுவதற்கு வழி சொல்லியிருக்கிறார். புத்தி சொன்னால், தம்பிக்குப் பிடிக்காது. இப்ப யாருக்கு நட்டம்? எங்க அலைந்துகொண்டிருக்கிறாரோ? தொலைபேசியில் இருக்கும் அக்கறை தொழில் மேல இல்லை. எல்லா இடங்களிலும் இதுதான் நிலைமை.

நவீன தொழில் நுட்பத்தை நமக்குச் சேவகமாற்றும் சாதனமாக வைச்சுக் ெகாள்ள வேண்டுமே தவிர, அதற்கு அடிமையாகும் நிலைக்குச் சென்றால், தொழிலையும் வாழ்க்ைகயையும் இழந்து நடுரோட்டில்தான் இருக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கின்றார் நண்பர்!.

Comments