மாணவர்களைப் பாதிக்கும் பொருளாதார, சமூகப் பிரச்சினைகள் | தினகரன் வாரமஞ்சரி

மாணவர்களைப் பாதிக்கும் பொருளாதார, சமூகப் பிரச்சினைகள்

இலங்கையில் இலவசக் கல்விமுறை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு 74 வருடங்கள் கடந்துள்ள நிலையில் நாடு இத்துறையில் கணிசமான முன்னேற்றங்களைச் சந்தித்துள்ளது. இலவசக் கல்வியை இல்லாமல் செய்வதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களுக்கும் மத்தியில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசுகள் அதனைப் பாதுகாப்பதற்கு கடும் பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்றமையை மறுக்க முடியாது. இலங்கை எழுத்தறிவு வீதத்தில் உயர்ந்த இடத்திலிருப்பதற்கு இலவசக் கல்விமுறை பெரும் பங்காற்றியுள்ளது. அரசாங்கம் கல்வியை இலவசமாக வழங்குவதற்கு பெருந்தொகை நிதியை செலவிட்டாலும் கல்வியில் சமத்துமின்மை பாரதூரமான விடயமாகவிருக்கிறது. கல்வியில் சமத்துவம் இன்மை என்ற விடயம் பிராந்திய ரீதியான விடயமாகவும், பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட விடயமாகவும் காணப்படுகிறது.

அரசாங்கம் நாடு முழுவதிலும் உள்ள அரசாங்க பாடசாலைகளில் இலவசக் கல்வியை வழங்கி வருவதுடன், சகலருக்கும் ஒரேமாதிரியான பாடநெறிகள் மற்றும் பாடநூல்களை வழங்கியே கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. பாடநெறிகளில் எந்தவிதமான ஏற்றத்தாழ்வுகளும் காட்டப்படாத நிலையில் மாவட்டங்களுக்கு மாவட்டம் கல்வித்தரத்தில் சமத்துவமின்மை காணப்படுகிறது. கொழும்பு, கம்பஹா போன்ற பொருளாதார வளம் நிறைந்த மாவட்டங்களில் காணப்படும் கல்வித்தரத்துக்கும், மொனராகலை, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு போன்ற கஷ்டப்பட்ட மாவட்டங்களுக்குமிடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றது.

கல்வித்துறையில் காணப்படும் சமத்துவமின்மை என்பது இலங்கை மாத்திரமன்றி உலக நாடுகளில் பொதுவாகக் காணப்படும் விடயமாகும். உலகளாவிய ரீதியில் கல்வியின் சமத்துவமின்மை புள்ளிவிபரங்களை எடுத்து நோக்கும்போது 2016ஆம் ஆண்டில் 10 வீதத்துக்கும் குறைவானவர்களே அடிப்படை வாசிப்பு அறிவற்றவர்களாக இருக்கின்றனர். தெற்கு சஹாரா ஆபிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் பின்தங்கிய நிலையிலுள்ளன. வளர்ச்சியடைந்த நாடுகளில் 86 சதவீதமான மாணவர்களுடன் ஒப்பிடும்போது வளரும் நாடுகளில் உள்ள 50 வீதத்துக்கும் குறைவான மாணவர்களே குறைந்தபட்ச தேர்ச்சி மட்டத்தை அடைகின்றனர். கல்வியில் சமத்துவமின்மையே இதற்கு முக்கிய காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக பொருளாதார ரீதியில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகளே கல்வியில் சமத்துவமின்மைக்கான பிரதான காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

உலக ரீதியான நிலைமைகள் இவ்வாறிருக்க இலவசக் கல்வியை வழங்கும் இலங்கையின் கல்வியிலும் சமத்துவமின்மை காணப்படுகிறது. இது தொடர்பாக வறுமை ஆராய்ச்சி நிலையம் அண்மையில் ஆய்வொன்றை நடத்தியிருந்தது. மிகவும் பின்தங்கிய மாவட்டங்களாகக் கருதப்படும் மொனராகலை, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களிலும் 60 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பெறப்பட்ட மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பெற்றோரின் பொருளாதார ரீதியிலான வசதிகளே கல்வி சமத்துவமின்மைக்கு பிரதான காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமத்திலிருந்து பாடசாலைக்கு இடையிலான தூரம் பிரதானமான நோக்கப்படுகிறது. வீடுகளுக்கும் பாடசாலைக்கும் இடையிலான தூரம் அதிகமாகவிருக்கும்போது போக்குவரத்துக்கு செலவுசெய்யவேண்டிய பணம் அதிகமாகவிருக்கிறது. இதனால் சில பெற்றோர் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பாமல் விடுவதற்கு முயற்சிக்கின்றனர்.

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் பெரும்பாலான பாடசாலைகள் மாகாணப் பாடசாலைகளாகக் காணப்படுகின்றன. இவற்றுக்கான வளங்களில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. இதுவும் கல்வியின் சமத்துவமின்மைக்கு வழிகோலுகின்றமை வறுமை ஆராயச்சி நிலையத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வருமான சமத்துவமின்மை மற்றும் புவியியல் சார்ந்த அமைவிடங்கள் மாணவர்களின் கல்வியை கணிசமாகப் பாதிக்கின்றன. சில பகுதிகளில் பாலியல் சார்ந்த விடயங்களும் கல்வியின் சமத்துவமின்மைக்கு காரணமாகின்றன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் போன்ற பகுதிகளில் பெண்கள் பாடசாலைக்குச் செல்லும் வீதம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கிறது. மொனராகலை போன்ற பகுதிகளில் நிலைமைகள் வித்தியாசமாகவிருக்கின்றன. மாவட்டத்துக்கு மாவட்டம் வித்தியாசமான காரணிகள் தாக்கம் செலுத்துவதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மொனராகலை போன்ற மாவட்டங்களில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் அல்லது மாணவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடுடையவர்களாக இருப்பதால் அவர்களின் கற்றல் செயற்பாடு பாதிக்கப்படுகிறது. சரியான ஊட்டச்சத்து இன்மையால் காலைக் கூட்டங்களில் மாணவர்கள் சிலர் மயங்கிவிழும் நிலைமை காணப்படுவதாக ஆய்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நிலைமைகள் பெற்றோரின் பொருளாதார சூழலுடன் தொடர்புபட்டதாகவிருக்கிறது.

மாணவர்களைப் பாதிக்கும்...

(18ஆம் பக்கத் தொடர்)

இலங்கையைப் பொறுத்தவரையில் வீட்டுத்துறையின் கல்வி மீதான செலவு அதிகரித்துள்ளது. 2006ஆம் ஆண்டு 632 ரூபாவாகக் காணப்பட்ட கல்விக்கான செலவு 2016ஆம் ஆண்டில் 2066 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது ஏறத்தாள 227 வீத அதிகரிப்பாகும். இலங்கையில் தொழிலாளர்களாகவுள்ள 63,414 பிள்ளைகளில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களைச் சேர்ந்த 15 தொடக்கம் 17 வயதுக்கு உட்பட்ட பாடசாலைக் கல்வியை இடைநடுவில் நிறுத்தியவர்களாகக் காணப்படுகின்றனர். கல்விக்கான செலவு அதிகரித்தமையால் பெற்றோருக்கு தொடர்ந்து கல்வியை வழங்க முடியாத நிலையில் அவர்கள் தொழிலுக்குச் செல்கின்ற நிலைமை ஏற்படுகிறது.

பாடசாலைகளை அணுகுவதில் காணப்படும் பிரச்சினைகளும் கல்வி சமத்துவமின்மைக்கு காரணமாகின்றன. அதாவது குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களுக்குப் போதிய சுகாதார மற்றும் போசாக்குகள் கிடைக்காத காரணத்தினால் ஆரம்பக் கல்வியை முறையாகத் தொடரமுடியாது போகிறது. இதனால் அவர்களின் ஆரம்பக் கல்வியே தடைப்படுவதால் சமத்துவமின்மை அங்கிருந்து ஆரம்பிக்கிறது.

மற்றுமொரு விடயமாக ஆசிரியர் பற்றாக்குறையும் காணப்படுகிறது. பெரும்பாலான ஆசிரியர்கள் வசதியான மாவட்டங்களை நாடிச் செல்வதால் மொனராகலை, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்குச் செல்ல ஆசிரியர்கள் ஆர்வம்காட்டுவதில்லை. இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களை ஆசிரியர்கள் கற்பிக்கவேண்டியுள்ளது. உதாரணத்துக்கு வரலாற்று ஆசிரியர் ஒருவர் வேறுபாடங்களையும் கற்பிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதால் கற்பித்தல் தரத்தில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன. ஒரே பாடநெறிகள், ஒரே புத்தகங்கள் வழங்கப்பட்டாலும் பாடசாலைக்கு பாடசாலை கல்வித் தரத்திலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதனாலும் கல்வியில் சமத்துவமின்மை ஏற்படுகிறது.

அரசாங்கம் பெருந்தொகை நிதியை கல்விக்காக செயற்படுகின்றபோதும் சமத்துவமின்மை போன்ற பல்வேறு காரணிகளால் கல்வியின் தரம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வறுமை ஆராய்ச்சி நிலையம் ஐீ.ஐ.சட் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இந்த ஆய்வுபோன்று ஆய்வுகள் நடத்தப்பட்டு கல்வியில் காணப்படும் சமத்துவமின்மை நீக்கப்பட்டு கல்வியின் தரம் அதிகரிக்கப்பட வேண்டும்.

மூன்றரை இலட்சமாக இருந்த தொழிலாளர் ஆள் பலம் ஒன்றரை இலட்சமாகிவிட்டது. 4345 ஆயிரம் ஏக்கர் காணிகள் கைவிடப்பட்டு தரிசுகளாக மாறிவிட்டன என்று வெளிப்படையாக அறிக்கைமேல் அறிக்கையாக விட்டனர்.

இந்த தோட்டங்கள் என்ன கம்பனிகாரர்களின் பாட்டன் வீட்டு பரம்பரை சொத்தா. இது அரசாங்க சொத்து. ஒவ்வொரு அங்குலமும் அரசுக்கே சொந்தம் தோட்டங்களை அபிவிருத்தி செய்யத்தான் உங்களுக்கு நீண்டகால குத்தகைக்கு விடப்பட்டது. தோட்டத்திற்கும் தோட்ட மக்களுக்கும் என்ன நன்மை செய்துள்ளீர்கள். தோட்டங்களில் இருந்த இயற்கை வளங்களை எல்லாம் சுரண்டி விட்டீர்கள். பல ஆயிரம் பேருக்கு தொழிலையும் பல கோடி பெறுமதியான தேயிலையை உற்பத்தி செய்து தேசிய வருமானத்தை பெருக்கிய பல நூறு தேயிலை தொழிற்சாலைகளை மூடிவிட்டீர்கள். மூடிய தொழிற்சாலைகளில் இருந்த பாரிய இயந்திரங்களையும் கோடி பெறுமானமிக்க இடிதாங்கிகளையும் அபேஸ் செய்துவிட்டீர்கள். தொழிற்சாலையில் காணப்பட்ட இரும்பையும் தகரத்தையும் கூட விட்டு வைக்கவில்லை. அத்தனையும் விற்று காசாக்கிவிட்டீர்கள். இப்போது இந்த உண்மைகளை எல்லாம் மூடி மறைத்து நட்டம் நட்டம் என்று ஒப்பாரி வைக்கின்றனர் கம்பனிக்காரர்கள்.

தோட்டங்களில் நட்டம் தொடர்ந்தும் நடத்த முடியாது என்றால் ஏன் தொடர்ந்தும் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுகின்றீர்கள். அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களை அரசாங்கத்திடமே ஒப்படைத்துவிட்டு வெளியேறுங்கள். யானை, புலி, கரடிகள், பாம்புகள் வாழ்ந்த காட்டையே செல்வம் கொழிக்கும் சிங்கார சோலைகளாக மாற்றி தேயிலை தோட்டங்களை உருவாக்கியவர்கள் எங்கள் பரம்பரை. நீங்கள் காடாகவும் தரிசாகவும் மாற்றி உள்ள தோட்டங்களை மீண்டும் சீரமைப்பது ஒன்றும் பெரிய வேலை இல்லை ஆனால் நீங்கள் விடமாட்டீர்கள். கோடி கோடியாக இலாபமீட்டி சுகபோகம் அனுபவித்த உங்களுக்கு கூழ்குடிக்கவும் ஆசை அது மீசையில் ஒட்டிவிடுமே என்றும் அச்சம் இதுதான் உண்மை நிலை.

இரண்டும் கெட்டான் நிலையில் தொழில் வாய்ப்புகள் இன்றி கஷ்டப்படும் இளைஞர் யுவதிகளை ஒன்று திரட்டுங்கள். மலையகத்தில் சுயதொழில் செய்யக்கூடிய இயற்கை வளங்கள் நிறைய உண்டு. உழைக்கக்கூடிய ஆர்வம் எம் இளைஞர்களுக்கு உண்டு. வளங்கள் இருந்தும் அதனை பயன்படுத்த முடியவில்லை. சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுத்த இடமில்லை காணி இல்லை என்ற என்ற பிரச்சினையே இல்லை. காணிகளை தேடி ஓடவேண்டிய அவசியமே இல்லை. இந்த கம்பனிக்காரர்களின் கூற்றின்படி 40 முதல் 45 ஆயிரம் ஹெக்டேயர் வரையிலான தோட்டக்காணிகள் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன. எவருக்கும் பிரயோசனம் இல்லாமல் கைவிடப்பட்டுள்ள இந்த காணிகளை நம் எதிர்கால சந்ததியினருக்கு பயனுள்ளதாக மாற்ற முடியும் தானே? அதைப்பற்றி சிறிது சிந்தித்துப் பாருங்கள் அது உங்கள் கடமை.

Comments