மாலைதீவு கல்விக் கண்காட்சியில் மெட்ரோபொலிடன் கல்லூரி பங்கேற்பு | தினகரன் வாரமஞ்சரி

மாலைதீவு கல்விக் கண்காட்சியில் மெட்ரோபொலிடன் கல்லூரி பங்கேற்பு

மாலைதீவில் அண்மையில் இடம்பெற்ற கல்விக் கண்காட்சியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட மெட்ரோ பொலிடன் கல்லூரியும் பங்கேற்றது. கல்லூரியின், தலைவரும் முன்னாள் கல்முனை மாநகர முதல்வருமான கலாநிதி சிராஸ் மீரா சாஹிப் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.

அங்கு இடம்பெற்ற கல்விக் கண்காட்சியில் தங்களது கல்லூரியில் உள்ள பாடநெறிகள் மற்றும் இதர விடயங்கள் தொடர்பாக உயர்கல்வியை எதிர்பார்க்கும் மாலைதீவு மாணவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன.மெட்ரோ பொலிடன் கல்லூரியின் தலைவர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மாலைதீவின் கல்வி அமைச்சர் கலாநிதி அய்சாத் அலி மற்றும் மாலைதீவுக்கான இலங்கை தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.எல் தொரந்தெனிய ஆகியோரையும் சந்தித்து தங்களது கல்வி நிறுவனத்தில் உள்ள பாடவிதானங்கள் மற்றும் உயர்தரம் குறித்தும் கலந்துரையாடியமை விசேட அம்சமாகும்.

இந்த கல்விக் கண்காட்சியில் மாலைதீவு மாணவர்கள் பலர் அனுமதியை பெற்றுக் கொண்டதாகவும் கல்லூரியின் தலைவர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். பட்டப்படிப்பு,பட்டமேற்படிப்பு, கலாநிதி கற்கை நெறிகளுக்கு அதிகளவான மாணவர்கள் அனுமதி பெற விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாலைதீவு மாணவர்கள் பலர் மெட்ரோ பொலிடன் கல்லூரியில் உயர்கல்வியை மேற்கொள்கின்றனர்.

Comments