Coding,STEM திறன்கள் MakeWhats Next துறையில் | தினகரன் வாரமஞ்சரி

Coding,STEM திறன்கள் MakeWhats Next துறையில்

சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில், இலங்கையில் #DigiGirlz என்ற ஒரு முழு நாள் அமர்வை மைக்ரோசொப்ட் நடாத்தியுள்ளது. 500 பெண் பிள்ளைகள், அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு Microsoft MakeCode இனைப் பயன்படுத்தும் coding செயற்திட்டம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளதுடன், தொழில் வழிகாட்டல் பயிற்சி அமர்வுகள் தொடர்பான அனுபவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். மதிப்புமிகு தொழில்துறை வல்லுனர்கள் கலந்துகொண்ட குழுநிலை கலந்துரையாடல் நிகழ்விலும் பல்வேறு விடயங்களைக் கேட்டறிந்து கொண்டுள்ளனர். இலங்கை பிரதமரின் காரியாலயத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளதுடன், தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள் தொடர்பாக சிறப்பாக விளங்கிக் கொள்வதற்கு பெண் பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் வகையில் இது வடிவமைக்கப்பட்டடிருந்தது. பெண் பிள்ளைகளை பெண்களுக்கு முன்மாதிரியானவர்களாக காண்பித்து, பெண் பிள்ளைகள் நேரடி செயற்பாடுகளில் பங்குபற்றி, உலகில் உண்மையான சவால்களுக்கு STEM திறன்களைப் பயன்படுத்தி தீர்வு காண்பதற்கு அவர்கள் ஊக்குவிப்பட்டிருந்தனர்.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தலைமை அதிகாரியான ஆன்ட்ரியா டெல்லா மேட்டீ, தென் கிழக்காசிய சந்தைகளுக்கான பொது முகாமையாளரான சூக் ஹுன் சீயா, ஆசியாவிற்கான அறப்பணித் துறை பணிப்பாளரான டையானா பெயிட்லர் மற்றும் மைக்ரோசொப்ட் பிராந்திய தலைமைத்துவ அணியின் அங்கத்தவர்கள் அடங்கிய குழுவினர் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறையில் இளம் பெண்கள் தலைமைத்துவ பதவிகள் மற்றும் தொழில்களை முன்னெடுப்பதை மேம்படுத்தி, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் செயலமர்வுகளை நடாத்தியுள்ளனர்.

பிரதான உரையை ஆற்றியிருந்த டெல்லா மேட்டீ அவர்கள் “அனைத்து மக்களும் இன்னும் அதிகமானவற்றைச் சாதிப்பதற்கு வலுவூட்ட வேண்டும் என்பதே மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் குறிக்கோளாகும். அனைத்து மக்களும் அதிகம் சாதிக்கும் வகையில் அவர்களை ஊக்குவித்து, இடமளிக்கும் வகையில் அனைவரையும் உள்வாங்கும் வகையிலான மற்றும் பரந்த ஒரு சூழலைத் தோற்றுவிக்கும் முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். STEM துறைகளில் வளம் பெறுவதற்கு பெண்களை ஈர்த்து, விருத்தி செய்து மற்றும் அவர்களுக்கு உதவுவது அனைவரையும் உள்வாங்கும் ஒரு சமூகத்திற்கும், வளம்மிக்க நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் மிகவும் முக்கியமானதாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.

உலகளாவில் STEM துறைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் தாழ்ந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. யுனெஸ்கோ விடுத்துள்ள அறிக்கையொன்றின் பிரகாரம் (UNESCO) விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் ஈடுபட்டுள்ளவர்களில் 29 சதவீதத்தினர் பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவில் அது 19 சதவீதம் என்ற தாழ்ந்த மட்டத்திலும், மத்திய ஆசியாவில் அது 48 சதவீதம் என்ற உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments