மெகாலைப் ஸயன்ஸின் NNO தூதுவராக நடிகை ஸபீதா பெரேரா | தினகரன் வாரமஞ்சரி

மெகாலைப் ஸயன்ஸின் NNO தூதுவராக நடிகை ஸபீதா பெரேரா

திருமதி சபீதா பெரேரா சிங்களத் திரையுலகில் இன்றும் பேசப்படும் இவர், தனது மூன்று வயதில் நடிப்பு வாழ்க்கையை தொடங்கி இலங்கையரின் இதயங்களை வென்ற ஒருவராவார்.

பெயர், புகழ் மற்றும் விருதுகள் இந்த நடிகையின் பயணத்தை அலங்கரித்து வரும் இவரை மெகாலைப் ஸயன்ஸ் NNO நிறுவனத்தின் வணிகச்சின்ன தூதராக நியமிக்கப்பட்டுள்ளதாக மெகாலைப் ஸயன்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் பிரவீன் விஷ்வகுமரன் தெரிவித்தார்.

சர்வதேச பெண்கள் தினமான கடந்த 8ஆம் திகதியன்று மெகாலைப் ஸயன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விஷ்வகுமாரன் சர்வதேச மகளிர் தினத்தில் திருமதி சபீதா பெரேரா NNOவின் வணிகச்சின்ன தூதராக இருப்பதற்கான இந்த அறிவிப்பு நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் மகளிர் தின பாராட்டாக அமையும். அவர் தனது வாழ்நாள் முழுவதிலும் பிழைகளற்ற சிறந்த தேர்வுகளை மேற்கொண்டிருக்கிறார். அத்தகைய ஒரு தேர்வாகவே NNO ஊட்டமளிக்கும் நைட் ஒயில் உள்ளது, தோலை இளமையாக தொடர்ந்தும் பராமரிக்க இரவில் ஊட்டமளிக்கும் தத்துவத்தை நம்புகிறார். இதுவே மெகாலைப் ஸயனஸ்இற்கு NNOவின் வணிகச்சின்ன தூதராக திருமதி சபீதா பெரேராவை தெரிவுசெய்ய வழிவகுத்தது என்றார் அவர்.

10 ஆண்டுகளுக்கு முன்னர் இதே மகளிர் தினத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட ஒரு தனித்துவமான தயாரிப்பு NNO, இரவில் ஊட்டமளிக்கும் அதன் இயல்புக்கு உண்மையாக இலங்கையில் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள பல பெண்கள் சாட்சிபகர்கின்றனர். மெகாலைப் ஸயனஸ் ஆனது NNOவின் இரவில் ஊட்டச்சத்து பற்றிய இந்த புதுமையான கருத்தாக்கத்தை பிரச்சாரம் செய்து வருகிறது, தோல் ஊட்டமளிப்புக்கு சிறந்த நேரம் இரவுநேரம், ஏனெனில் தோல் தன்னை சரிசெய்து புதுப்பிக்கின்ற நேரம் இரவு நேரமாகும்.

ஈரப்பதம், நீரேற்றம், உறுதிப்பாடு, நெகிழ்ச்சி, மென்மை மற்றும் சுறுசுறுப்பு ஆகியவற்றை 2 முதல் 3 வாரங்களில் NNO மேம்படுத்துவதாக மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Comments