30ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் Kangaroo Cabs | தினகரன் வாரமஞ்சரி

30ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் Kangaroo Cabs

வாடகை வாகனச்சேவையின் முன்னோடி நிறுவனமான Kangaroo Cabs அதன் 30ஆவது ஆண்டு பூர்த்தியை வெகுசிறப்பாக கொண்டாடும் முகமாக கோ க்ரீன்” (Go Green) எண்ணக்கருவின் அடிப்படையில் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் வாகனங்களை தமது வலையமைப்பில் இணைத்துக் கொண்டுள்ளது. 2588588என்ற தொலைபேசி இலக்கத்துடன் நினைவுக்குவரும் Kangaroo Cabs வாடகை வாகனச் சந்தையில் 70%பங்கினை தனதாக்கிக்கொண்டுள்ளது. நிறுவனத்தின் பிரதான சேவைகளாக 0112 588588வாடகை வாகனச்சேவை, 0112 501501வேன் சேவை, 0112 592592பஜட்டெக்சி சேவை, 0112 801801சிட்டிடெக்சி சேவை மற்றும் 0112 592592முச்சக்கர வண்டிகள் சேவை ஆகியவை விளங்குகின்றன. 

1988ஆம்ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட Kangaroo Cabs வாடகை வாகனச்சேவையானது பயணிகளின் தேவை அறிந்து நவீன தொழில் நுட்பங்களுடன் 24மணித்தியாலம் இயங்கும் அழைப்பு நிலையமொன்றை கொண்டுள்ளதுடன் வாகனங்களை ஒதுக்கிகொள்வதற்கென பூரண வசதியினை கொண்ட பிரத்தியேக செயலியொன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 2012ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இணையத்தளத்துடன் வட்ஸ்அப், ஸ்கைப் ஊடாக வாடகை வாகனங்களை ஒதுக்கிகொள்வதற்கான வசதியினை கொண்ட இலங்கையின் ஒரே வாடகை வாகனச்சேவையாக Kangaroo Cabs தடம்பதித்துள்ளது. 

நிறுவனத்தின் அதிபர் சுனில் பொன்சேகா, நிறைவேற்று / நிதிப்பணிப்பாளர் குசல்பொன்சேகா மற்றும் தொழில்பாட்டு பணிப்பாளர் துஷார பொன்சேகா ஆகியோரின் வழிநடத்தலின் கீழ் Kangaroo Cabs நிறுவனம் சுமார் 3000 சாரதிகளுடன் 150 ஊழியர்களையும் தேவையான பயிற்சி அமர்வுகளுக்கு ஆற்றுப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு 100வீத தரமானதும் நம்பிக்கைமிக்கதுமான சேவையை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகிறது.  வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக அதிக கரிசனை கொண்டுள்ள Kangaroo Cabs நிறுவனம் வாடிக்கையாளர்கள் யாதேனும் புகார் அளிக்கும் பட்சத்தில் உடனடியாக அதனை விசாரித்து அந்தந்த வாடிக்கையாளர்களுக்கு அதன் பெறுபேறுகளையும் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்.

Comments