கிளை வலையமைப்பை மேம்படுத்தியுள்ள செலான் வங்கி | தினகரன் வாரமஞ்சரி

கிளை வலையமைப்பை மேம்படுத்தியுள்ள செலான் வங்கி

செளகரியமான வங்கிச் சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கான தனது அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் செலான் வங்கி, சகல வசதிகளும் படைத்த தனது புதிய கிளையை இல. 115, யூனியன் பிளேஸ், கொழும்பு 02எனும் முகவரியில் திறந்துள்ளது. 

திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப. 9மணி முதல் பி.ப. 3மணி வரை இந்த கிளை திறந்திருக்கும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு நவீன வங்கியியல் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் சகல வசதிகளையும் கொண்டுள்ளது. வங்கியின் 24/7 ATM இயந்திரம், பண வைப்பு இயந்திரம் மற்றும் காசோலை வைப்பு இயந்திரம் ஆகியவற்றை இந்தக் கிளை கொண்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு தமது கட்டணப்பட்டியல் செலுத்துகைகள் மற்றும் இதர கொடுக்கல் வாங்கல்களை இவற்றினூடாக இலகுவாக மேற்கொள்ள முடியும்.  இந்த கிளை அங்குரார்ப்பணம் தொடர்பில் செலான் வங்கியின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரட்ன கருத்துத் தெரிவிக்கையில், யூனியன் பிளேஸ் பகுதியில், செலான் வங்கி கிளை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

இத்துடன், எமது சகல வாடிக்கையாளர்களுக்கும் செளகரியமான வங்கியியல் சேவைகளை அனுபவிக்க முடியும். வாடிக்கையாளர் செளகரியத்துக்கு நாம் முக்கியத்துவம் வழங்குவதுடன், எமது செயற்பாடுகள், ATM வலையமைப்புகள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் போன்றவற்றை தொடர்ந்து விஸ்தரிப்பதுடன், இலங்கையர்களுக்கு நவீன நிதியியல் தீர்வுகளை வழங்கி வலுவூட்டுவோம் என்றார்.   

Comments