சிறந்த முதலீடுகளுக்கு வாய்ப்பாக அமைந்துள்ள Capitol TwinPeaks | தினகரன் வாரமஞ்சரி

சிறந்த முதலீடுகளுக்கு வாய்ப்பாக அமைந்துள்ள Capitol TwinPeaks

Sanken Groupஇன் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஒரு அடுக்குமனை திட்டமான Capitol TwinPeaks, ‘வகுப்பு A’ குடியிருப்பு ஆதனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அடுக்குமனை கொழும்பு பேரவாவியின் முகப்பில் அமைந்துள்ளது. அதன் அமைவிடம், குறித்த காலத்தில் திட்டத்தை பூர்த்திசெய்திருப்பது, செயற்திட்டத்தின் தரம், முதலீட்டின் மீதான வருமான ஆய்வு போன்றவற்றின் காரணமாக இலங்கையில் அதிவேகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்ற அடுக்குமனைச் செயற்திட்டங்களில் ஒன்றாக இதுமாறியுள்ளது.  

முதலீட்டின் மீதான வருமானத்தை துரிதமாக ஈட்டிக்கொள்ளும் உத்தரவாதத்தைக் கொண்டுள்ள குடியிருப்பு செயற்திட்டங்கள், பொதுவாக A+ மற்றும் A வகுப்புக்களில் உள்ளடக்கப்படுவது வழமை. இந்த நிர்மாண செயற்திட்டங்கள் சந்தையில் அதியுயர் தரத்தின் அடையாளமாகத் திகழ்கின்றன. ‘வகுப்பு A’ கட்டடங்கள் முக்கியமான பிரதேசங்களில் அமைந்துள்ளதுடன், சிறந்த போக்குவரத்து வசதிகளுடன் தொழில்சார் ரீதியாக நிர்வகிக்கப்படுகின்றன. இதன் விளைவாக, குடியிருப்பாளர்களை இத்தகைய மாடி மனைத் திட்டங்கள் ஈர்க்கின்றன.  

Capitol TwinPeaksஇன் முகாமைத்துவப் பணிப்பாளரான றோஹண வன்னிகம இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “ஒவ்வொரு முதலீட்டாளரின் தேவையையும் ஈடுசெய்யும் வகையில் ஒரு பொருத்தமான குடியிருப்பு திட்டமாக Capitol TwinPeaks காணப்படுகின்றது என்று கூறினார்.

இது 38அடுக்குமனைகளைக் கொண்டுள்ளதுடன், பல்வேறுபட்ட வசதிகள் மற்றும் சேவைகளும் இங்கே கிடைக்கப்பெறுகின்றன. 50மாடிக்களைக் கொண்ட வானளாவிய இரட்டைக் கோபுரமாக தலைநிமிர்ந்து நிற்பதுடன், குறிப்பிட்டகாலத் திட்டத்திற்கு அமைவாக நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, 2020இல் இச்செயற்திட்டம் பூர்த்தியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தெற்காசியாவிலேயே அதியுயர் வான் பாலத்தைக் கொண்டுள்ளதுடன், அதன் முகப்பு பகுதி முழுவதும் கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. முதலீட்டிற்கான ஒருசிறந்த வாய்ப்பாக Capitol TwinPeaks மாறியுள்ளதுடன், பெரும் செல்வந்தர்கள், வெளிநாடுகளில் வதியும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் என பல்வேறு பிரபலங்களின் மனையாகவும் மாறிவருவதாக முகாமைத்து பணிப்பாளர் குறிப்பிடுகிறார்.  

இலங்கையில், குறிப்பாக கொழும்பின் ஆதன சந்தையில் ஏனைய ஆதன வகுப்புக்களை எடுத்துக் கொண்டால், ‘வகுப்பு B’ கட்டடங்கள் பொதுவாக பழமையான கட்டடங்களாக காணப்படுகின்றன.

உயர்தர முகாமைத்துவம் மற்றும் அதிகமாக செலவு செய்யும் திறன் கொண்ட குடியிருப்பாளர்கள் இங்கே வசிக்கின்றனர்.  

Comments