மாதவிலக்கு நின்ற பின்னரான காலத்தை ஆரோக்கியமாக கழிக்க உதவும் நவலோக மெனபோஸ் சென்டர் | தினகரன் வாரமஞ்சரி

மாதவிலக்கு நின்ற பின்னரான காலத்தை ஆரோக்கியமாக கழிக்க உதவும் நவலோக மெனபோஸ் சென்டர்

கிராமப்புறங்களில் வயதுக்கு வந்த பின்னரும் “வயதுக்கு“ வராத சிறுமியர்களைக் காண முடியும். பெரும்பாலும் சத்துணவு போதுமான அளவில் கிடைக்காதது அதற்கான காரணமாக இருக்கலாம். 16வயதான பின்னரும் பூப்பெய்திருக்க மாட்டார்கள். அத்தகைய சிறுமிகளை 'இருளி' என கேவலமான அடைமொழியால் அழைப்பார்கள். இப்போது கருவில் இருக்கும்போதும் சரி, வளரும் காலத்திலும் சரி மிகப் பெரும்பாலான சிறுமியருக்கு போதிய சத்துணவு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. 'இருளி'களின் எண்ணிக்கையும் குறைவு. 

பூப்பெய்துதல் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமானது. அதுவே அவளை முழுமையான ஒரு பெண்ணாக மாற்றுகிறது. பூப்பெய்தல் அவளுக்கு இளமைத் தோற்றத்தையும் ஆரோக்கியத்தையும் விரும்பத்தக்க மனவளர்ச்சியையும் சில நோய்களில் இருந்து காப்பரணாகவும் அது விளங்குகிறது. பெண் செய்யவெண்டிய மிக முக்கியமான கடமையான இனவிருத்தியை செய்வதற்கு பூப்பெய்தல் வாசல் கதவாக அமைகிறது. ஆனால் பூப்படைதலுடன் ஆரம்பமாகும் மாதவிடாய், அப்பெண் 45 - 48வயதாகும்போது முடிவுக்குவர பெண்கள் பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ஈஸ்ட்ரஜன் என்ற பெண்களுக்கான ஹோர்மோன் மாதவிடாய் நின்ற பின்னர் குறைவடைந்து விடுகிறது. அல்லது முற்றாக நின்று விடுகிறது. இது, பெண்களின் எலும்புகள் பலவீனமடையவும், கொலஸ்ட்ரோல் அதிகரிக்கவும் காரணமாகிறது. இதய குழாய் அடைப்புக்கு வழிவகுக்கிறது. உணர்வுகளின் சமநிலையற்ற தன்மை, பெண்ணுறுப்பில் மாற்றம், சிறுநீர்க்குழாயில் மாற்றம், இரவில் வியர்வை, தூக்கமின்மை, சோர்வு, தலையிடி, தசை மற்றும் மூட்டு வலி என மாதவிடாயின் பின்னரான காலத்தில் பெண்களை இம்சைக்குளாக்கும் சில உபாதைகளாகும். சில பெண்கள் தமது சூலகங்களை சத்திரசிகிச்சை மூலம் அகற்றிய பின்னர் உபாதைகள் மோசமானதாக இருக்க முடியும்.  

இந்த உபாதைகளையும், வலிகளையும், முறையான பராமரிப்பும் சிகிச்சையுமின்றி நீண்டகாலமாகவே பெண்கள் பொறுமையுடன் அனுபவித்து வந்துள்ளனர். இப்பெண்களுக்கு விடிவு தேடித்தரும் வகையில் நவலோக மருத்துவமனை மாதவிடாய் நின்ற பெண்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தியுள்ளது. நவலோக மெனபோஸ் சென்டர் என்ற இத்தனிப்பிரிவை கடந்த மாதம் 27ஆம் திகத புகழ்பெற்ற இலங்கை மகப்பேற்று மருத்துவரும், உயர் விருதுகளைப் பெற்றவருமான பேராசிரியர் சேர் சபாரட்னம் அருள்குமரன் வைபவ ரீதியாகத் திறந்துவைத்தார்.  

மாதவிடாய் காலத்தைக் கடந்த அல்லது கடந்து கொண்டிருக்கும் பெண்கள் இங்கே வந்து தமது பிரச்சினைகளை எடுத்துச்சொல்லி ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ளலாம். இப்பிரிவில் பயிற்சியும், தகைமையும், அனுபவமும் கொண்ட மருத்துவர்கள் கடமையாற்றுகின்றனர். தாதிமாரும் அப்படியே. மாதவிடாயின் பின்னர் பெண்கள் தமது வயோதிப காலத்தில் வலி வேதனை மேலும் நோய்களின் பாதிப்பில் இருந்தும் தம்மைக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த சிகிச்சைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக நவலோக நிர்வாகம் கூறுகிறது.   உலகின் சிறந்த மற்றும் நவீன தொழில்நுட்ப சாதனங்களைக் கொண்டிருக்கும். இப்பிரிவு வார நாட்களில் தினமும் காலை ஏழு மனி முதல் மாலை 5 மணிவரையும் உங்களுக்காகத் திறந்திருக்கும். மாதவிடாய் காலத்தின் பின்னரும் சகதேகிகளாக வாழ இந்நிலையம் உங்களுக்கு உதவும்.

Comments